உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Sunday, September 07, 2008

மிரட்டுவது பெயர்கள்

HTML மொழியின் சாதாரண கட்டளைகள் கூட தெரியாமல் இன்றைக்கு நம்மால் உயர்ரக வலைத்தளங்கள் சொந்தமாய் வைத்துக்கொள்ள முடிகின்றது. ப்ராண்ட் பேஜ், டிரீம்வீவர் வைத்து கிளிக்கி கிளிக்கியே சாமானியர்கள் வலைப் பக்கங்களை படைக்கலாம். HTML tags பற்றி கேள்விபட்டிருக்க வேண்டியது கூட தேவையில்லை. இப்படி ஒரு புரோகிராமிங் லாங்க்வேஜும் தெரியாமல் வெப்பக்கங்கள் படைக்க அதுவும் டேட்டாபேஸ் இணைப்போடு கூடிய பிலாகையும் தாண்டி, கொஞ்சம் அதிகமாய் முழுசாய் தனிநபர் அல்லது குறுநிறுவன போர்ட்டல்கள் அமைக்க அநேக ஒருசொடுக்கு மென்பொட்டலங்கள் இணையத்தில் இன்றைக்கு இலவசமாய் கிடைக்கின்றன. என்ன,பெயரைக் கேட்டதும் அட என்னமோ ஏதோவென பயந்துவிடக்கூடாது. அதுதான் இங்கு முக்கியம்.

Drupal என்றதும் என்னமோ அது ஒரு உச்சகட்ட தொழில்நுட்பமென நீங்கள் பயந்தால் போச்சு.அது இதுமாதிரி ஒரு இலவச மென்பொட்டலம் தான். இதனைக் கொண்டு ஒரு சொடுக்கில் அருமையான பெர்சனல் அல்லது குறுநிறுவன போர்ட்டல்கள் படைக்கலாம். அப்படியே தான் Joomla!-வும். இல்லையெனில் நீங்கள் mambo-வை முயன்று பார்க்கலாம். இன்னொன்று xoops. பார்த்தீர்களா இப்படி பயமுறுத்தும் பல பெயர்களில் அநேக பீஸ் ஆப் கேக்குகள் நம்மிடையே உண்டு. நுழைந்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது. இன்றைக்கு பெரும்பாலான ஹோஸ்டிங் நிறுவனங்கள் இதுபோன்ற காம்ப்ளிகேட்டட் மென்பொருள்களை ஒரே சொடுக்கில் நிறுவுவதற்கான வசதிகளை கொண்டுள்ளன.அப்புறமென்ன நாமெல்லாம் பொட்டிக்கடைக்கு கூட போர்ட்டல் வைத்துக் கொள்ளலாம்.

வலைப்பக்கங்கள் மட்டுமின்றி desktop மற்றும் mobile database applications கூட இன்றைக்கு ஒரு துளி புரோகிராமிங் அறிவு இல்லாமல் படைக்கலாமாம். அதற்கான வசதி வாய்ப்புகள் உருவாகி உள்ளன. உதாரணமாக பெங்களூரை சேர்ந்த Lyte3 எனும் நிறுவனத்தின் lyteRAD எனும் மென்பொருளை கொள்ளலாம். lyteRAD CE-யை அவர்கள் இலவசமாய் வழங்குகின்றார்கள். தனிநபர்களும் குறுநிறுவனங்களும் தங்களுக்கு தேவையான சிறு சிறு மென்பயன்பாடுகளை டேட்டாபேஸ் இணைப்போடு கூடி தாங்களே எளிதாக உருவாக்கிக் கொள்ளலாமாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த மென்பொருள்களை கைப்பேசியில் கூட பெரும்பாலும் பயன்படுத்த முடியுமாம்.

நமக்கு இன்ட்ரெஸ்டிங்காய் பலதும் அங்காங்கே நடந்துகொண்டுதான் உள்ளன.

பிரபல மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தொகுப்பு தமிழில் இங்கே சிறு மென் புத்தகமாக. Popular Translated Short Stories in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



2 comments:

Unknown said...

சார் நான் எமது ஊரைச் சேர்ந்த ஒரு முன்பள்ளிக்கு ஒரு இணைய பக்கம் தொடங்க எண்ணி இருக்கிறேன். அதற்க்கு எது உகந்ததாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்

Tech Shankar said...



Hi.. here is one different post about
Ilayaraja's 3 in 1 song.

இளையராஜாவின் 3 in 1 பாடல்



இப்படி உங்கள் பின்னூட்டத்தின் ஊடாக எனது பதிவுக்கு லின்க் கொடுப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் மாடரேட் மட்டுறுத்தல் செய்துவிடவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்