கூகிளின் சமீபத்திய பீட்டா வெளியீடான கூகிள் எர்த் 4 (Google Earth Release 4 - BETA) எனப்படும் மென்படைப்பு முன்னைய வெளியீட்டிலிருந்து தரம் உயர்த்தி சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது.குறிப்பாக இந்திய சேட்டலைட் மேப்புகள் ஓரளவு தெளிவாக இருக்கினறன.சென்னை மேம்பாலங்கள்,சமாதிகள்,பனகல் பார்க் மற்றும் அனைத்து முக்கிய இடங்களும் தெளிவாக தெரிகின்றன.இம்மென்பொருள் வழி சென்னை மட்டுமின்றி அனைத்து நகரங்களையும்,ஊர்களையும் ஏன் உங்கள் வீட்டைக்கூட சேட்டலைட் பார்வை பார்க்கலாம் .கொஞ்சம் பொறுமை வேண்டும் அவ்வளவு தான்.இதோ பக்கத்தில் சென்னை ஜெமினி மேம்பால சேட்டலைட் பார்வை உங்களுக்காக.கீழே கொடுக்கப்பட்ட சுட்டியை சொடுக்கி இலவச இம்மென்பொருளை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவி பாருங்கள்.
http://earth.google.com/earth4.html
வகை:சலோ இந்தியா
வகை:தமிழ்நாடு
வகை:இலவச சேவைகள்
Download this post as PDF
5 comments:
இதற்கு முந்தைய கூகுள் எர்த்தில் இந்தியா ,சென்னை எல்லாம் தெளிவாகவே எதும் இல்லை பெரும்பாலும் கண்ணில் சீயக்காய்தூள் விழுந்தால் போல இமேஜ் தெரிந்தது இப்போது எப்படி இருக்குனு பார்ப்போம்! இது இல்லாமல் எம்.ஸ்.என்,அப்புறம் நாசா எர்த் விஷன் புரோ என்றெல்லாம் மென்பொருள் உள்ளது எல்லாவற்றிலும் இந்தியா தெளிவாக கிடைக்கவில்லை!
நான் சென்னையில் தங்கியிருந்த வீட்டைப் பார்த்துவிட்டேன்.
ராமநாதபுரதில் என் வீட்டையும் பார்த்துவிட்டேன்
வவ்வால்..நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் இந்த பதிப்பில் சிறிது முன்னேற்றம் தெரிகிறது.போக போக சரியாகிவிடும் போலும்.
மகேஸ்...கலக்குறீங்க.அதுக்குள்ள ராமநாதபுரம் வரைக்கும் போய்டீங்களா!!!!வாவ்.
Post a Comment