கோப்புகளை ஆன்லைனில் சேமித்து வைத்து நண்பர்களுக்கு பகிரவென பல சேவைகள் இருந்தாலும் அவை அளந்து அளந்தே ஸ்டோரேஜ் ஸ்பேஸ்களை கொடுக்கின்றன. ஆனால் நான் சமீபத்தில் அறிய வந்த தளம் www.mybloop.com இது Unlimited space கொடுப்பதுடன் ஏற்றம் செய்யப்படும் ஒரு கோப்பின் அளவு அதிக பட்சமாக 1Gig வரைக்கும் இருக்கலாமென சுதந்திரம் கொடுத்திருக்கின்றார்கள். அதாவது ஒரு முழு திரைப்படத்தையே நீங்கள் ஏற்றம் செய்யலாம். Images can be hotlinked. இப்போதைக்கு சில நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கத்தினராக முடிகின்றது. எப்படி காசு பண்ணுகிறார்களோ தெரியவில்லை.
பாரதம் போன்ற மக்கள் தொகை மிகுந்த தேசம் தொழில்நுட்பத்தை தங்களுக்கு லாவகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகின்றது. ஒன்றாம் தேதியானால் தமிழகத்தின் ATM-களில் நீண்ட வரிசைகளாம். குடும்பத்துடன் நுழைந்த அப்பா தன் பிள்ளைகளுக்கு பணம் எடுப்பது எப்படி என காட்டிக்கொடுத்துக் கொண்டிருக்க வெளியே வெயிலில் மண்டைகாய்ந்து விடுகின்றது என்றான் கோபால். பெரும்பாலோனோரின் சம்பளம் "Direct deposit" ஆகிவிடுவது இன்னொரு காரணம்.
தமிழகத்தினர் தங்கள் மின் அட்டை ரீடிங் தகவல்களை (Reading details) கீழ்கண்ட தளத்தில் கண்டு கொள்ளலாமாம். உங்கள் TNEB மின்சார அட்டையில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள Service Number தேவைப்படும்.http://www.tnebnet.org/newlt/menu2.html இப்போதைக்கு சென்னைவாசிகள் மட்டும் கீழ்கண்ட தளத்தில் மின்கட்டணத்தை ஆன்லைனிலேயே கட்டலாம். கடனட்டை அல்லது டெபிட் அட்டை பயன்படுத்தலாம். http://www.tnebnet.org/awp/TNEB/இதுவரைக்கும் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளட்டுமேவென சொன்னேன்.
நண்பர் வி.சுப்பிரமணியன் அவர்கள் அவ்வப்போது கருத்து செறிந்த நல்ல மின்அஞ்சல்களை எனக்கு அனுப்பிவைப்பதுண்டு. அதில் ஒன்று இதோ...
அது ஒரு மலைக் கோயில் கனவான் ஒருவர் தரிசனம் முடித்து இறங்கி வந்து கொண்டிருந்தார்.அடிவாரத்தில் பிச்சைக்காரர்கள் கூட்டம். கனவான் தானம் செய்வதற்காகப் பணப்பையைத்திறந்தார். எல்லாமே நூறு ரூபாய் நோட்டுகள். சில்லரை மாற்றிவந்து பிறகு தரலாம் என்று பையை மூடினார். துடுக்கான ஒரு பிச்சைக் காரன் கேட்டான்,” 100 ரூபாயாக இருந்தால் என்ன, கொடுத்தால் பங்கிட்டுக் கொள்ள மாட்டோமா?” கனவான் திரும்பிப் பார்த்தார்.”என்ன முறைக்கிற, அடிச்சிடுவியா?” என்றான். கனவான் அடிப்பது போல் கையை ஓங்கினார். அவன்,” ஐயோ! அடிச்சிட்டார்” என்று அலறினான். சக பிச்சைக் காரர்களும் சூழ்ந்து கொண்டு கூவினர். கனவான் நிலைகுலைந்தார். அவ்வமயம் அறங்காவலர் அங்கு வந்தார். யாசகர்கள் மூலைக்கு ஒருவராக ஓடி அமர்ந்து கொண்டனர்.
கனவான் மனம் வருந்தி அச் சான்றோரிடம் கேட்டார்; “ ஐயா! தர்ம நெறியெல்லாம் தர்மம் செய்வோருக்கு மட்டும் தானா? பிச்சை ஏற்பவர்களுக்கு எந்த நெறிமுறையும் இல்லையா?”
அச்சான்றோர் கூறினார்,” மகனே! ஏற்பவர்களுக்கும் நீதி நெறிகள் உண்டு. அதை மீறும் போது அவர்கள் மேலும் மேலும் வறுமமைத் துன்பத்துக்கு உள்ளாவார்கள். வண்டுகள் மலர்களுக்குத் துன்பம் ஏற்படாமல் தேனை அருந்துவது போல கொடுப்பவர் மனம் நோகாமல் யாசிக்கவேண்டும். இளம் தளிரை ஒரு புழு அரித்துத் தின்பது போல கொடுப்பவர்க்கு அச்சம் உண்டாக்கிப் பிச்சை பறிக்கக்கூடாது. அது வெறும் பாவமன்று. அகம்பாவம், பெரும்பாவம் என்றார்.
ஆயும் மலர்த் தேன்வண்டு அருந்துவதுபோல் இரப்போர்
ஈயும் அவர் வருந்தாது ஏற்றல் அறம்- தூய இளம்
பச்சிலையைக் கீடம் அறப்பற்றி அரிப்பதுபோல்
அச்சமுற வாங்கல் அகம்.
-நீதி வெண்பா
{கீடம்- புழு, அகம்- அகம்பாவம்}
வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள் உள்ளன. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள். பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள் பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள். -வில்லியம் ஷேக்ஸ்பியர் |
ஜோதிடரத்னம் S.சந்திரசேகரன் "நீங்களும் ஜோதிடர் ஆகலாம்" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Jothidarathnam S Chandrasekaran "Neengalum Jothidar Aagalaam" astrology in Tamil pdf ebook Download. Right click and Save Download Source:Tamiloviam.com
Download this post as PDF
7 comments:
Thanks PKP
Mybloop மிகவும் பயனுள்ள தகவல். மேலும் பொங்கல் bousஆக ஜோதிட புத்தகம். மிக்க நன்றி பிகேபி. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
நட்புடன்,
-கணேஷ்.
இந்த வாரக் குமுதம் இதழில் (21-01-2009) டாப் 10 பிளாக்ஸ் என்ற பெயரில் பிரபலமான பிளாக்கர்கள் பட்டியல் வந்திருக்கிறது. பக்-78
about your blog
congratulations for becoming one of the best ten people
Congratulations PKP.. this blog becomes one of the best 10 blogs.. I read the article in Kumudam..
Keep going!!!
Regards,
Priya
www.esnips.com
www.ripway.com
இந்த இரண்டும் ஆன்லைன் ஸ்டோரேஜ் தருகின்றன
வணக்கம் pkp sir,
குமுதம் இதழில் டாப் 10 ப்ளாக்கில் ஒன்றாக வந்ததற்கு வாழ்த்துக்கள்
அதற்கு நீங்கள் பதில் கூறிய விதம் உங்கள் தன்னடக்கத்தை காட்டுகின்றது.
மேலும் பணி தொடர வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
பா.பழனிசாமி.
Post a Comment