திரையில் வில்லு படத்தை பார்க்கின்றீர்கள். அது இரு பரிமாணம்(2D). ஆனாலும் Dolby Surround DTS எஃபெக்ட்டெல்லாம் கொடுத்து திரையிலில் அதை நிசப்படுத்த பார்ப்பார்கள். அங்கு நம் காதுகள் ஏமாந்திருக்கும்.
அதையே ”மை டியர் குட்டிச் சாத்தான்” படம் பார்த்த மாதிரி 3D மூக்குக்கண்ணாடி போட்டு பார்த்தால் படம் முப்பரிமாணத்தில் இன்னும் எபக்ட் ஏறி நிஜமாகவே நம் கண் முன்னே நடப்பது போல தோன்றும். அங்கு நம் கண்கள் ஏமாந்திருக்கும்.
ஆனாலும் நான்கு பரிமாண எபக்ட் கிடைக்க ”பிரஸ்மீட்டில்” நிஜமாகவே நாமங்கிருந்திருக்க வேண்டும். நான்காவது பரிமாணமாக அங்கு நம் உணர்வில் நேரமும் கலப்பதால் இன்னமும் சுவாரஸ்யம் கூடுகின்றது. ஆனாலும் எல்லாமே பொய். எல்லா பரிணாமங்களிலும் நம் அங்கங்கள் அநியாயத்துக்கும் ஏமாற்றப்பட்டிருக்கின்றன.
உதாரணத்துக்கு நான்காவது பரிமாணமாக மேலே நாம் பார்த்த ”நேரம்” என்பதே பொய் என்கின்றார்கள். பூமியை விட்டு விட்டு விண்ணில் வெகுதூரம் சென்றுவிட்டால் நாளென்றுமில்லை நேரமென்றும் இல்லை.இப்படி நான்காவது பரிமாணமே மாயை என்றாகும் போது மற்ற மூன்றும் கூட மாயையாகத்தான் இருக்க முடியுமோ? நேரம் என்று ஒன்று இல்லாத போதே நாம் இருக்கின்றது எனப்பட்டிருக்கின்றோம். மொத்தத்தில் இந்த நான்கு பரிமாண உலகில் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம் போலிருக்கின்றது. ஒரு வேளை நான்கையும் தாண்டி ஐந்து ஆறென பல பரிமாணங்கள் உலகில் இருக்கலாமோ? நம் புலன்களால் தான் அதை உணரமுடியவில்லையோ?
அதெல்லாம் இருக்கட்டும் நான் சொல்வதற்கு பதில் சொல்லேன் என்றான் கோபால்."பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர அதை ஒரு நாளென்கிறோம். சந்திரனானது பூமியை ஒரு முறை சுற்றிவர அதை ஒரு மாதமென்கின்றோம். பூமியானது சூரியனை ஒரு முறை சுற்றி வர ஆகும் சமயத்தை ஒரு வருடம் என்கின்றோம். இதெல்லாம் தெளிவாக புரிகின்றது. ஆனால் வாரத்துக்கு ஏழு நாட்கள் என்ற கணக்கு எங்கிருந்து வந்தது? புரியாத புதிராக இருக்கின்றதே" என்றான்.
நாள், மாதம் மற்றும் வருடங்களின் வரவு பூமி,சந்திரன்,சூரியனின் நகர்வுகளை வைத்து கணக்கிடும் போது வாரம் மட்டும் எங்கிருந்து வந்தது. அது நமக்கு நெஜமாகவே தேவைதானா எனக் கேட்டான். அடப்பாவி உருப்படியா இருக்கின்ற அந்த வீக்கெண்டுக்கும் ஆப்புவச்சுடுவ போலிருக்கே என்றேன் நான்.
(மேலே படம்: தெருமுனைகளில் 3D படம் வரைந்து இல்லாததை இருப்பது போல் படைக்கும் Julian Beever-ன் 3டி கோக் போத்தல் .மேலும் படங்களுக்கு இங்கே சொடுக்கவும். http://dalesdesigns.net/Beever.htm)
![]() அது இல்லாமைக்குச் சான்றில்லை |

Download
