கால்நடையாய் மைல்கணக்கில் தூரம் போய் குடத்தில் குடிநீர் மொண்டு தலையில் சுமந்துகொண்டுவரும் பெண்களை பார்த்திருப்போம். கலகலவென பேசிக்கொண்டே அந்த குமரிகள் குடிநீர் சுமந்து கொண்டு வந்தாலும் அதுஅதற்கான வேதனைகளும் வலிகளும் இருக்கத்தான் செய்யும்.படத்தில் நீங்கள் காணும் அருமையான Hippo water roller எனும் ஐடியா யாருக்கோ உதித்தது. இதனால் 24 கேலன் தண்ணீரை நிசாரமாக ஒருவர் இழுத்துக்கொண்டு அல்லது தள்ளிக்கொண்டு வரமுடியுமாம்.தென் ஆப்ரிக்காவில் இது மிகப் பிரபலம்.
இப்படி நாலுபேருக்கு உபயோகமாயிருக்கும் எதாவது ஒரு ஐடியா உங்களிடம் இருக்கின்றதா? உடனே அதை கூகிளுக்கு எழுதிப்போடுங்கள். பத்துமில்லியன் டாலர்களை பரிசாக வழங்க கூகிள் காத்திருக்கின்றான். அதன் பத்தாவது பிறந்த நாளை முன்னிட்டு கூகிள்வாலாக்கள் இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை விட்டிருக்கின்றார்கள். எந்த விதமான யோசனையாக இருந்தாலும் பரவாயில்லை. நாலுபேருக்கு அந்த யோசனையால் நல்லது நடக்கணும் அது தான் ஒரே கண்டிசன். இதற்காகவே http://www.project10tothe100.com எனும் தளத்தையும் தொடக்கியிருக்கின்றார்கள்."May Those Who Help The Most Win" இது தான் அதன் தாரக மந்திரம்.
![]() செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது - சபாகிளிஸ் |
மறந்துடாதீங்க பத்து மில்லியன் டாலராக்கும் பரிசு.
Updated: நண்பர் ஜோசப் பால்ராஜ் அவர்களின் பின்னூட்டத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவருக்கு என் நன்றிகள்.
"பிகேபி அண்ணா,
நானும் ஒரு பதிவு இதை குறித்து எழுதினேன். நண்பர் ஒருவர் நீங்கள் ஏற்கனவே எழுதியுள்ள இந்த பதிவை குறிப்பிட்டார்.
உங்கள் பதிவில் பரிசு 10 மில்லியன் டாலர் என்ற தவறான தகவலை தெரிவித்துள்ளீர்கள். சிறந்த யோசனையாக தேர்ந்தெடுக்கப்படும் திட்டம் 10 மில்லியன் செலவில் செயல்படுத்தப்படும் என்பதே சரி. யோசனை தெரிவிப்பவருக்கு பரிசு எதுவும் கிடையாது. அவர்களது FAQல் குறிப்பிட்டுள்ளதை இங்கு ஒட்டியுள்ளேன்.
Q: What do I get if my idea is chosen?
A: You get good karma and the satisfaction of knowing that your idea might truly help a lot of people.
எனது பதிவில் நான் தெரிவித்துள்ள யோசனையையும் குறிப்பிட்டுள்ளேன். http://maraneri.blogspot.com/2008/09/blog-post_25.html படித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள்."

3 comments:
அன்பு பிகேபி அவர்களே மிக்க நன்றி
இது கண்டிப்பாக நம்மில் யாரேனும் ஒருவருக்காவது நம்முடைய திறமையை வெளிக்கொண்டுவரும் வாய்ப்பாக அமையும் என்று நம்புகிறேன்,
நன்றி
தமீம்
பத்து மில்லியனா?
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,வெறும் காத்துதான் வருது.
பிகேபி அண்ணா,
நானும் ஒரு பதிவு இதை குறித்து எழுதினேன். நண்பர் ஒருவர் நீங்கள் ஏற்கனவே எழுதியுள்ள இந்த பதிவை குறிப்பிட்டார்.
உங்கள் பதிவில் பரிசு 10 மில்லியன் டாலர் என்ற தவறான தகவலை தெரிவித்துள்ளீர்கள். சிறந்த யோசனையாக தேர்ந்தெடுக்கப்படும் திட்டம் 10 மில்லியன் செலவில் செயல்படுத்தப்படும் என்பதே சரி. யோசனை தெரிவிப்பவருக்கு பரிசு எதுவும் கிடையாது. அவர்களது FAQல் குறிப்பிட்டுள்ளதை இங்கு ஒட்டியுள்ளேன்.
Q: What do I get if my idea is chosen?
A: You get good karma and the satisfaction of knowing that your idea might truly help a lot of people.
எனது பதிவில் நான் தெரிவித்துள்ள யோசனையையும் குறிப்பிட்டுள்ளேன். http://maraneri.blogspot.com/2008/09/blog-post_25.html படித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள்.
Post a Comment