உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, October 08, 2008

வைரஸ் விரட்டு

வைரஸ்கள் நம்மைத்தேடி வருவதைவிட அவைகளை நாமாய்த்தேடிப் போய் வலிய இழுத்துவருவது தான் இன்றைய டிரண்ட். இரண்டு வாரத்துக்கொருமுறை தனது லேப்டாப்பை ஃபார்மேட் செய்ய கோபால் கொண்டுவருகின்றான். எல்லாம் வைரஸ் தொல்லை தான். அது என்ன வைரஸ் என கண்டுபிடித்து அதை நீக்கும் வழி கண்டுபிடித்து அதை நீக்கினாலும் ஏனோ மனது கேட்பதில்லை. ஏர்லைன்சில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதிலிருந்து ஈபேயில் நோக்கியா 6300க்கு Plantronics புளூடூத் ஹெட்செட் வாங்குவதுவரை எல்லாமே இந்த மடிக்கணிணி வழிதான். ஒரு முறை அட்டாக் ஆன கணிணியை முழுசாய் நம்பக்கூடாது என்பர் கணிணித்துறை பாதுகாப்பு வல்லுனர்கள். போகும் போது அது என்னவெல்லாம் விட்டுவிட்டுப் போனதோ என்ற சந்தேகம் தான். யாருக்குத் தெரியும்?

இணையம் வழி வரும் கணிணி வைரஸ்களிலிருந்து விலகியிருக்க நான் பின்பற்றும் சில வழிமுறைகளை இங்கே கொடுக்கின்றேன். எனக்கு இவை வொர்க் அவுட் ஆகின்றன. ஒருவேளை உங்களுக்கும் வொர்க் அவுட் ஆகலாம்.

1.விண்டோஸ் ஃபயர்வால் எப்போதும் “ON" அல்லது “Enable" நிலையிலேயே இருக்கட்டும்.இது ரொம்பவும் முக்கியம். இது தான் உங்கள் கணிணிக்குள் வேண்டா விருந்தினர்களை உள்ளே விடாமல் தடுத்துக்கொண்டிருப்பது.

2.ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்கிழமையும் மைக்ரோசாப்ட் வெளியிடும் ”தட்டல் ஒட்டல்”களை நாமும் உடனடியாக நிறுவிக்கொள்ளவேண்டும்.I mean Windows updates. http://www.update.microsoft.com

3.மைக்ரோசாப்டின் இலவச வெளியீடான Windows Defender-ஐ இறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம்.

4.கூகிள் வழங்கும் இலவச மென்பொதியான “Google Pack”-க்கோடு Norton Security Scan-ம் Spyware Doctor-ம் இலவசமாய் கிடைக்கின்றது. விட்டுவைப்பது ஏன். அதையும் தெரிவுசெய்து நிறுவி வைத்துக் கொள்ளுங்கள். http://pack.google.com

5.சில 4shared.com போன்ற கோப்புவழங்கிகள் அவைகளில் ஏற்றம்/இறக்கம் செய்யப்படும் கோப்புகளை வைரஸ் ஸ்கேன் செய்வதுண்டு. ஆனால் Rapidshare போன்ற பிரபல பல கோப்புவழங்கிகள் இவ்வாறு வைரஸ் ஸ்கேன் செய்வதில்லை. இதனால் இவற்றிலிருந்து இறக்கம் செய்யப்படும் கோப்புகள் உங்கள் கணிணிக்கு அபாயம் தரலாம்.

6.ஆடியோ வீடியோ போன்ற கோப்புகளை தைரியமாக இறக்கம் செய்து கொள்ளலாம்.ஆனால் exe கொண்ட பயன்பாட்டு கோப்புகளை இறக்கம் செய்து அப்படியே நம் கணிணியில் ஓடவிடுவது அவ்வளவு நல்லதல்ல. எல்லா பயன்பாட்டு மென்பொருள்களையும் நம்பத்தகுந்த தளங்களிலிருந்தே இறக்கம் செய்குதல் தகும்.

7.பெரும்பாலான கிராக் செய்யப்பட்ட மென்பொருள்கள் கூடவே இலவசமாக ஒரு வைரசோடுத்தான் வருகின்றவாம்.

8.சில தளங்கள் மின்னிமின்னி ரொம்ப அக்கரையாய் காட்டும் ”உங்கள் கணிணியின் பெர்பாமண்ஸ் சரியில்லை.அதை சரிசெய்யவா?” அல்லது ”உங்கள் கணிணியில் வைரஸ் உள்ளது.அதை சரி செய்யவா?” என கேட்பதெல்லாம் டூப்புகள். ஒரு போதும் இது போன்ற கேள்விகளுக்கு ”ஓக்கே” சொல்லக்கூடாது. ”கேன்சல்” செய்து விடவேண்டும்.

9.அது போலவே முகமறியாதளங்கள் கொடுக்கும் ActiveX control களையும் இறக்கம் செய்து நிறுவிவிடாதீர்கள். ரொம்ப ரொம்ப டேஞ்சர். அது என்னவென உங்களுக்கு தெரியாவிட்டால் எப்போதும் “Cancel"-ஐயே கிளிக்குங்கள். உண்மையிலேயே நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என தெரிந்து செய்தால் மட்டும் “OK" கிளிக்குங்கள்.

