ஒரு காலத்தில் கடவுளின் செயலாய் கருதப்பட்டவையெல்லாம் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் இன்று சர்வ சாதாரணமாகி வருகின்றன. உதாரணமாய் அம்மைபோடுதல் முதலான நோய்கள் அப்போது கடவுளின் செயலாக கருதப்பட்டது.இன்று விஞ்ஞானம் அதற்கு வித்தியாசமான விளக்கம் அளித்து மருந்தும் தருகின்றது.
இன்னொரு உதாரணம்.50 வருடங்களுக்கு முன்போர் அதிகாலையில் ஒரு கிராமத்தான் வீட்டுக்கு வெளியே வந்து வானத்தை அண்ணாந்து பார்க்கின்றான் என வைத்துக்கொள்வோம்.வானில் என்னமோ ஒரு வார்த்தை எழுதப்பட்டிருக்கின்றது.அவ்வளவுதான் அது தெய்வ செயலாய் தெரிந்திருக்கும்.ஊரே அலறியிருக்கும்.வேற்றுகிரக வாழ் ஏலியனின் சதியோவென பயந்திருக்கும்.
இன்று அது எளிதாய் சாத்தியமாகின்றது.SKYWRITING அல்லது SKYTYPING என்கின்றார்கள்.வானில் ஏதோ எழுதியிருக்க சர்வ சாதாரணமாய் அதை பார்த்துக்கொண்டே நிலக்கடலை கொரிக்கின்றோம்.
வானத்தையும் விளம்பரத்துக்கு வசதியாய் வசப்படுத்திக்கொண்டு வருகின்றான் மனிதன். "Stick no bills"-னு கடவுள் தான் தன் சுவற்றை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
ஆக கைக்கு எட்ட எட்ட அதை விஞ்ஞானம் என்போம். கைகெட்டாததை கடவுளாக்கிவிடுவோம். அப்போதான் நமக்கும் நிம்மதி.
More details
http://www.sky-writing.com
