பொருளாதார பாடத்தில் அவ்வளவாய் ஆர்வம் இல்லாதவர்களையும் ஆர்வமூட்டி விடும் வகையிலிருக்கின்றது இன்றைய உலக பொருளாதார நிலவரம். என்னமோ சென்செக்ஸ் ஏறுது ஏறுது என்கின்றார்கள். கூடவே தங்கம் விலையும் கச்சா எண்ணெய் விலையும் கிடு கிடு வென ஏறுது. அமெரிக்க டாலரும் அதை சார்ந்த கரன்சிகளும் விடாமல் சரிந்து கொண்டே இருக்க, பங்கு சந்தை உபயத்தால் பணம் குவிக்கும் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி தான் ஒன்றும் உலக முதல் பணக்காரர் இல்லை என மறுக்க சுவாரஸ்யமாய் போய்கொண்டிருக்கிறது உலக எக்கனாமிக்ஸ். இந்திய பணம் மதிப்பு பலமாக பலமாக அது துபாய் கட்டுமான பணியாளர்கள் கையையும் கடிப்பதால் அவர்களும் வீதிக்கு வந்து போராட வேண்டிவந்துவிட்டது.
அமெரிக்க டாலர் மதிப்பு சரிய சரிய கனடியன் டாலர் மதிப்பு உயர உயர வீக்கெண்டுகளில் கனடியன் கார்கள் அமெரிக்கா வருகின்றனவாம் சாப்பிங் செய்ய. அவர்களுக்கு அமெரிக்காவில் பொருள்கள் சீப்பாய் கிடைக்கின்றன. பொருள்கள் மட்டுமல்ல அனைத்து வகையறாக்களும் மதிப்புகுறைந்து விட்டன. உதாரணமாய் கனடாவின் Toronto-Dominion Bank அமெரிக்காவின் Commerce Bancorp -யை வாங்கப்போகின்றது சீப்பாக. எப்படி? 2006-ல் வாங்கப்பட்டிருந்தால் 9.5 பில்லியன் கனடியன் டாலர்கள் அது அமெரிக்காவுக்கு கொடுத்திருக்க வேண்டும்.ஆனால் இப்போ அமெரிக்க டாலர் சரிந்ததால் 8.5 பில்லியன் கனடியன் டாலர்கள் கொடுத்தால் போதும். 1 பில்லியன் கனடியன் டாலர்கள் லாபம். இப்படி அமெரிக்க நிறுவனங்கள் பல அவசர அவசரமாய் சமயம் பார்த்து உலக நாடுகளால் சீப்பாய் வாங்கப்படுகின்றன. கூடவே அந்நிறுவனத்தின் பணம் காய்கும் பேடன்ட்களும். அமெரிக்கா முழுவதும் 2 மில்லியன் வீடுகள் காலியாய் கிடக்கின்றன வாங்க யாருமின்றி.
டாலர் சரிவால் மொத்த அமெரிக்காவும் விற்பனைக்கு இருக்கின்றது சீப்பாக. யாரெல்லாம் சமயத்தை பயன் படுத்தி கொள்ளப்போகிறார்களோ தெரியவில்லை. ரொம்பபேர் டாலர்களை தங்கமாக மாற்றிக்கொண்டிருக்க உலக பணக்காரர் வாரன் பப்பெட்டும் தன் டாலர் கரன்சிகளையெல்லாம் வேறு கரன்சிக்கு மாற்றிவிட்டதாக ரேடியோவில் சொன்னார்கள். நெசமாவா தாத்தா?
"குழந்தைகள் பாடல்கள்" தமிழில் நர்சரி மழலையர் ரைம்ஸ் மென்புத்தகம் Nursery rhymes for kids in Tamil song e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/agyojotnizk2l.pdf
Download this post as PDF