உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, January 23, 2009

Doc தர்மசங்கடம்

முன்னைய இடுக்கமான காலங்களிலும் தன் பணியாளார்களை துரத்தாத ஒரே நிறுவனமாக இருந்த மைக்ரோசாப்டே இப்போது தன் evangelist-களை கழற்றிவிட தொடங்கியிருக்கின்றது. மந்த நிலையின் உக்கிரம் இன்னும் வெட்ட வெளிச்சமாகி இருக்கின்றது. சும்மானாச்சும் சர்கியூட்சிட்டியின் இணையதளம் போய் பார்த்தேன். 60 வருடமாய் கோடீஸ்வரனாயிருந்த ஒருவன் கோமணத்தோடு தெருவில் நிற்பதைபோல உணர்ந்தேன். 34000 பேரின் வேலைக்கு கல்தா.எங்கு போய் கொண்டிருக்கிறோம் ஒன்றுமே புரியவில்லை.இன்றைக்கு வேலை ஒன்றில் இருக்கின்றேன்.காலையில் வேலைக்கு போகும் போது கூட அதே உலகம் அதே சம்பளம். பெரியதாய் மாற்றம் ஒன்றும் இல்லை.என்னமோ ரிஷசன் என்கின்றார்கள். அதன் அர்த்தம் அப்போது புரிந்திருக்கவில்லை. மாலையில் வீடு திரும்பும் போது உனக்கு வேலை இல்லை என்றார்கள். இப்போது புரிகின்றது.என் உலகமும் மாறி இருக்கின்றது.

பயோடேட்டாக்கள் மின்னஞ்சலில் பறந்துகொண்டிருக்கின்றன.தங்குவதற்கு கூடு கிடைக்கும் வரை அவை பறந்துகொண்டே தான் இருக்க வேண்டும். நம்பிக்கையை மட்டும் விட்டுவிடக்கூடாது. நண்பன் ஒருவன் தன் "ரெஸ்யூமை" Doc வடிவில் அனுப்பியிருந்தான். நம்மில் பெரும்பாலானோர் இதுமாதிரி Doc வடிவில் தான் Resume-களை வைத்திருக்கின்றோம். அவன் ரெஸ்யூமை திறந்து அதன் Properties-ஐ எதேச்சையாக பார்த்தால் அடப்பாவி Title : Robert`s resume என இருந்தது. Author : Robert Wood என இருந்தது. யாரோ ஒருவருடைய Biodata-வை அப்படியே காப்பி அடித்திருக்கின்றான் இவன். உள்ளே அழகாக தன் பெயரை போட்டு எடிட் செய்த அவன் இந்த Word டாக்குமெண்டுகள் தன் கூடவே தாங்கி செல்லும் இந்த Properties metadata தகவல்களை மாற்ற மறந்திருக்கின்றான். அல்லது அவனுக்கு இந்த விஷயம் தெரியாதிருந்திருக்கின்றது. இது போல காப்பி செய்யும் போது உள்தகவலை மட்டும் உங்கள் தேவைக்கேற்ப மாற்றம் செய்வதோடல்லாமல் மறக்காமல் metadata எனப்படும் Title, Author, Subject, Keywords போன்றவற்றையும் உங்களுக்கேற்றார் போல் எடிட் செய்குதல் நமக்கு நல்லது அல்லது குறைந்த பட்சம் இலவச Doc Scrubber மென்பொருள் கொண்டாவது அந்த metadata-களை சுவடே இல்லாமல் எளிதாக அழித்துவிடுவது புத்திசாலித்தனம். இன்டர்வியூக்களில் அனாவசிய தர்மசங்கடங்களை தவிர்கலாம்.(படவிளக்கம்:மேலே உள்ள கோப்பு பெயர் அது கோபாலின் ரெஸியூம் என்கின்றது.ஆனால் அதன் Properties-ஸோ அது வேறு தகவல்களை சொல்கின்றது.)

