May 15, 2004-ல் என்னுடைய "கேட்டான் பாரு ஒரு கேள்வி"-யாக கீழ்கண்டபடிஎழுதியிருந்தேன்.
//இணயத்தில் தமிழ் வலைப்பதிவுகள் நாளொரு வண்ணமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறன.எனக்கு தெரிந்து இரு இடங்களில் Tamil Bloggers List உள்ளது.அனைத்து வலைப்பதிவுகளையும் மேயும் போது சில வலைப்பதிவுகள் பல மாதமாக செயலற்று இருக்கின்றன.சில சோதனை பக்கமோடு நின்று விட்டன.என்னோட கேள்வி .Active Blogs மற்றும் New Blogs- என்று எங்காவது list உள்ளதா.அல்லது இதற்க்கு ஏதாவது வேறுவழி உள்ளதா செயலற்ற பக்கங்களுக்கு அடிக்கடி போய் நேரம் வீணாகிறது என நினைகிறேன்.நீங்க எப்படி சம்மாளிக்கிறீங்க.? //
சில காலத்தில் இதற்கு விடையாக தமிழ்மணமும் தேன்கூடும் இன்னும் பல ரீடர்களும் அமைந்தன.மகிழ்ச்சி.
இப்போது இன்னொரு கேள்வி.
பெரும்பாலான நமது பதிவுகள் seasonal-ஆக இருந்தாலும் அநேக பதிவுகள் எப்போதும் படிக்கும் படியான கட்டுரைகளாகவோ அல்லது தகவல்களாகவோ அமைந்து விடுவது உண்டு.அப்படியான பதிவுகள் இன்றைய நிலையில் எனக்கு தெரிந்து சில காலங்களில் சேமிப்பு கிடங்குக்கு சென்று விடுகின்றன.புதிதாக தகவல் தேடிவருவோருக்கு அது உதவுவது கடினம்.
ஆங்காங்கே பல வலைப்பூ கிடங்குகளில் கிடக்கும் குறிப்பிட்ட பதிவுகளை ஒரு காட்சியகத்தில் வைக்க வழி உண்டா?.தொழில் நுட்பம் உள்ளதா? டாகிங்,காட்டகிரி,கில்லி எல்லாம் இதைத்தான் செய்கிறதா?.சிறுகேள்வி.கேட்டு பார்க்கலாம் என்று தோன்றியது.
அப்டேட்:
வெங்கடரமணியின் "Archive Browser for Blogger blogs" என்ற புராஜெக்ட் பற்றிய தகவல் இங்கே. இந்த உலாவி எந்த அளவுக்கு உதவுகின்றது,முழு வலைபதிவையும் அல்லாமல் தனி பதிவை மட்டும் சேமிக்கமுடியுமா என இன்னும் முயன்று பார்க்கவில்லை.எனினும் ரமணியின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
http://www.anniyalogam.com/scripts/browser.php
Download this post as PDF