2006-ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வங்காளதேசத்தை சேர்ந்த பெரியவர் முகம்மது யூனுஸ் அவர்களுக்கு கிடைத்தது. அப்போதுதான் ”மைக்ரோ கிரெடிட்” பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது. தேவையிலிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழைமக்களுக்கு சிறுகடன் வழங்கி அவர்களை ஏதாவது ஒரு தொழில் செய்ய ஊக்குவித்து அதன்மூலமாக வளர்ந்து வரும் பல நாடுகளில் பெரிய அமைதிப் புரட்சியே செய்து கொண்டிருக்கின்றார் இம்மனிதர்.
25 டாலர் கொண்டு நாம் என்னத்தை சாதித்து விடப்போகின்றோம் என யோசித்துக் கொண்டிருக்கையில் அதே 25 டாலரை எதாவது ஒரு கால்நடையிலோ அல்லது கைத்தொழிலோ முதலாக்கி உங்கள் இந்த சிறு உதவியினால் தங்கள் வாழ்க்கையை ஓட்ட இங்கு கோடிக்கணக்கில் மக்களிருக்கின்றார்கள்.
இந்த மைக்ரோஃபைனான்சிங் மூலம் உலகின் எங்கோ ஒரு மூலையிலிருக்கும் ஒரு ஏழைக்கு 25 டாலர் வழங்குகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அவன் அதனைக் கொண்டு ஒரு சிறு தொழில் செய்து தன் பிழைப்பை ஓட்டுகின்றான். ஆறுமாதம் கழித்தோ அல்லது ஒரு வருடம் கழித்தோ அப்பணம் அப்படியே உங்களிடம் திரும்பிவந்து விடும். கர்மாவில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் அதுவும் அதனோடு சேர்ந்து வரும்.
இப்படி சிறு சிறு கடனுதவிகளை மைக்ரோகிரெடிட்களாக ஆங்காங்கே தவிக்கும் பல நெஞ்சங்களுக்கு கொடுத்து உதவ ஆன்லைனிலேயே வழியிருக்கின்றது.
http://www.kiva.org
இங்கு நீங்களே யாருக்கு நிதி உதவப்போகின்றீர்கள் என ஒவ்வொருவரின் ப்ரொபைலையும் படித்து ஒரு முடிவுக்கு வரலாம். ஒருவேளை உங்கள் தொழிலை அபிவிருத்தி செய்ய நீங்களே கூட கடன்கேட்க விரும்பினாலும் இங்கு உங்கள் திட்டங்களை விவரித்து நீங்களும் நுண்கடன் கேட்கலாம்.
மற்றபடி மார்வாடி கணக்காய் வட்டிக்கு கடன் கொடுக்க/வாங்க திட்டமிருந்தால் http://www.prosper.com -க்கு போங்கள். நியாபகமிருக்கட்டும், இரண்டிலுமே ரிஸ்க் இருக்கின்றது.
கர்மாவை விளக்கும் ஒரு Gif அனிமேசன் |
Download this post as PDF
7 comments:
அனிமேசன் படம் அருமை.
நல்ல செய்தி பிகேபி.. ஒரு கூடுதல் தகவல்.. பெரும்பாலும் இவர்கள் ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் உள்ளவர்களுக்கு உதவுகிறார்கள். 90 சதவீதத்திற்கும் அதிகமான கடன் திரும்பி வந்து விடுவது இதன் சிறப்பம்சம்..
Nalla pathivu .Nammala modinja oru siru help .
Good share PKP
you did u r karma in good way :)
முகம்மது யூனூஸ் சமாதானத்திற்கான நோபல் பரிசு வாங்கவில்லை. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்றார் தோழரே.
by
rameswaramam rafi
என்னப்பா,
இவுங்க நம்ம ஊர்காரங்களுக்கெல்லாம் தரமாட்டங்களா?
ஒரு இந்திய ப்ரொபைலையும் காணலியே. பாக்கிஸ்தான், கம்போடியா ஏழைகளும் பாவம்தான்; ஆனாக்க நம்மூர்காரங்களா இருந்தா குடுக்கற கை கொஞ்சம் தாராளமா இருக்கும்.
அனிமேசன் is classic
very good.....
keep updating
www.penmai.com
Post a Comment