உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, June 30, 2010

சுவைத்துப் பார்

னது பழைய பதிவுகளையெல்லாம் எளிதாய் பார்வையிட ஒரு குறுவழி எனச்சொல்லி அனானியாய் வந்த நண்பர் ஒருவர் ஒரு யோசனை சொல்லியிருந்தார். அது நன்றாக படவே ”பிகேபி பதிவுகள் பெட்டகம்” எனும் சுட்டி உருவானது. நீங்கள் மேலே சொடுக்கி உலாவிப் பார்க்கலாம்.

செம்மொழிமாநாடு முடிந்த வேகத்தில் தமிழில் டொமைன் பெயர் சீக்கிரத்தில் வைத்துக்கொள்ள முடியும் என்ற நல்ல செய்தி வந்துள்ளது. இதை Icann சொல்வதாக பிபிசி சொன்னது. அப்போது ”பிகேபி.இன்” என நீங்கள் நேரடியாகவே பிரவுசரில் தமிழில் தட்டி என் வலைத்தளம் வரலாம்.

ட்டாயம் சுவைத்துப் பார் எனச்சொல்லி வந்த அந்த இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டில் விசேசமென சொல்லி ஆப்பம், தோசை, இட்டி, சாம்பார், இரசம், செட்டிநாடு கோழி, பொங்கல் என இட்டிருந்தார்கள். மலையாள அவியலும், ஆந்திர பிரியாணியும் மிஸ்ஸாகாதது அந்த வரைபடத்தில் ஒருவித நம்பகத்தை தந்தது. அப்படியே மலேசிய பரோட்டா, சிங்கப்பூர் நூடுல்ஸ், அராபிய சோர்மா, துபாய் பலாபல் என உலக வரைபடம் யாராவது வரைந்து தந்தால் நன்றாயிருக்கும்.
படத்தை சொடுக்கி பெரிதுபடுத்தியும் பார்க்கலாம்.

எவ்வளவு தான் பந்த பாசமானாலும் இடையில் ஒரு வேலி மெலிசா இருந்துகிட்டே இருக்கணும்.


காஞ்சனா ஜெயதிலகர் ”மன்னிக்க வேண்டுகிறேன்...!”


Email PostDownload this post as PDF

Friday, June 25, 2010

ஒரே ஒரு டிகிரி

இப்போதெல்லாம் ரொம்ப எழுத முடிகிறதில்லை. டூ பிசினு ஒரேயடியாக சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றேன். வாரம் ஒரு இடுகையாவது இட ஆசைப் பட்டாலும் மாதம் ஒன்று தான் இட முடிகின்றது. டிவிட்டர் மாதிரி குறுகத்தரித்த இடுகைகளை இடலாமேவென கோபால் யோசனை சொல்லியிருந்தான். அவன் புதிதாக வாங்கியிருக்கும் ஐபேட் நன்றாக இருக்கின்றது. பார்க்கின்றவர்களெல்லாம் நாமும் ஒன்று வாங்கினால் நன்றாய் இருக்குமே என யோசிக்க வைத்துவிடுகின்றது. இரண்டு நொடிகளுக்கு ஒன்று வீதம் விற்கின்றார்களாம். புதுப்படம் ரிலீசுக்கு நம்மூரில் கட்டவுட் வைத்து பட்டாசு கொளுத்துவார்களே, அது போல ஆப்பிள் தயாரிப்புகள் ரிலீசுக்கு பைத்தியம் பிடித்தவர்கள் போல கடை நடையில் வரிசையில் நிற்பவர்களை பார்க்கும் போது நெருடலாய் இருக்கின்றது. எல்லா ஊர்களிலும் “விசிறி” என்று வந்துவிட்டால் ஒன்று போலத்தான் இருப்பார்கள் போலிருக்கின்றது. இன்னொரு போன் வாங்கினால் அது டிராய்ட் போன் தான் வாங்கப் போவதாக கோபால் கூறினான். எனக்கும் அந்த முடிவு நன்றாக தெரிந்தது. பிளாஷ் சப்போட்டும் அதில் இப்போது வந்திருக்கின்றதாம்.

இவ்வளவு சுதந்திரமாக இணையத்தில் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் எழுதப்போகின்றோமோ தெரியவில்லை. நான் நாலு வயதாய் இருந்த போது மிதிவண்டிக்குக்கூட லைசென்ஸ் வைத்திருந்தார்கள், ஏன் வானொலி வைத்திருக்க கூட லைசென்ஸ் வைத்திருக்க வேண்டுமாம். இனிமேல் இணையத்தில் எதாவது எழுதவும் தனியாக லைசென்ஸ் வைத்திருக்க வேண்டுமென சட்டம் கொண்டு வந்தாலும் வருவார்கள். இங்கு எல்லாமே சாத்தியம். net neutrality இப்படித்தான் போகும்.

