ஆணி அடித்தார் போல நெஞ்சத்தில் பதிந்துபோன பல குட்டிகதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். புரியாத பல கருகலான விஷயங்களை எளிதில் அவை நமக்கு புரியவைத்துவிடும். குழப்பமான நேரங்களில் அவை நம் நினைவுக்கு வந்து ஆறுதல் தரும். ஒரு விதமான சாந்தியை கொடுக்கும். ஆனால் இன்றைக்கு எழுதப்படும் ”குட்டிக்” கதைகளோ விஷத்தை வீதிகளில் தெளித்துக் கொண்டிருப்பது சோகத்திலும் சோகம்.
துறவி ஒருவர் நதியினிலே நீராடிக் கொண்டிருந்தாராம். அவரின் சீடர்கள் நதிக்கரையிலே அமர்ந்திருந்தனர். ஆற்று நீரிலே தவறி விழுந்த தேளொன்று தண்ணீரிலே தத்தளித்துக் கொண்டிருப்பதை அத்துறவி பார்த்துவிட்டார். தன் கைகளினாலே அத்தேளை தூக்கி தரையினிலே விட எத்தனித்தார். அவ்வளவுதான் மறுவினாடியே அத்தேள் அவர் கையிலே கொட்டியது. வலியினால் கையை உதறிய துறவியின் கையிலிருந்து தேள் மீண்டும் தண்ணீரிலே விழுந்தது. வினாடிகூட தாமதிக்காமல் மீண்டும் அத்துறவி தன் கைகளினால் அத்தேளை தூக்கி காப்பாற்ற முயலுகின்றார். ஆனால் மறுகணம் மீண்டும் அத்தேள் துறவியின் கரத்தை கொட்டுகிறது. இதனை பார்த்துக் கொண்டிருந்த சீடர்கள் "அதை விட்டுத்தள்ளுங்கள் குருவே! நீங்கள் அதற்கு நன்மை செய்ய விழைய விழைய ஆனால் அது உங்களுக்கு தீமையல்லவோ செய்கின்றது" என கேட்கின்றனர். ஆனால் அத்துறவியோ விடுவதாய் இல்லை."நல்லது செய்வது என் சுவாபம் என்றால் கொட்டுவது அதன் சுபாவம்.அது தன் குணத்தை மாற்றாத போது நான் மட்டும் ஏன் என் குணத்தை மாற்றவேண்டும்" என கேட்டாராம்.
ஒருவேளை நீங்கள் ஆயிரம் முறை கேட்ட கதையாக இக்குட்டிக்கதை இருக்கலாம். ஆனாலும் அவ்வப்போது எனக்கு புத்துணர்வு தரும் கதைகளில் இதுவும் ஒன்று.
அன்பாயிருங்க, அதுக்குனு அடிமையாயிடாதீங்க இரக்கம் காட்டுங்க, பாத்து ஏமாந்திடாதீங்க. |
ஸ்ரீமத் பகவத்கீதை கடமைமூலம் கடவுள் பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரையுடன் சுவாமி ஆசுதோஷானந்தர் ஸ்ரீராமகிருஷ்ண மடம் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Srimath Bhagavathgita Swami Aasuthosaananthar Sri Ramakrishna Madam in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Download this post as PDF
5 comments:
Nice one PKP
This words story from kannadhansan i saw this think in aarthamulla indhu madahm part 3
:)
nice post man
keep post more and more
thanks
selvamani.s
வணக்கம் பிகேபி சார்.
நீண்ட நாட்களின் பின் ............
மிகவும் நன்றாக இருக்கின்றது உங்கள் எழுத்து. தொடரட்டும் உங்கள் பணி..
Thanks for remind this story & Today's Special Lines
பிகேபியனந்தா அவர்களே,
செமை நெத்தி்யடி கருத்துக்கள். பல முறை இது போன்ற சிந்தனையை தூண்டும் கதைகள் தான் என்னை சரியான பாதையில் வழிநடத்தி செல்கின்றது. உங்களுக்கு நன்றிகள் பல.
with care and love,
Muhammad Ismail .H, PHD,
Dear PKP,
Superb Story,keep it up.
With best regards
Selvaaaaaaaaaaa
Post a Comment