பெரும்பாலான டெல், டொஷீபா, எச்பி, ஐபிஎம் லெனோவா, சோனி போன்ற நிறுவனங்களின் மடிக்கணிணிகளை வாங்கும்போது இன்றைக்கு அவை கூடவே விண்டோஸ் விஸ்டாவோடு கூட வரும்.இவை OEM எனப்படும் original equipment manufacturer மென்பொருள் உரிமமோடு வருகின்றன.அதாவது உங்கள் மடிக்கணிணியோடு கூட வரும் விண்டோஸ் விஸ்டா ஒரிஜினல் விண்டோஸ் விஸ்டாவாகும்.அந்த வின்டோஸ் விஸ்டாவுக்கான விலையையும் சேர்த்து கொடுத்துதான் அந்த மடிக்கணிணியை நீங்கள் வாங்கியிருக்கின்றீர்கள் என்று பொருள். உங்கள் மடிக்கணிணியின் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் அந்த பச்சக் கலரு சான்றிதழ் தான் அதற்கான அத்தாட்சி.
நீங்கள் இதுமாதிரியான ஒரிஜினல் வின்டோஸ் வைத்திருப்பதால் முதல் நன்மை உங்கள் வின்டோசால் எளிதாக இணையம் வழி அவ்வப்போது மைக்ரோசாப்டின் "Windows update" செர்வரோடு தொடர்புகொண்டு உங்கள் கணிணியின் விண்டோசின் ஓட்டை ஒடசல்களையெல்லாம் சரியாக்கி கொண்டே வரும். இதனால் அநேக வைரஸ்களிடமிருந்தும் ஹேக்கர்களிடமிருந்தும் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம். இன்னொரு நன்மை உங்கள் கணிணியில் என்ன பிரச்சனை வந்தாலும் மைக்ரோசாப்ட் ஐயா அவர்களின் சப்போர்ட் டிப்பார்ட்மென்டை தைரியமாகத் தொடர்புகொள்ளலாம்.
ஆனால் பெரும்பாலான நம்மவர்கள் செய்யும் தவறு என்னவென்றால் நம் மடிக்கணிணியோடு வந்த விண்டோஸ் விஸ்டா அல்லது எக்ஸ்பி Home edition ஆக இருப்பதால் அது வழி நிறைய சாதிக்க முடிவதில்லை. நொண்டது நொடிச்சதுக்கெல்லாம் அழும்.IIS இருக்காது.அது முடியாது.இது முடியாது என கரைந்துகொண்டே இருக்கும்.ஆனால் மடிக்கணிணியோ 4கிக் மெமரியுடனும் 300கிக் ஹார்ட் டிரைவுடனும் எதையும் தாங்க தயாரான நிலையிலிருக்கும்.
இவ்வேளைகளில் இருக்கின்ற உங்களின் ஒரிஜினல் வின்டோஸ் விஸ்டாவை தூக்கிவிட்டு அதற்கு பதிலாக ஒரு கிராக் செய்யப்பட்ட வின்டோஸ் செர்வரை உங்கள் மடிக்கணிணியில் நிறுவுவது அவ்வளவு புத்திசாலித்தனமல்ல.
இங்கு நீங்கள் விர்சுவல் செர்வரை பயன்படுத்தலாம்.அதாவது உங்கள் வின்டோஸ் விஸ்டாவினுள்ளேயே இன்னொரு வின்டோஸ் செர்வரை ஓட்டலாம்.இதனால் உங்கள் விஸ்டா ஒரிஜினலாக இருந்து கொண்டே உங்களுக்கு பாதுகாப்பைத் தரும் அதேவேளையில் கிராக்கப்பட்ட விண்டோஸ் செர்வரை விர்சுவர் செர்வராக உங்கள் மடிக்கணிணியில் ஓட்டுவதால் உங்களுக்கு கூழும் கிடைக்கும் மீசையும் பாதுகாப்பாயிருக்கும்.இதற்காக VMware Workstation அல்லது Microsoft Virtual PC போன்ற விர்சுவல் செய்யும் மென்பொருள்களை நீங்கள் பயன்படுத்தலாம். என்ன கொஞ்சம் காசு கேட்பார்கள். இதனால் அவைகளுக்கு பைபை சொல்லிவிட்டு இலவச விர்சுவலைசேசன் மென்பொருள் பக்கம் வரலாம்.சன் நிறுவனத்தின் திறந்த மூல படைப்பான VirtualBox-ஐ பயன்படுத்தலாம். இம்மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. ஒருமுறை முயன்றுபாருங்கள்.விடவே மாட்டீர்கள்.உண்மையிலேயே இதை பயன்படுத்துவது மிக எளிது.இவ்வளவு நாளாக இதை மிஸ் பண்ணியிருந்தோமே என்று பின்பு தோன்றும்.(மேலே படத்தில் லினக்ஸினுள் வின்டோஸ் ஓடுவதை காணலாம்)
Download Virtual box here.
