உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, April 14, 2006

பட்டென விண்டோஸ் சி.டி கீ

எப்போதோ நிறுவப்பட்ட உங்கள் கணிணியின் விண்டோஸ் CD Key மறந்து விட்டதா? அல்லது எங்கேயோ தொலைத்துவிட்டீர்களா?.கவலையை விடுங்கள்.இதோ ஒரு இலவச மென்பொருள்.இது நீங்கள் உங்கள் கணிணியில் விண்டோஸ் நிறுவும் போது என்ன CD Key பயன்படுத்தினீர்களோ அதை அபடியே மீட்டுத்தருகிறது.அப்புறம் என்ன.எஜ்சாய். :)

http://www.softpedia.com/get/Security/Decrypting-Decoding/WinKeyFinder.shtml

வகை:தொழில் நுட்பம்.


Email PostDownload this post as PDF

அமெரிக்கா போறீங்களா? - டிப்ஸ் 14

இந்திய லாப்டாப்,இந்திய குக்கர் போன்றவற்றை அமெரிக்காவில் உபயோகிக்க (110/220v 50/60Hz copatibility is required)அல்லது அமெரிக்க லாப்டாப்,அமெரிக்க குக்கர் போன்றவற்றை இந்தியாவில் உபயோகிக்க (again 110/220v 50/60Hz copatibility is required)பயனுள்ள அடாப்டெர் செட்
http://www.amazon.com/gp/product/B0009EXVFI
http://www.magellans.com/store/

அமெரிக்காவில் பொதுவாக செல்போன் ப்ளானோடுதான் வாங்கமுடிகிறது.ப்ளான் இன்றிசெல்போன் வாங்க
http://www.cellhut.com/

இந்தியாவில் ஆன்லைனில் செல்போன் வாங்க-பரிசளிக்க
http://shopping.sify.com/shopping/

காரிலிருந்த படி உங்கள் லாப்டாப்பை மின்னேற்றம் செய்ய
http://www.meritline.com/car-power-adapter-laptop-notebook-computer.html

அமெரிக்கா-உங்கள் மாகாணத்தில் சேல்ஸ் டாக்ஸ் எவ்வளவு % அறிய
http://thestc.com/STRates.stm

வகை:அமெரிக்கா


Email PostDownload this post as PDF

எங்கிருந்தும் உங்கள் கணிணி

இப்பொழுது உங்கள் கணிணியை நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம்.உங்கள் கணிணி உங்கள் வீட்டிலிருக்கும் போதே அதை எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம்.அதுவும் இலவசமாக.எப்படி?.கொடுக்கப்பட்ட சுட்டியிலிருந்து Real VNC மென்பொருளை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவுங்கள்.நிறுவும்போது உங்கள் கணிணியின் Ipaddress மற்றும் Port number-ஐ குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.பிற கணிணியிலிருந்து எதாவது ஒரு ப்ரொவ்ஸர் (like Internet explorer) வழி உங்கள் கணிணியின் டெஸ்க்டாப்பில் நுழையலாம்.(eg:http://123.123.123.123:5800) உங்கள் கணிணியை நீங்கள் அதன் முன் அமர்ந்து இருந்து பயன்படுத்துவது போலவே இதன் வழியாகவும் பயன்படுத்தலாம்.இம்மென்பொருள் பயன்பாட்டுக்கு பொதுவாக நிலையான ஐபி அட்ரஸ் இருப்பது நல்லது.

http://www.snapfiles.com/get/vnc.html

one more http://ultravnc.sourceforge.net/

வகை:தொழில் நுட்பம்.