கார்ப்பரேட் கதைகளை நேகா உற்சாகத்தோடு கூறுவதுண்டு. 211 டிகிரியில் தண்ணீர் சூடாக இருக்குமாம். 212 டிகிரியானால் அது ஆவியாகத்தொடங்கிவிடும். அந்த ஒரு டிகிரிக்கு மட்டும் எத்தனை சக்தினு பார். ரயில் வண்டியையே அதனால் இழுத்துச் செல்லமுடியும். அதனால் இன்னும் ஒரே ஒரு டிகிரி மட்டும் ஏறிப்பாரேன்னு உற்சாகத்தோடு கூறுவாள். தூங்கி கிடந்தவனை கிள்ளி எழுப்பி விட்டது போல இருக்கும். நேற்றைக்கு கூட சோனி வையோ லோகோவில் ஒளிந்திருக்கும் அர்த்தத்தை சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. வையோவின் முதல் இரண்டெழுத்துக்களும் அலைபோல அமைந்து அனலாகை குறிப்பிடுவதாகவும் கடைசி இரண்டு எழுத்துக்களும் 1,0 போல அமைந்து டிஜிட்டலை குறிப்பிடுவதாகவும் குறிப்பிட்டாள். எங்கிருந்து பிடிக்கிறாளோ தெரியாது.

மறந்து போகும் முன்னால் http://desimusicapp.com பற்றி கூறிவிடுகின்றேன். ஐபோன், ஐபேட் வைத்திருப்பவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பாடல்கள் கேட்க நல்ல ஐபோன் ஆப்களை கொடுத்திருக்கின்றார்கள், லேட்டஸ்ட் முதல் பழைய பாடல்கள் வரை அழகாக வரிசைப்படுத்தி கொடுத்திருக்கின்றார்கள். எல்லாப் பாடல்களும் ஒரு தொடு எட்டில். இலவசமாக கிடைக்கும் போதே இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு முறை சந்திக்கலாம்.


Email PostDownload this post as PDF

Wednesday, June 09, 2010

கேட்காத சப்தங்கள்

பூ பூக்கும் அந்த நொடியில் பலமான ஓசை எழுவதுண்டாம். எங்கோ படித்த நியாபகம். ஆனால் நம்மால் தான் அதை கேட்க முடிவதில்லை. காரணம் நம் காதுகளால் அந்த அலைவரிசை கூடின ஒலி அலைகளை கிரகிக்க முடிவதில்லை. பொதுவாக 20 Hz முதல் 20 kHz வரையேயான ஒலிகளையே நம் சாதாரண காதுகளால் கேட்க முடியும். அதனால் பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை என எதுகை மோனையோடு பாடி விட்டு அமைதியாகி விடவேண்டியது தான்.

சிறுசுகளுக்கும் பொடிசுகளுக்கும் கேட்கும் சத்தங்கள் கூட நம்மைப் போன்ற முப்பது அல்லது நாற்பது வயதான பெரியவர்களுக்கு கேட்பதில்லை. உதாரணத்துக்கு 15kHzக்கும் மேல் வரும் சத்தத்தை 25 வயதுக்கு மேற்பட்டவர்களால் கேட்க முடியாதாம். கீழ்கண்ட MP3-யை ஓட்டிப் பாருங்கள் (எச்சரிக்கை:மிக அதிக ஓசை எழுப்பும் கிளிப் இது)

Teenager Tone Mp3 Clip

உங்கள் காதுகளில் எதாவது கேட்டால் நீங்கள் 25வயதுக்கும் கீழ்பட்டவர் என அர்த்தம். எதுவும் கேட்காவிட்டால் உங்களுக்கு வயதாகிவிட்டது என அர்த்தம். வகுப்பறையில் ஆசிரியர் காதுகளில் கேட்காமல் ஆனால் தங்களுக்கு மட்டும் கேட்கும் படியான ரிங்டோன் வைக்க தங்கள் கைப்பேசிகளில் பதின்மர்கள் நாடும் MP3 இது. இதையே எதிர்மாறாக பதின்மர்கள் உங்கள் அறையில் நுழைந்து தொல்லை செய்யாதிருக்க இக்கிளிப்பை தொடர்ந்து ஓடவிட்டுக் கொண்டிருக்கலாம். எரிச்சலூட்டும் இந்த ஒலியை கேட்டு சிறுவர்கள் உங்களை நெருங்கவே மாட்டார்கள். நீங்களோ நிம்மதியாக உக்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பீர்கள்.

