உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, January 08, 2009

கடவுள் எதற்கு?

மந்தமான பொருளாதாரமும் குறைந்துவரும் வேலைவாய்ப்புகளும் ஆலயங்களையும் கோவில்களையும் நிரப்பியிருக்கின்றன. வருகின்றவர்களெல்லாம் மனுக்களோடு வருகின்றார்கள். இறைவனின் இன்பாக்ஸ் இப்போதைக்கு ஃபுல். ஒரே ஒரு ஆறுதல் விவாகரத்துக்கு விரையும் தம்பதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாம்.பின்னே இருக்கின்ற விலைவாசியில் யாருக்கு அது கட்டுபடியாகும்? கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

சகல தொல்லைகளுக்கும் காரணம் இந்த கடவுள் தான். அவனை ஒரேயடியாக விட்டுதொலைத்தால் என்ன என யோசித்த சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு "நல்லவனாய் இரு. கடவுள் எதற்கு" என்ற கோஷத்துடன் கிளம்பியிருக்கின்றார்கள். வாஷிங்டனிலும் லண்டனிலும் போஸ்டர்கள் நாத்திகம் பேசுகின்றன. அப்படியாவது ஒரு யுட்டோபியா கிட்டாதா என்ற நம்பிக்கையில்.

யூனிவர்ஸ் என்பதே பொய் என்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட யூனிவர்ஸ்கள் அங்கே மிதந்துகிடப்பதால் மல்டிவெர்ஸ் என்பதுதான் சரி என்கின்றார்கள். அத்தனை மல்டிவெர்ஸ்கள் கணக்கின்றி இருந்தும் நம் பூமியில் மட்டுமே உயிரினம் வாழமுடிகின்றதென்றால் யாரோ ஒருவர் ஆரம்பத்தில் கொத்தவேலை செய்திருக்கின்றார் என்று தானே அர்த்தம்.

சிறுசுகளை பயமுறுத்தி சாப்பிடவைக்க இல்லாத பூச்சாண்டி தேவைப்பட்டான். பெருசுகளை கட்டுக்குள் வைக்க இல்லாத தெய்வம் ஒன்று தேவைப்படுகின்றது. முறுக்கிருக்கும் போது அவன் "அவன் இல்லை" என்று சொன்னாலும் தள்ளாடும் போது அவனுக்கு சந்தேகம் வந்துவிடுகின்றது.

கனவில் எவனோ ஒருவன் துப்பாக்கியிலிருந்து சுட்ட தோட்டா ஒன்று என் தொண்டையை கிழிக்க பயந்து போய் விழித்தேன். அப்படா நிஜ உலகில் இன்னும் பத்திரமாக இருக்கின்றேனே என மகிழ்ந்து கொண்டேன். ஒருவேளை நிஜ உலகில் நான் இப்படிச் சாகும் போதும் வேறெங்கோ விழிப்பேனோ? Me gone crazy?தங்கள் கால்களால்
பறவை சிக்கிக் கொள்ளும்;
தன் நாவினால்
மனிதன் சிக்கிக் கொள்வான்
-தாமஸ் புல்லர்

Update: Link fixed - முந்தைய காஞ்சி சங்கராச்சாரியார் "தெய்வத்தின் குரல்" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Kanchi Sankaracharya Theivathin Kural in Tamil pdf ebook Download. Right click and Save Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories14 comments:

Aravind said...

ஒருவேளை நிஜ உலகில் நான் இப்படிச் சாகும் போதும் வேறெங்கோ விழிப்பேனோ.

Simply I liked this . ..

Anonymous said...

Sir,
I am getting 'Uyir thotta uravu' pdf in this link..

வால்பையன் said...

//ருவேளை நிஜ உலகில் நான் இப்படிச் சாகும் போதும் வேறெங்கோ விழிப்பேனோ?//


அப்படியானால் இதுவும் கனவு தானா?
ஒருவேளை வேறு யாரோ காணும் கனவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? அவர் விழித்தால் நாம் அவ்வளவு தானா?

nagoreismail said...

கலைஞரிடம் இயக்குனர் லிங்குசாமி ஒரு கேள்வி கேட்டார், "உங்களுக்கு வாழ்க்கைல ஒரு விநாடியாவது கடவுள் இருப்பாரோ என்ற நினைப்பு வந்திருக்கிறதா?" என்று -

அதற்கு தலைவர் கலைஞர் இப்படி பதில் சொல்கிறார், "ஒரு வேளை அப்படி ஒரு நினைப்பு வராமல் இருந்ததற்கு கடவுள் தான் காரணமோ?" என்று

பாலராஜன்கீதா said...

