நடக்கும் என்பார் நடக்காது... நடக்காதென்பார் நடந்துவிடும் என்ற பாடல் உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போதெல்லாம் இப்பாடல் அடிக்கடி நினைவுக்கு வந்து
போய்கொண்டிருக்கின்றது. இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா போய் உருப்படியா எதாவது வேலையைப் பாரும்வோய் என சில நபர்களின் ஊகங்களை படிக்கும் போது சொல்லத்தோன்றும். அதுவே சில நாட்களில் நிஜமாகவே நடக்கும் போது ரொம்பவும் கிலேசமாகிப்போய் விடும்.இப்படித்தான் பீட்ட்ர் ஷெப் (Peter Schiff) எனும் அமெரிக்க பொருளாதார நிபுணர் இன்றைய பொருளாதார நிலைகுலைதலைப் பற்றி 2006-2007-லேயே சொல்லிக் கொண்டிருந்தார். இந்த வீடியோவைப் பாருங்கள். http://www.youtube.com/watch?v=v1YhJRXqnXI மற்றவர்கள் கிண்டலாக சிரித்துக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு அது நெசமாகவே போய்விட்டது. இனியாவது அவர் சொல்வதை கேட்கின்றார்களா என்றால் இல்லை.
ஐகோர் பனாரின் (Igor Panarin) என்றொரு ரஷ்ய கல்வியாளரின் கணிப்பு இன்னும் பகீரென்றிருக்கின்றது. 1998-டிலிருந்தே இவர் சொல்லிவருகின்றார். சோவியத் யூனியன் துண்டு துண்டாக உடைந்து சிதறியது போல அமெரிக்க ஐக்கிய நாடுகளும் 2010-வாக்கில் நான்கு துண்டுகளாக உடைந்துபோகும் என்று. தாங்க இயலா பொருளாதார பிரச்ச்னைகளும், கலாச்சார சீரழிவுகளும், அதனைத் தொடர்ந்து உண்டாகும் உள்நாட்டு குழப்பங்களும் இதற்கான காரணமாக அமையும் என்றார். சீனர்களின் ஆதிக்கம் மிகுந்து கலிபோர்னிய பகுதிகள் “The Californian Republic”-ஆகவும் டெக்சஸ் பகுதிகள் மெக்சிக்கோ காரர்களின் வசம் போய் “"The Texas Republic”-ஆகவும் நியூயார்க் பகுதிகள் “Atlantic America” என்ற பெயரில் ஐரோப்பிய தாக்கத்துடனும் சிக்காகோ பகுதிகள் ”The Central North American Republic” என்ற பெயரில் கனடாவிடமும் விழுந்து போகுமாம். ”அலாஸ்கா திரும்பவும் ரஷ்யாவிடமே வந்து சேர்ந்து விடும். இப்போது ஒத்திக்கு தானே கொடுத்திருக்கின்றோம்” என்கின்றார் சிரித்தவாறு.”புதிய அதிபர் என்னமோ அற்புதங்களை செய்வார் என எதிர்பார்த்திருக்கின்றார்கள். ஆனால் வசந்த காலம் வரும் போது ஒரு அற்புதங்களும் இல்லை என தெளிவாகிப்போகும்” என்றார்.
இதெல்லாம் அமெரிக்கர்களின் மனஉறுதியை குலைக்க KGB-ன் வாரிசான FSB செய்யும் தந்திரங்களே என்பது எதிர் தரப்பு வாதம்.
அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான். - சாமுவேல் பட்லர். |


1 comment:
அன்புள்ள நண்பர் பி.கே.பி அவர்களுக்கு
சில விபரங்கள் திரட்டுவதற்க்காக அச்சரேகை, தீர்வு ரேகை என்ற புத்தகம் தேவைப்படுகிறது.
அது மென்புத்தகமாக கிடைத்தால் சுட்டி தருமாறு கேட்டு கொள்கிறேன்
Post a Comment