கீழே வெவ்வேறு அலைவரிசைகளில், வெவ்வேறு கிளிப்கள். எந்த அலைவரிசை வரை உங்களால் கேட்கின்றதுவென பாருங்கள்.என்னால் 14 kHz-யை தாண்டமுடியவில்லை. வயசாகிவிட்டது.

மீண்டும் சந்திப்போம்.


Email PostDownload this post as PDF

Tuesday, May 04, 2010

பிரவுசர்களின் வேகம்

பல்வேறு இணைய பிரவுசர்களின் வேகத்தை இங்கே எல்லாருக்கும் புரியும் படியாய் படமாக்கி காட்டியிருக்கின்றார்கள்.

IE-யின் மார்க்கெட் சரிந்து கொண்டிருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.இது ஏப்ரல் 2010 நிலவரம். மூலம்:NetApplications.

ஆப்பிளின் பெருந்தன்மையால்(?) ஐபோனின் புதிய பிரவுசரான Opera Mini வழி தமிழ் தளங்களை சரியாக பார்க்கமுடிகின்றது. டிவிஎஸ்-சுக்கு நன்றி. இதுதான் அந்த டெக்னிக்.

1. ஐபோனில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
2. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
3. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும். தமிழ் நன்றாக தெரியும்.
ஆனாலும் என்னமோ என்னை பெரிதாக கவரவில்லை.
Opera-வின் ஐபேட் வெர்சனுக்கு காத்திருக்கின்றேன்.
நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் தமிழ் நன்றாக தெரிய Skyfire பயன்படுத்தவும்.

அப்பன் தெய்வம்,
அம்மை தேசம்
தந்தை தான் தெய்வம்,
தாய் தான் நாடு







காசி ஆனந்தன் “நறுக்குகள்” மென்புத்தகம். "Narukkugal" Kasi Aananthan Tamil ebook Pdf Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Monday, April 12, 2010

எங்கெங்கும் அர்த்தங்கள்

தமிழிலேயே பல வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் நமக்குத் தெரிவதில்லை. ”இலமே” என்ற வார்த்தைக்கான பொருளை சில நாட்களுக்கு முன்பாகத் தேடிக் கொண்டிருந்தேன். கூடுதலாக ஒரு காலை சேர்த்துவிட்டால் வார்த்தையின் பொருள் எப்படி மாறிவிடுகின்றது பாருங்கள். மக்களையும் மாக்களையும் சொன்னேன். மாக்கள் என்றால் கால்நடை மிருகங்களென்று அர்த்தமாம். இப்படியிருக்க ஆங்கில சொற்களுக்கான அர்த்தம் மட்டும் சொல்ல வேண்டுமாக்கும். தினமும் அர்த்தம் தெரியாத litigation, mitigation போன்ற ஆங்கில வார்த்தைகள் நமக்குமுன் வந்து போய்கொண்டிருக்கின்றன. bmimthiyas என்ற நண்பர் அறிமுகம் செய்து வைத்த WordWeb என்ற சிறிய மென்பொருள் இப்போது எனக்கு மிகவும் பிடித்துப் போன ஒன்று. எந்த ஆங்கில வார்த்தையின் மீதும், எந்த அப்ளிகேசனிலிருந்தும், ctrl+rightclick செய்தால் அந்த வார்த்தைக்கான பொருளை இந்த மென்பொருள் அருமையாக மிக விளக்கமாக கொட்டி விடுகின்றது. நோட்பேடில் கூட ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தங்களை நாம் கண்டறியலாம். என்னைப்போன்ற ஆங்கிலம் அவ்வளவாக தெரியாத நண்பர்களுக்கு மிகவும் பயனாகும் இலவச மென்பொருள் இது.
http://wordweb.info/free/


ஒரு வெள்ளாட்டை முன்னால் இருந்தும்
குதிரையை பின்னால் இருந்தும்
முட்டாளை எந்த பக்கத்திலிருந்தும் நெருங்க வேண்டாம்.










“காந்தி தரிசனம்” தமிழில் எஸ்.பொ மென்புத்தகம். "Gandhi Tharisanam" Espo Tamil ebook Pdf Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்