Download Doc Scrubber
http://www.javacoolsoftware.com/docscrubber.html


"மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும்
குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை."
-ஆல்பர்ட் ஸ்வேசர்

இரா.முருகன் ”கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம்” கவிதைத் தொகுப்பு Ra.Murugan "Kiraamathu Pennin Thalaipirasavam" Tamil Kavithaikal Thokuppu" pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



8 comments:

Krish said...

Thank you. Very useful information.

Expatguru said...

நல்ல தகவல், பி.கே.பி. முதலில் என்னுடைய resumeஐ பார்த்தேன். அதில் propertiesல் "This doc was sent from another pc and may be blocked for security reasons" என்று இருந்தது. உடனடியாக "Unblock" என்பதை select செய்துவிட்டேன். வீட்டில் உள்ள கணிணியிலிருந்து இதை செய்து அலுவலகத்துக்கு கணிணிக்கு மாற்றியதால் வந்த வினை. ஆனால் பார்ப்பவர்களுக்கு ஏதோ நான் மற்றவருடைய resumeஐ திருடியது போல தோன்றும் இல்லையா? முக்கியமான தகவலுக்கு மிக்க நன்றி.

Jafar ali said...

செய்திகளை அழகான முறையில் கோர்வையாக ஆக்கி, படிப்பவர் ஈடுபாட்டுடன் படிக்க அழகாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள் பிகேபி!!!

Tech Shankar said...

அடடே..

circuitcity தளத்தில் தான் எனது நண்பர் ஒரு கேமராவை வாங்கச் சொல்லி எனக்குப் பரிந்துரைத்தார்.
அதில் தான் வாங்கினேன்.

நிலைமை எப்போது சரியாகும் என யாராச்சும் ஆரூடம் கூறுங்கப்பா.

இப்படி நிலைமை மிக மிக மோசமாக இருக்கும் நேரத்தில் தான் எதையாவது படித்து வைத்துக்கொள்வதோ, சான்றிதழ்கள் பரீட்சைகளை எழுதுவதோ சிறந்தது.

எளிய தமிழில் SQL என 4 பகுதிகள் எழுதி இருக்கிறேன்.

தளத்தில் பதிந்து வருகிறேன்.


இதன் mirror copy ஆனது இதிலும் வரும்.

உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

Anonymous said...

Hi sir,

many of your post is very interesting as well as usefull.
But i dont think this software is working fine. I download it and tested it. It is not able to remove even Title tag of the metadata, which is most important. For that i have to open each document and do it manually. U can test the same and confirm

Unknown said...

அன்புள்ள பி.கே.பி அவர்களுக்கு,

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் இனணயதளம் மூலம் தெரியவந்த உங்கள் தளத்தில்சில காலமாக உங்கள் தொகுப்புகளை படித்து வருகிறேன். மிக அற்புதம். இத்தனை பயனுள்ள செய்திகளை தேடிப்படிப்பது எனக்கு இயலாத காரியம். சட் சட்டென்று நீங்கள் தரும் டிப்ஸ்கள் மிகவும் ஆச்சர்யமூட்டுகிறது. தரவிறக்கப் பகுதியில் சிறுகதைகளும் நாவல்களும் சுவாரஸ்யம். இந்தப் பணியின் பின்னுள்ள முயற்சியும், ஈடுபாடும், நேரம் ஒதுக்குதலும், உழைப்பும் மிகுந்த பாராட்டுக்குரியது. தின அலுவல்களில் உபயோகப்படுத்தும்படியான சிறுகுறிப்புகள் என்னைப் போன்றவர்களுக்கு ரொம்பவும் உதவியாக இருக்கின்றன. உங்கள் சிறந்த இப்பணி தொடர வாழ்த்துக்கள்! நன்றி!

சந்தர்

Anonymous said...

I create resumes in PDF format. With free PDF writers its not too difficult.

சூரியப்பிரகாஷ் said...

அண்ணா, இத்தகவல் மிகவும் உபயோகரமானதாக இருந்தது.

மிக்க நன்றி அண்ணா

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்