உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, August 07, 2008

VOIP தந்திரம்

உலகத்தின் இருமூலைகளில் இருக்கும் இருகணிணிகள் - அவை இணையத்தில் இணைக்கப் பட்டிருந்தால் நாம் குரல்வழி எளிதாக இலவசமாக பேசிக்கொள்ள முடியும். இது நாம் யாவரும் அறிந்த பழைய தொழில்நுட்பமே. அந்த மாதிரியான வாய்ஸ் சாட்டுக்கு MSN Messenger, Yahoo Messenger ,Google Talk, ICQ, Skype முதலான மென்பொருள்கள் உதவுகின்றன. அப்படியே அது வழியாய் நாம் சர்வதேச இலவச கால்களும் செய்யலாம். ஆனால் என்ன இரு முனைகளிலும் கணிணி மற்றும் இணையம் உங்களுக்குத் தேவைப்படும். கணிணி பக்கத்திலேயே அமர்ந்திருக்க வேண்டும்.அது ஒரு தொல்லை.

இன்றைக்கு வெளிவரும் பெரும்பாலான கைத்தொலைப்பேசிகள் ஒரு குட்டி கணிணி போலவே செயல்படுகின்றன. அது வழியாய் இணையம் கூட மேயமுடிகின்றது. லாஸ்ஏஞ்சலசில் நான் எனது ஐபோன் வழி Yahoo Messenger-ல் நுழைய
லண்டனில் நண்பன் பாஸ்கர் அவனது N95 வழி Yahoo Messenger-ல் நுழைய இருவரும் மணிக்கணக்கில் voice chat-ல் பேசிக்கொண்டே இருக்கலாம். இது சர்வதேச அழைப்பாகாது. அதாவது இங்கு நாங்கள் பேசும் போது தொலைப்பேசி நுட்பத்தை (Air time) பயன்படுத்தவில்லை. மாறாக VOIP எனப்படும் இணைய வழி தொடர்பையே பயன்படுத்துகின்றோம். இது உங்கள் Data Plan மீட்டரை தான் கூட்டுமே தவிர தொலைப்பேசி பில்லை அல்ல. அதுவும் இங்கு அமெரிக்காவில் AT&T "unlimited" Data Plan-னை மாதம் $30க்கு தருகின்றார்கள். Data Plan கட்டண கவலையின்றி மணிக்கூர்கணக்கில் பேசிக்கொண்டே இருக்கலாம். ஒரு தகவலுக்கு எடுத்துக்கொண்டால் ஐபோன் வழி ஒருமணி நேரம் பேசினால் 8MB டேட்டா மட்டுமே டிரான்ஸ்பர் ஆகியிருக்குமாம்.

இணைய இணைப்புடன் கூடிய கைப்பேசி இந்தியாவில் உங்களிடம் இருந்தால் நீங்களும் இலவச சர்வதேச கால்கள் செய்யலாம். மறுமுனை நபரிடமும் இணைய இணைப்புடன் கூடிய கைப்பேசி இருக்கவேண்டும்.அது 3G, GPRS, WiFi அல்லது EDGE என எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

இது ஒரு அருமையான தந்திரம். சர்வதேச தொலைபேசி சேவை நிறுவனங்கள் பல போன் கார்டுகள் வழி கோடிகோடியாய் பணம் பார்த்துக்கொண்டிருக்கும் போது இதை எப்படி சம்மாளிக்கப்போகின்றார்கள் என தெரியவில்லை.

ஆ,மறந்து விட்டேனே.மேற்கண்ட தந்திரத்தை செய்ய உதவும் மென்பொருளின் பெயர் fring.
உங்கள் கைப்பேசிக்கான சரியான fring மென்பொருளை இலவசமாக இங்கிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம்.
http://www.fring.com/downloado/

தகவலுக்கு நன்றி: Manikandan R

ஏழாம் வகுப்பு அறிவுரை கதைகள் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. 7th standard Arivurai Kathaikal in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories6 comments:

Anonymous said...

Can we use this trick for Cellphone to PC ?

MyFriend said...

நான் fring ஒரு 10 மாதமாக உபயோகித்து வருகிறேன். நான் உபயோகிக்க ஆரம்பித்த ஆரம்பக்காலங்களில் இந்த அளவுக்கு சர்வீஸ் இல்ல. fring voice calls நல்ல clarity-உம் இல்ல. இப்ப நிறையவே improve ஆகியிருக்கு.

Skype out இஸ் பெஸ்ட் இன் fring. ஒரே நேரத்துல gtalk, yahoo, skype, msn-ன்னு எல்லாத்துலேயும் எங்கே இருந்தாலும் ஆன்லைன்ல இருப்பேன். 3G சர்வீஸ் யூஸ் பண்ணாலும் அதனுடைய charges குறைவுதான்.

இப்போ gmail notifier, twitter access எல்லாம் add பண்ணியிருக்காங்க. இதைப்பற்றி ரொம்ப நாளா எழுதணும்ன்னு நெனச்சிட்டு இருந்தேன். ஆனால் இன்னும் எழுதல. ;-)

Manikandan Ravi said...

நான் சொன்ன தகவலை பதித்ததற்கு நன்றி PKP அவர்களே ...

வடுவூர் குமார் said...

என்னிடம் 3G தொடர்பு இல்லாவிட்டாலும் சும்மாவேணும் கொடுத்து பார்த்தேன்,உடனே குறுஞ்செய்தி வந்திடுத்து.

Anonymous said...

Wi-FI iruntha athai use panni call pannalam thanee?

Anonymous said...

நல்ல பதிவு நண்பரே. தொழில்நுட்ப விடயங்களை மிக எளிய தமிழில் தருவது உங்களுக்கு கை வந்த கலை!!!!
நானும் VoIp பயன்கடுத்துகிறேன். நோக்கியா phone ல் SIP எனும் செட்டிங்ஸ் உள்ளது. Vbuzzer, voipcheap போன்றவர்களின் சேவையை பெறலாம். ஆனால் இவர்களுக்கு பணம் கட்ட வேண்டும்.
5 யுரோ கட்டி 1 மாதமாகிறது. இன்னும் முடியவில்லை. பல சமயம் இலவசமாகிவிடுவதால்.
இனி மொபைல் வாங்குபவர்கள் HSPA வசதியுள்ள மொபைல் வாங்குதல் நல்லது. ஏனென்றால் 1.8 - 3.6 Mbps வரை இணைய இணைப்பிற்கு சாத்தியமுண்டு. 3.5ஜியும் சூப்பராயிருக்கும். இதற்கான விலை மிகமிகமிக குறைவு.

சுபாஷ்

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்