கடன் அட்டையை தேய்த்து தேய்த்து நீங்கள் பொருள் நுகர்வோராயின் நினைவில் கொள்ள சிறு குறிப்பு இங்கே.கடன் அட்டையால் பொருள் வாங்கும் போது பொருளின் விலையை தவிர வேறு என்ன அதிகமாய் செலவு வர வாய்ப்புக்கள்???
1. Annual fee எனப்படும் வருடாந்திர கட்டணம்
இது எல்லா கடன் அட்டைகளுக்கும் பொருந்துவதில்லை.சில கடன் அட்டைகள் வருடாந்திர கட்டணம் வசூலிக்கப்பதில்லை.சில அட்டைகள் membership program- rewards- rebates-points towards merchandise or travel என்பார்கள்.கவனம் தேவை.வருட இறுதியில் membership fee என அதற்கெல்லாம் வசூலித்துவிடுவார்கள்.
2.Interest rate எனப்படும் வட்டிவிகிதம்
ஒவ்வொரு மாதமும் நீங்கள் கடன் வாங்கிய மொத்த பணத்தையும் நீங்கள் திருப்பி செலுத்தாவிட்டால் கடன் அட்டை நிறுவனத்துக்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதம் பணத்தை செலுத்த வேண்டி வரும்.இந்த விகிதம் அட்டைக்கு அட்டை வேறுபடும்.
3.Late fee எனப்படும் தாமத கட்டணம்
அந்தந்த மாதம் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை செலுத்தாவிட்டால் Late fee எனப்படும் இந்த தாமத கட்டணம் தானாக வந்துவிடும்.
4.Cash advance fee எனப்படும் முன்பணக் கட்டணம்.
கடன் அட்டை வைத்து தானியங்கி பணம் வழங்கிகளிலும்(அதாங்க ATM) பணம் எடுக்கலாம்.
ஆனால் இது ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டிய அணுகுமுறை.ஏனென்றால் இதற்கு நீங்கள் செலுத்தும் விலை அதிகமாயிருக்கும்.ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.மட்டுமின்றி எடுக்கப்பட்ட பணத்திற்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதம் மிக அதிகமாக இருக்கும்.
அவ்ளோதான்.இவ்வளவும் தெரிந்து உஷாராய் கடன் அட்டையை பயன் படுத்தினால் கடன் அட்டை ஒரு தொல்லையாய் இருக்காது.
வகை:பொது அறிவு
Download this post as PDF
No comments:
Post a Comment