கொலஸ்ட்ரால் பிரச்சனையும், பிளட் பிரஸர் பிரச்சனையும் ஐ.டி காரர்களுக்கேயான ஒரு பிரதான பிரச்சனை. போனமுறை மருத்துவரிடம் ஜெனரல் செக்கப் சென்றபோது கொலஸ்ட்ரால் கொஞ்சம் அதிகமாயிருக்கு சார், கொஞ்சம் வொர்க்அவுட் பண்ணுங்களேன்னு ஆலோசனை கொடுத்தார். இலங்கைத் தமிழர் அவர். மருத்துவம் படித்து அமெரிக்கா வரைக்கும் வந்து இங்குள்ள தொல்லைபிடித்த தேர்வுகளையெல்லாம் எழுதி பாஸ்செய்து மருத்துவராகி இருக்கின்றார். இப்படி நம்மிடையேயிருந்து இங்கு வந்து சாதித்த சாதாரணமானவர்கள் இங்கு அநேகம். கேட்டால் தோல்வியில் துவண்டுவிடாமல் வாய்ப்புக்காக எப்போதும் விழித்தே இருக்கவேண்டும் என்பார்.
கொலஸ்ட்ரால் பிரச்சனையை சமாளிக்க ஓட்ஸ் சீரியலுக்கும் ஆலிவ் எண்ணைக்கும் தற்காலிகமாக மாறியிருக்கின்றேன்.
சர்க்கரையிலிருந்து இன்னும் கொஞ்சநாட்கள்கூட தப்பித்திருக்கலாமென யாரோ ஐடியா சொன்னதால் இரவு சாதம் சாப்பிடுவதை நிறுத்தியாயிற்று. ரொட்டி, சப்பாத்தி இல்லையென்றால் கோதுமை நூடுல்ஸ்.
தினமும் ஒரு ஆப்பிளும் வாழைப்பழமும் சாப்பிடுவது கூட நல்லதாம்.
காலையில் வெறும் வயிற்றில் நிறைய தண்ணீரும் முக்கியம்.
இப்போது சம்மர். இருள்வர ஒன்பது மணியாகின்றது. அதனால் மாலையில் கும்பலாய் கிரிக்கெட் ஆட முடிகின்றது. வேர்க்க வேர்க்க பூங்காவில் நடக்க முடிகின்றது. ஆனாலும் எவன் துப்பாகிவைத்திருப்பானோ என்ற பயமும் உண்டு. குளிரத் தொடங்கியவுடன் ஜிம் கண்டிப்பாக செல்லவேண்டும்.
சில மென்பொருள் எஞ்சினியர்களுக்கு நேர்ந்த சம்பவங்கள் ஏனோ இங்கு நினைவுக்கு வந்து தொலைக்கின்றது. அபசமாய் இங்கு நான் சொல்ல விரும்பவில்லை.
ஆமாங்க இந்த டிவியும் கம்ப்யூட்டரும் நம்மை மெல்ல மெல்லக் கொல்கின்றதாம். வியர்வை வெளியேறுவதில்லையே தவிர மூளை கன்னாபின்னாவென உழைக்கின்றதே. அதிலும் சவாலான வேலை வந்துவிட்டால் நேரம் காலம் பார்க்காமல் தொடர்ச்சியாய் நம் மூளையை இயக்குகின்றோம். நம்மில் அநேகம் பேருக்கு அங்கு சம்பளம் தெரிவதில்லை சவால் தான் கண்முன்னே தெரியும். அதனால் தானே நம் ஆட்கள் அதில் நம்பர் ஒண்ணாய் இருக்கின்றார்கள்.
ஐ.டியிலிருந்து சம்பந்தம் வருகிறது என்றாலே நம்மூர் பெண்கள் அலறுகின்றார்களாம்.இது சாப்ட்வேர்காரர்கள் எதிர்நோக்கும் இன்னொரு பிரச்சனை.கம்யூட்டரே கதியென கிடப்பானாம் அவன்.
கணவனும் மனைவியும் ஐ.டியிலேயே இருந்தால் சப்தமும் இருக்காது சண்டையும் இருக்காது. ஆளுக்கொரு லேப்டாப்பில் மூழ்கிவிடுவார்கள்.Google talk-ல் Goodnight சொல்லிக்கொள்வார்கள்.