10.இது தவிர AVG, Avira, Avast போன்ற இலவச ஆண்டிவைரஸ்களில் ஏதாவது ஒன்றை இறக்கம் செய்து நிறுவிவைத்துக்கொண்டு அவற்றின் definition-களையும் அவ்வப்போது சமகாலத்திற்கு அப்டேட் செய்து கொண்டு வந்தால் பெரும்பாலான வைரஸ் தொல்லைகளை நாம் தடுக்கலாம்.
தோழர்களே!
பயணம் போவோம்!
நாட்களை நம்பியல்ல,
நம்மிரு தோள்களை நம்பி!

ஷோபா சக்தியின் "கொரில்லா" புதினம் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. நன்றி வேதன். ShobaShakti Korilla Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories1 comment:

Muhammad Ismail .H, PHD, said...

அன்பின் PKP,

காலத்திற்கேற்ற பதிவு.

//வைரஸ்கள் நம்மைத்தேடி வருவதைவிட அவைகளை நாமாய்த்தேடிப் போய் வலிய இழுத்துவருவது தான் இன்றைய டிரண்ட்.//

ஹி ஹி, 100% உண்மை தான்.

//ஒரு முறை அட்டாக் ஆன கணிணியை முழுசாய் நம்பக்கூடாது என்பர் கணிணித்துறை பாதுகாப்பு வல்லுனர்கள். போகும் போது அது என்னவெல்லாம் விட்டுவிட்டுப் போனதோ என்ற சந்தேகம் தான். யாருக்குத் தெரியும்?//

ரொம்ப சரியான தகவல். சில வைரஸ்கள் நம்முடைய கணிணியில் போர்ட்டுகளை/TCP/IP Ports திறந்தும் வைத்து விடுகிறது. அதனால் மறு தாக்குதல் நடக்கலாம்.

//உண்மையிலேயே நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என தெரிந்து செய்தால் மட்டும் “OK" கிளிக்குங்கள்.//

இந்த கோபால் கேசுங்க கணிணி எது கேட்டாலும் “OK" கிளிக் பண்ணுறதால வர்ற வினைதான் ரொம்ம்மம்மம்ப !!!!


அப்பறம் பதிவுக்கு மேலும் மெருகூட்ட சில தகவல்கள் கீழே...

1. முதல் தனிக்கணிணி வைரஸை உருவாக்கி புண்ணியம் தேடியது (அ)பாக்கியஸ்தானை சேர்ந்த பாரூக் ஆல்வி சகோதரர்கள் தான். வைரஸ் பேரு (c)Brain. வைரஸை செஞ்சது எதுக்குன அவர்கள் எழுதிய மென்பொருளின் திருட்டை /Software Piracy தடுக்கதானாம்!!!

2. வைரஸுக்கான விளக்கம் Very Important Resource Under Siege ன்னு நம்ம பசங்க சொல்லுறங்க.

3. உயிரி வைரஸுக்கும், கணிணி வைரஸுக்கும் உள்ள ஒற்றுமை என்னான இரண்டுமே தனித்து இயங்க இயலாது. அதுக்கு ஒரு செல்/Cell வேணும், இதுக்கு ஒரு பைல்/File வேணும். ஆனா இப்பலாம் முழு பைலாகவே வைரஸ் வருதுங்கோவ்வ்வ்.. So ஒரே டெலிட்டு தான். அதை க்ளீன்லாம் பண்ண கூடாது.


4. கடைசி உள்குத்து சேதி !!! இப்பலாம் ஹாக்கருங்க வைரஸ் புரொக்ராம் எழுதுறது ரொம்ப கம்மியாம் !!! சில ஆன்டி-வைரஸ் நிறுவனங்களே இந்த வேலையா தான் இருக்குதாம்... என்னத்த சொல்ல. காசு குடுத்து வாங்கிய காஸ்பர்ஸ்கி கூட சமயத்துல வைரஸை கண்டுகிட மாட்டேங்குது. இதைத்தான் நான் Aug 2007 அன்று சென்னையில் நடந்த வலைப்பதிவர் பட்டறையில் கூறியபோது யாரும் நம்பவில்லை.


பதிவர் பட்டறை ஒலித்துண்டுகள் http://thoughtsintamil.blogspot.com/2007/08/blog-post_08.html


அப்பறம் அந்த சுட்டிய சுட்டி என் குரலக் கேட்டு ஓண்ணுமே புரியலன்னு குரல் உடக்கூடது. ஏன்னா எனக்கே என் குரல் புரியல. அத கேட்டுட்டு அதுக்கு ITZ Admin team அடிச்ச comment ரொம்ப மோசங்க. "என்ன இஸ்மாயில், காஞ்ச பனை மட்டையில எரும மாடு மூத்திரம் பேஞ்ச மாதிரி அப்படி ஒரு சடசடப்பு, படபடப்பு" --- இது தேவைதான் எனக்கு !!!! LOL..

அதுலருந்து நமக்கு பேச்சு சரிப்பட்டு வராதுன்னு முடிவு கட்டி விட்டேன்.
ஒன்லி களப்பணி தான்.

with care and love,

Muhammad Ismail .H, PHD,

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்