http://www.virtualbox.org/wiki/Downloads
(Updated)
வீட்டுக்குள் இருக்கும் போது ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்டியனாக இரு வெளியில் வரும் போது மனிதனாக இரு. |
வாஸந்தி "வல்லினமே மெல்லினமே" புதினம் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Vaasanthi "Vallinamey Mellinamey" novel in Tamil pdf ebook Download. Right click and Save Download
Download this post as PDF
10 comments:
பி கே பி , உங்கள் வலைப்பதிவில் பயன்படுத்தும் script ஏதோ ஒன்று load ஆக அதிக நேரம் பிடிக்கிறது, பெரும் தொந்தரவாக இருக்கிறது. தேவை இல்லாத script களை நீக்கினால் மிக வேகமாக பக்கத்தை வாசிக்க புதியவர்களுக்கு வசதியாக இருக்கும்.
That is called as "desktop Virtualization" ... That means the VirtualBox or VMware uses the your machine hardware for the VM. Another technology is "Server Virtualization" .Xen is the technology for server virtualization.
http://en.wikipedia.org/wiki/Desktop_Virtualization
http://en.wikipedia.org/wiki/Virtualization
நல்ல தகவல்.
நாங்கள் அலுவலகத்தில் விர்ச்சுவல் பிசி 2007 - அதையே பயன்படுத்துகிறோம்.
விண்டோஸ் எக்ஸ்ப்பி முகப்பில் இருக்கும். அதில் நுழைந்து விர்ச்சுவல் பிசியில் தனியாக நுழைவோம்.
உங்களுக்கு நன்றி.
மேலும்
http://www.tamilnenjam.org
தளத்தை eNOM.com வாயிலாகப் பெற்று ப்ளாக்கரிலிருந்து தனி டொமைன்க்கு மாற்றியிருக்கிறேன்.
உங்கள் தளத்தைப் பார்த்து, மறுமொழியிட்டு வந்தேன். பிறகு வலைப்பூ ஆரம்பித்தேன். அது tamizh2000 என்று இருந்தது.
இப்போது tamilnenjam.org என்று ஆகியிருக்கிறது.
எல்லாம் உங்களது பதிவுகளைப் பார்வையிட்டதாலும், புதியன கற்றுக்கொள்ளும் ஆர்வமிகுதியாலும் தான்.
இங்கே உங்களுக்கு மீண்டும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
டுடே பெசல் அனைத்தையும் பக்கத்தில் தெரிய வைக்க முடியுமா? - வசதியாக இருக்கும்
Hi Pkp,
I am using Virtualbox for more than a year. I have tried VMWare before trying this. I found this extremely good and easy to use.
Thanks for all useful information..I am a regular reader of ur blogs. If you have any details on the Google mobile phone please do share with us... Also i have one more request..i am looking for the book "Evan than Bala" which came in Anandha Vikatan ..pls share with me the info if available.
Thanks again
Sundari
hai pkb sir,i tried wth my 64bit windows vista.bt its not workin..i wont to install 32bit xp as a guest os...pls help me..
நல்ல நல்ல கணிணி தகவல்களை அனைவருக்கும் புரியும் வகையில்அள்ளிதருவதில் உங்களுக்கு இணை யாருமே இல்லை அண்ணா.......
Virtual PC நல்ல பயனுள்ள பதிவு....
Thanks for providing such that valuable informations... Thanks a lot...
நன்றி திரு.
Post a Comment