மாதம் ஒருமுறை வழக்கமாய் அலுவலகம் வந்து உட்காரும் அந்த செவிலியம்மா போன வாரம் வந்திருந்தார்கள். அப்படியே ஒரு ஓரத்தில் அமர்ந்து ஆர்வமுள்ளோருக்கு பிளட் பிரசர் செக் செய்வது அவர்கள் வழக்கம். எனது கையை பிடித்து ஒரு பம்பை அழுத்தி சோதித்து little above normal என்றார்கள். "ரொம்ப டென்சன் ஆகாதீங்க, ரொம்ப யோசிக்காதீங்க, நல்லா தூங்குங்கனு" அறிவுரை கொடுத்தார்கள்.
கோபாலும் அதை ஆமோதித்து "ம்" கொட்டினான்.
"ரொம்ப பதிவுகள் எழுதி உடம்பை கெடுத்துக்காத" என்றான்.
அமரர் கல்கியின் படைப்பு மோகினித்தீவு இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Kalki Mohini Theevu in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Download this post as PDF
6 comments:
அதெப்படி,
பிகேபி பதிவுகளை படிக்க தினமும்
காத்திருக்கும் என்னைப் போன்ற வாசகர்களை தவிக்க விடுறது மட்டும் நியாயமா?
வெல்கம் டு தி க்ளப்! உடம்பைப் பார்த்துக்குங்க! :)
Related Posts : IT Bodies.
You can visit these pages also..
மாரடைப்பு - தடுப்பு முறைகள்
ஆறு சுவைகளும் அவற்றின் பலன்களும் (படங்களுடன்)
ஓட்ஸ் - சமையல் செய்முறைகள்
உணவு வழிகாட்டி கூர்நுனிக்கோபுரம் (Food Guide Pyramid)
Google talk-ல் Goodnight சொல்லிக்கொள்வார்கள்!
முடியல அழுதுடுவன்
அன்பின் பிகேபி:
கேலரி கணக்கு பார்த்து சாப்பிட்டால்
சாதம் சப்பாத்தி தோசை நூடுல்ஸ் என்ன வேணுமானாலும் சாப்பிடலாம்.
ஓடியாடி வேலை செய்யறவருக்கு 2000
கேலரி வேண்டும். நாள் பூரா
கணினி எதிரே உட்கார்ந்து வேலை செய்யும் ஒரு சராசரி ஆளுக்கு 1500
கேலரி போதும்.
மாதிரி மெனு:
காலை : ஒரு இட்லி அல்லது ஒரு ரொட்டி, ஒரு கப் காப்பி அல்லது டீ
மதியம் : ஒரு கப் சாதம், அரை கப் சாம்பார், அரை கப் ரசம் அல்லது மோர், ஒரு கப் வேகவைத்த கறிகாய்
இரவு: இரு சப்பாத்தி, ஒரு கப் பருப்பு
அல்லது கூட்டு, ஒரு கப் பால்
நடுவில் பசித்தால் ஒரு காரட், வெள்ளரிக்காய் திங்கலாம். சிப்ஸ்,
பாப்கார்ன், வேர்க்கடலை , வெங்காய பஜ்ஜி எல்லாம் கட்.
நிறைய தண்ணீர் (8 கிளாஸ்) குடிக்க வேண்டும்.
டீ, காப்பி குடிக்கத் தோன்றினால்
வென்னீர் குடிக்கலாம்.
இது கிட்டத்தட்ட 1200 கேலரி அளவு இருக்கும். இப்படியே சாப்பிட்டால்
ஒரு மாதத்துக்கு 2 கிலோ எடை குறைய வாய்ப்புண்டு.
இரண்டுதான் தின்னேன் சார் என்று இரண்டு அடி விட்டத்துக்கு சப்பாத்தி பண்ணி வெட்டக்கூடாது. கப் என்றால்
150 மில்லி கப், பரிசுக்கோப்பை சைஸ்
கப் அல்ல. கறிகாய் கூட்டு தண்ணீரில் வெந்தது, எண்ணையில் வதக்கியது அல்ல.
முயற்சி பண்ணிப் பாருங்கள்.
அதற்க்காகத்தான் இந்த பதிவில் அறிவுரை
Post a Comment