உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, October 06, 2008

மணநாளுக்கென ஒரு தளம்

முன்பெல்லாம் நம் சொந்தக்காரர்களும் சொக்காரர்களும் ஒரே கிராமத்தில் இருப்பர். கலியாணம் போன்ற வைபவங்கள் ஒரு ஊர் திருவிழா போலிருக்கும். குழல் ஒலிப் பெருக்கியை உயரே ஏற்றிக் கட்டி ஊரையே அமர்க்களப் படுத்தி விடுவர். இன்றைக்கோ நிலைமை வேறு. உற்றார் உறவினர்கள் நண்பர்களெல்லாம் கண்காணா பிரதேசத்தில் சிதறிக்கிடக்க ஏதோ ஒரு அப்பாய்ண்மென்ட் எடுத்தது போல அந்த ஒரு நன்நாளில் மட்டும் வசதிப்படும் எல்லாரும் குழுமி மீண்டும் சிதறிவிடுகின்றோம். ஒட்டு உரசல் இல்லாத ஒரு எந்திரக் கூடுகை போலிருக்கும். அதுவாவது நடக்கிறதே என்று நாம் சந்தோசப்பட்டுக் கொள்ளவேண்டியது தான்.

நணபன் ஒருவன் தன் மணநாளுக்காக தயாராகிக்கொண்டிருக்கின்றான். தன்பெயரையும் மணப்பெண் பெயரையும் சேர்த்து ஒரு .com பதிவுசெய்து http://www.ewedding.com உதவியோடு அழகான ஒரு வெப்தளத்தை எளிதாக உருவாக்கி அதன் சுட்டியை எல்லாருக்கும் அனுப்பி வைத்து இருக்கின்றான். அதில் முக்கிய தகவல்களான திருமண தேதி, கோவில் பெயர், கோவிலுக்கு போகும் வழி, மண்டபம் பற்றிய தகவல்கள், பேருந்து வழித்தடங்கள் இன்ன பிறவற்றையும் அழகாக போட்டு வைத்திருக்கின்றான். சீக்கிரத்தில் திருமணம் செய்யப்போகும் நம் நண்பர்களுக்கும் இத்தளம் மிக உதவியாக இருக்கும். ரொம்ப மெனக்கெடத் தேவையில்லை. உங்கள் படங்களையும் ஆல்பமாக ஏற்றி குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளலாம். நண்பர்கள் கிறுக்க Guestbook வைத்துக்கொள்ளலாம். எங்கு தேனிலவு போகலாமென கேட்டு குட்டி ஓட்டுப்பெட்டி வைத்துக்கொள்ளலாம்.

RSVP-செய்ய கூட வசதி செய்துகொள்ளலாம்.அப்படீன்னா என்ன என்கின்றீர்களா? பிரெஞ்சில் "Répondez s'il vous plaît"என்பதின் சுருக்கம் தான் RSVP.அதாவது நீங்கள் இத்தனை பேரோடு வருகின்றேன் என முன்கூட்டியே கூறிவிட்டால் அதற்கேற்ப விழா நடத்துபவர்கள் சரியாக திட்டமிட்டுக்கொள்வார்கள். இங்கெல்லாம் RSVP ரொம்ப முக்கியம். சரியாக ரெஸ்பாண்ட் செய்யவேண்டும்.இல்லாவிட்டால் ஹோட்டலில் உங்கள் பெயரில் இருக்கை இருக்காது. தப்பும் உங்களுடையதாகிப் போய்விடும்.

திருமணம் செய்யப் போகும் நண்பனை பார்த்து பலரும் நெகிழ்ச்சியாய் விசாரித்தார்கள். "ஆர் யூ ஸ்யூர் மேன் நல்லா யோசித்து பாத்தியாடா"என்றார்கள்.
"ஆமாம்" என்றான் புன்னகைத்துக்கொண்டே.
"You are dead man" என்றார்கள்.



சிறு பாறைகளை
அகற்றிவிட்டால்
சிற்றோடைக்கு
சலசலக்கும்
இன்னோசை உண்டோ?

ராணி முத்து புதினம் "கல்யாணத்தின் கதை" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Raani Muthu Kalyanathin Kathai Tamil Novel pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



5 comments:

நிலாக்காலம் said...

'கல்யாணத்தின் கதை' புதினத்தைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. சின்ன வயசுல ரொம்ப ஃபீல் பண்ணிப் படிச்ச ஞாபகம் வருது.. 8-> சிவசங்கரியின் 'ஏரிக்கு அடியில்' கூட நல்லா இருக்கும். :-)

Muhammad Ismail .H, PHD., said...

//உங்கள் படங்களையும் ஆல்பமாக ஏற்றி குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளலாம்.//

This is very dangerous and do with careful. As per anlog hole (taking screenshot via print screen option) your high resolution personal photos possible to edit with photoshop by culprits. My experience with cyber crimes most of womens are facing such problem. So put only small low resolution or watermarked photos on the web. Thats good idea.

with care and love,
Muhammad Ismail .H ,PHD,

ரொம்ப நல்லவன் said...

I'm going to marry recently. Timely & useful post for me. V V Thanks.

ரொம்ப நல்லவன் said...

எப்புடிங்க எனக்கு கல்யாணமாகப் போகுதுன்னு தெரிஞ்சு கரெக்டா போஸ்ட் பண்றீங்க .கலக்கிட்டீங்க போங்க.

Anonymous said...

So i think i need to bookmark this page i need this as soon as possible .

thanks

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்