Today's special சுட்டி சரியான புத்தகத்தைக் காட்டவில்லை. தயவு செய்து சரிபார்க்கவும்.

நாகராஜன் said...

தெய்வத்தின் குரல் download செய்ய முயன்றால் உமா பாலகுமார் நாவல் வருகிறது.என்ன ஆச்சு தலைவா??

Kanagaraj said...

வணக்கம் PKP
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. கடவுள் நம்மை படைத்தாரா இல்லை நாம் அவரை படைத்தோமா என்ற கேள்வி நம்மிடம் பலருக்கு உண்டு. ஆனால் கடவுள்க்கு ஒரு பிரச்சணை என்று அவர் நம்மை அழிக்கவில்லை, அதற்க்கு பதிலாக. நாம் அவரை அழித்து கொண்டு உள்ளோம். இதில் இருந்து தெரிகின்றது. யார் நம்மைவிட பெரியவர் என்று...

நன்றி

Anonymous said...

Hi Pkp,
The link takes us to the UmaBalakumar Novel.

Thanks
Senthil

Anonymous said...

கடவுள் யார் என்பதற்கு ஆன்மீக நூல்கள் அழகாக விளக்கம் தருகின்றன.அங்கே தேடுவதை விட்டு விட்டு வேறெங்கோ தேடினால் தாறு மாறான பதில்களே கிடைக்கும்.கருவாட்டுக் கடையில் பூக்களைத் தேடிச் செல்லலாமா?

Anonymous said...

// அத்தனை மல்டிவெர்ஸ்கள் கணக்கின்றி இருந்தும் நம் பூமியில் மட்டுமே உயிரினம் வாழமுடிகின்றதென்றால் //

"மட்டுமே" என்பது நமது தற்போதைய அறிவி(யலி)ன் தற்காலிக எல்லை. இப்போதுதான் கூப்பிடு தூரத்தில் இருக்கும் செவ்வாயையே தொட்டிருக்கின்றோம். மல்டிவெர்ஸின் பிரமாண்டத்தை கற்பனை செய்வதுகூட இயலாது. ஆக, மட்டுமே என்பது உறுதிபடுத்தப்பட்ட தீர்வு அல்ல.

// வாழமுடிகின்றதென்றால் யாரோ ஒருவர் ஆரம்பத்தில் கொத்தவேலை செய்திருக்கின்றார் என்று தானே அர்த்தம்.//

கூற்றினை ஒரு வாதத்திற்கு சரி என்று எடுத்துக்கொண்டால், பூமியில் மட்டும் கொத்த வேலை செய்வதற்கு எதற்கு இத்தனை கோடி கிரக, நட்சத்திர பிரமாண்டங்களை தேவையில்லாமல் படைக்க வேண்டும் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

- பாபு

கிருத்திகா ஸ்ரீதர் said...

வெகு நாளாக மென்புத்தகமாக தேடிக்கொண்டிருந்த புத்தகம், ஆனாலும் தகவிறக்கம் செய்ய முடியவில்லை. எத்துனையோ முறை முயற்சித்துப்பார்த்துவிட்டேன். ஏதும் வழி கூற முடியுமா.

நன்றி.

Unknown said...

a bigger essay will be good to add
my comment. as it is it is very small to make any comment

Anonymous said...

vanakkam pkp
i was an atheist. but considering the crimes n terrorism i feel that GOD should exist.

kankaatchi.blogspot.com said...

கடமாகிய இந்த உடம்பு உள்ளே உன் உள்ளமாகிய கோயிலில் உன்னை இயககும் ஒளி ஒன்று உள்ளது.அதை நீதான் நாடி தெரிந்துகொள்ளவேண்டுமே தவிர வெளியிலோ அல்லது புத்தகங்களிலோ அல்லது மற்றவரிடமோ கேட்டு அறிய முடியாது. எனவே உண்மையை அறிய உண்மையாய் உழைத்தால்தான் உண்மை விளங்கும்.அதற்க்கு எந்த தனிப்பட்ட பெயரோ,உருவமோ கிடையாது.கடமாகிய இந்த உடலுக்குள் இருக்கும் அந்த பொருளைத்தான் கடவுள் என்று அறிந்தவர்கள் அழைக்கிறார்கள். நாம் பார்க்கும் எந்த வடிவமும் கடவுளை நினைவுபடுத்தும் ஒரு குறியீடே தவிர அவைகளெல்லாம் கடவுளல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.இருப்பது ஒன்றுதான்.உன் கடவுள் என்றும் என் கடவுள் என்றும்,உயர்ந்தது,தாழ்ந்தது ,சக்தியுள்ள கடவுள்,என்றெல்லாம் அறியாதவர்களின் பிதற்றல்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்