என்னைப்போல எழுதப்பிடிப்போர் எழுதிக்கொண்டே இருக்கின்றோம் சமயம் கிடைக்கும் போதெல்லாம். அது ஒரு ஹாபி...பொழுதுபோக்கு.என்னைப் பொறுத்தவரை அது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பயனுள்ள பொழுது போக்காகிவிட்டது. இதுபோல ஆயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் இன்றைக்கு தமிழில் இணையத்தில் வலைப்பதிவுகளாய் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். பேனா பிடித்து ஒரு தமிழ் வார்த்தைகூட ஆண்டுகளாக எழுதாத விரல்கள் இன்றைக்கு இணையத்தில் தமிழில் எழுதித் தள்ளிக் கொண்டிருப்பது நல்ல சகுனமே. I guess.
எழுத்துதவிர ஆடியோ வீடியோ திறமைகளில் சிறந்தவர்களை தூக்கிவிடவும் பல தளங்கள் உள்ளன.உதாரணத்துக்கு நல்ல இசைஞானம் உள்ளோர், குரல்வளம் உள்ளோர் அதை வீடியோவாக்கி யூடியூபில் இட்டு கவனத்தை கவரலாம். நடிப்பு திறனுள்ளோர் தமிழில் நல்ல நகைச்சுவை ஓரங்க நாடகங்களை உருவாக்கி யூடியூபில் இட்டு ஜனங்களை ஈர்க்கலாம். உங்கள் மிமிக்கிரி திறமைகளை ஏன் மூழ்கடிக்கவேண்டும்?. "அசத்தபோவது யாரு" பாணி திறமை உங்களில் இருந்தால் சன் டிவி வரை போய்தான் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்றில்லையே. ஒரு வெப்கேமராவோ அல்லது கைப்பேசி கேமராவோ வைத்து கொஞ்சம் கொஞ்சம் விளையாடினாலே சீக்கிரத்தில் வீடியோ தயாரிப்பில் வித்தகர் ஆகிவிடலாம். உலகளாவிய ஆடியன்ஸ். தூண்டில் தேடி வரும்.
மக்கள் மனம் கவர உங்களால் வீடியோக்களை தொகுத்து வழங்க முடியுமென்றால் ஒரு ஆன்லைன்டிவியை நீங்கள் உருவாக்கலாம். உங்கள் அபிமான பல்வேறு யூடியூப் வீடியோக்களையும் இன்னும் பிற வீடியோக்களையும் தொகுத்து உங்களால் ஒரு ஆன்லைன் டிவியை முற்றிலும் இலவசமாக உருவாக்கமுடியும்.http://www.mogulus.com என்ற தளம் இதற்கான வசதியை உங்களுக்கு தருகின்றது.நகைச்சுவை காட்சிகள், இனிய பாடல்கள், பார்க்க பிடிக்கும் திரைப்படங்களை நீங்கள் அழகாக தொகுத்து வழங்க தொடங்கினால் சீக்கிரத்தில் அரைத்தமாவையே அரைக்கும் பல பிரபல தொலைக்காட்சிகளையும் தோற்கடித்துவிடுவீர்கள். இதோ ஒரு சிம்பிள் சாம்பிள் தமிழ் ஆன்லைன் டிவி http://www.mogulus.com/tvtamil நினைவிருக்கட்டும் பூமாலை கேசட்டுகள் தான் பின்பொருநாள் பிரபல தொலைக்காட்சியானது.
எண்ணத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன. சொல்லில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன. செயலில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன. பழக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன. ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!” -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
|
இன்னும் ஒரு படி மேலே போய் உங்களை நீங்களே கூட ஒளிபரப்பு செய்துகொள்ளலாம் நேரடியாக.உங்கள் வெப்கேமை பலருக்கும் பார்க்க லைவ்வாக பகிர்ந்துகொள்ளலாம் அல்லது உங்கள் வீட்டு விழாக்களை அயல்ஊர் வாழ் நண்பர்கள் காண இணையத்தில் லைவ் டெலிகாஸ்ட் செய்யலாம் எல்லாம் இலவசமாக.
http://www.ustream.tv என்ற தளம் இதற்கான வசதியை தருகின்றது. வெப்கேமராவை எங்கள் சென்னை வீட்டு டிவி முன் வைத்துவிட்டால் சிக்காகோவில் கிடைக்கா சென்னை டிவி சேனல்களையும் சிக்காகோவிலிருந்து காணலாம். ஐபோனிலும் இவ்வீடியோக்களை காண வசதியுள்ளது கூடுதல் பிளஸ். இங்கே ஒரு டெக்கீயை பாருங்கள் 24 மணிநேரமும் லைவ் கேமராவோடு.
http://www.ustream.tv/channel/chris-pirillo-liveவெப்கேமராவில் நீங்கள் இருக்கும்போது வீடியோ திரையில் சில சித்து விளையாட்டுகளை எளியமுறையில் செய்ய கீழ்கண்ட ManyCam என்றமென்பொருள் உதவலாம். உங்கள் வெப்கேம் வீடியோ திரையில் எதிர்முனையோர் வியக்க நீங்கள் எழுத்துக்களை எழுதுதலாம். சில அனிமேசன் மாயா ஜாலங்களை செய்யலாம். நெருப்பு ,பூ, பனிபோன்றன விழும் எஃபெக்ட்களை கொண்டுவரலாம். மேலும் பின்புறங்களை இஷ்டத்துக்கும் மாற்றி முகமூடிகளை போட்டு கலாச இந்த இலவச மென்பொருள் உதவும்.
http://www.manycam.com/வெகுஜன பத்திரிகை குமுதத்தில் இந்த இதழில்
"டாப் 10 பிளாக்ஸ்" வரிசையில் நமது வலைப்பதிவிற்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கின்றது.பெரும்பாலும் "போரடிக்கும்" தொழில்நுட்பத்தகவல்களையே தாங்கிவரும் நம் வலைப்பூ அந்த வரிசையில் வந்தது எனக்கு மிகுந்த ஆச்சரியமே.நண்பர்கள் பலரும் தகவலை தெரிவித்து வாழ்த்துதல் சொல்லியிருந்தார்கள்.உங்கள் ஆதரவால் இது சாத்தியமாயிற்று.
நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். குமுதம் குழுவிற்கும் நன்றி.ரமணிசந்திரன் பிரிய மனம் கூடுதில்லையே தமிழ் புதினம் மென்புத்தகம். Ramani Chnadran Piriyamanam Kooduthillaye novel in Tamil pdf ebook Download. Right click and Save.
Download
Download this post as PDF