திரைப்படங்களில் பார்த்திருப்போம். கதாநாயகன் எதாவது ”ஃபீல்டு வொர்க்குக்கு” சென்றிருக்க கதாநாயகியை வில்லனின் ஆட்கள் கடத்திவந்து விடுவர். தொழில்நுட்பம் போகின்ற போக்கில் இனிமேல் கதாநாயகியை இப்படி ஆட்களை வைத்து கடத்த வேண்டாம் போலிருக்கின்றது. அவளது ”மினி கூப்பர்” காரே அவளை வில்லன் வீட்டுக்கு கொண்டு வந்துசேர்த்துவிடும். எப்படி என்கின்றீர்களா? அந்த வில்லனுக்கு கொஞ்சம் GPS ஹேக்கிங் தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவுதான்.
GPS என்பது வழி தெரியாதவர்களுக்குக் கூட வழிகாட்டும் ஒரு கையடக்கமான சாதனம். இது விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் சேட்டலைட்டுகள் அனுப்பும் அலைகள் உதவியோடு நீங்கள் சாலையில் போக வேண்டிய இடத்துக்கு வழிகாட்டும். இதுமாதிரியான அலைகளை பூமியில் ஹேக்கர்களே செயற்கையாக உருவாக்கி உலவவிட்டு ஷாப்பிங் போக மால் தேடும் கதாநாயகியின் காரின் GPS-ஐ குழப்பத்தில் ஆழ்த்தி அதை தங்கள் வசப்படுத்துவதுதான் இங்கு சாமர்த்தியம். இது சாத்தியம் என சில Cornell University பெரிசுகள் நிரூபித்து காட்டியிருக்கின்றார்கள்.
இப்போதைக்கு பள்ளிக்கூட பொடிசும் செய்யும் அளவுக்கு இந்த GPS ஹேக்கிங் ஒன்றும் அத்தனை எளிது அல்ல. மிலிட்டரி அளவில் யோசிக்கின்றார்கள். எங்கோ செல்ல வேண்டிய பட்டாளத்தை இன்னொருபுறமாய் திசைத் திருப்பிச் சென்றுவிட வைக்க இதனால் முடியும். ஈராக் போக வேண்டிய அங்கிள் சாமின் தளவாடங்கள் இப்படி GPS ஹேக்கப்பட்டு ஈரான் சென்றால் மூன்றாம் உலகப்போர் நிச்சயம். சாவேசும் புடினும் சேர்ந்துக்குவர். எதற்கும் GPS -சோடு கையில் ஒரு காகித அட்லஸையும் வைத்திருத்தல் இப்போதைக்கு புத்திசாலித்தனம்.
இப்படித்தான் GPS-ஐ முழுசாக நம்பி ரோட்டில் ஏமாந்தவர்களையும் கேள்விப் பட்டிருக்கின்றேன். பக்கத்து பர்கர்கிங்கை தேடிச் சென்றவரை அது எங்கோ ஒரு காட்டிற்குள் கொண்டு விட்டதாம்.
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான். -பெர்னாட்ஷா |
Download this post as PDF
5 comments:
பிகேபி சார் உங்கள் லேட்லஸ்ட் அறிமுகம் பொன்மொழிகள் உங்கள் சாதனைப்பயணத்தில் மற்றுமொறு மைல்கல்.தொடரட்டும் உங்கள் அரும்பணி.
நான் இது அறிவியல் கதைகளை விரும்பி படிப்பேன்.வெளி இட்டதற்கு நன்றி .
Ippadi oru chance irukurathunu pala users kku theriyathu thrncha appuram neega solluvathu pola school podusuda pannallam ... nambamodiyalai intha kala podusukalai
//எதற்கும் GPS -சோடு கையில் ஒரு காகித அட்லஸையும் வைத்திருத்தல் இப்போதைக்கு புத்திசாலித்தனம்.//
Thats true and good idea forever. Sometimes digital technoly gimme big slap on our faces. I was used Casio digital diary on 1995 for keep address and other vital information. But oneday it was failiure and unable to use it. Thank god. I have backup the data on my system just one week before. Later i never use such gadgets and always use paper address book. Now i am regular backup my mobile contacts too. Reason is "Cash is not Capital, Contacts are prime Capital" That is my personal experience with digital technology.
Do you know !! Upcoming Solar flare in between 2010-2012 is possible to ruin all electronic based gadgets including GPS navication satellites. The event is undated. More info on http://jayabarathan.wordpress.com/2008/08/15/katturai38/ பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! மூன்று ஆண்டுகளில் வரப் போகும் பரிதிச் சூறாவளி !
http://en.wikipedia.org/wiki/Geomagnetic_storm
Hmmm, I have prepare to live without gadgets. LOL.
with care and love,
Muhammad Ismail .H, PHD,
enga irunthu pidikkareenga intha e-books ellam?? enakku.... sujatha oda full collection kedacha nalla irukkum.........
Post a Comment