Email PostDownload this post as PDF

Thursday, April 13, 2006

லோகோ ரகசியம் - BMW



ரூ100 கோடி செலவில் சென்னை மகேந்திரா சிட்டியில் பெரிதாக உருவாகிவரும் இன்னொரு மெகா வாகன தொழிற்சாலை உலக புகழ் பெற்ற பிஎம்டபிள்யூ.(BMW-Bavarian Motor Works) 2007-ல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அடிப்படையில் ஜெர்மனி-மியூனிச்-ஐ சேர்ந்த இந்நிறுவனம் 1913-ல் கார்ல் ப்ரைய்ட்ரிச் ராப் (Karl Friedrich Rapp) என்பவரால் தொடக்கப்பட்டது. உண்மையில் விமான எந்திரங்கள் தாயாரிக்கும் நோக்கில் தான் இக்கம்பெனி துவக்கப்பட்டது.அதனால் தான் இதன் லோகோ நீல வான பிண்ணனியில் சுழலும் வெள்ளை விமான உந்து விசிறி (propeller) போல அமைக்கப்பட்டுள்ளது.பிம்மர்ஸ் என செல்லமாய்
அழைக்கப்படும் இந்த வாகனங்கள் luxury மற்றும் Prestigious symbol-களாக உள்ளன.BMW series,Mini,Rolls-Royce car brands முதலானவை இவர்கள் பிராண்ட்.இக்கம்பெனியின்
விளம்பரவாசகம் "The Ultimate Driving Machine" மற்றும் "Sheer Driving
Pleasure."ஜெர்மனியை தவிர மேலும் கீழ்கண்ட இடங்களில் அவர்கள் தொழிற்சாலைகள் உள்ளது.1.Spartanburg/Greenville, South Carolina 2.Rosslyn, South Africa 3.Shenyang, China

பின்குறிப்பு:இரண்டாம் உலகப்போரின்போது இக்கம்பெனியின் தலைமையகம் கடுமையாக
குண்டுகளால் தாக்கப்பட்டு சோவியத்தினரால் பிடிக்கப்பட்டது.

வகை:லோகோ ரகசியம்


Email PostDownload this post as PDF

Wednesday, April 12, 2006

கூகுளும் அதன் முட்டாள் ரோபோவும்



நீங்கள் ஒவ்வொரு முறையும் வலைப்பதியும் போது CAPTCHA எனப்படும் கோணல்மாணல் எழுத்துக்கள் வெரிபிக்கேசன் (completely automated public Turing test to tell computers and humans apart ....அப்பாடா என்னா பெரிய அப்ரிவியேசன்) வந்தால் உஷாராகிவிடுங்கள்.கூகுள் ரோபோ உங்களை கண்காணித்துக்கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்.எப்போ வேண்டுமானாலும் உங்கள் வலைப்பதிவு blogger.com அதாவது blogspot.com-ல் நிறுத்தப்படலாம்.

ரொம்பவும் out going links உங்கள் வலைப்பதிவில் இருந்தால் இது சாத்தியம் (like mine).அப்படி நிறுத்தப்பட்டால் மனித சரிபார்த்தல் தேவைப்படும்.முடிவில் அது ஸ்பாம் பிளாக் அல்லது விளம்பர நோக்கில் அநேக out going links கொண்ட பிளாக் என முடிவுசெய்யப்பட்டால் முன்னறிவிப்பின்றி உங்கள் வலைப்பதிவு அழிக்கப்படும்.சிலசமயம் சீரியஸ் ஜெனியூன் பிளாகுகள் கூட அழிக்கப்பட்டுள்ளன.

இங்கே கிளிக்கினால் இதனால் பாதிக்கப்பட்ட வயிறு எரிந்த அநேகரின் திட்டலை பார்க்கலாம்.Be a man Mr.Robo.அது என்றைக்கு சாத்தியமோ?

http://www.theenglishguy.co.uk/2005/12/08/google-blogger-deleting-real-blogs/

தப்பிப்பிழைத்தவன் நான்.Wordpress அழகாய் தெரிகிறது.எதற்கும் blogspot-ல் இப்போதைக்கு ஆங்கிலத்தில் அப்பப்போ எழுதவேண்டும் போலும்.மனித சரிபார்த்தலில் தேற வேண்டுமே.

அப்டேட்: இக்கட்டுரை சம்பந்தப்பட்ட கோகுல் குமாரின் பதிவு இங்கே
http://iniyathalam.blogspot.com/2006/04/blog-post_22.html


Email PostDownload this post as PDF

Monday, April 10, 2006

அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்க

பொதுவாக நாம் அழிக்கும் கோப்புகள் தற்காலிகமாக ரீசைக்கிள்பின் போய் தங்கியிருக்கும்.எப்போ வேண்டுமானாலும் அந்த கோப்புகளை நாம் அங்கிருந்து மீட்டுக்கொள்ளலாம்.ஆனால் ரீசைக்கிள்பின்னிலிருந்தும் அழிக்கப்பட்டு போய்விட்டால் என்ன பண்ணுவது? இதோ ஒரு இலவச மென்பொருள்.முற்றிலும் அழிக்கப்பட்டு போன அனைத்து கோப்புகளையும் மீட்டுக்கொடுக்கும்.(Even after Recyclebin is emptied).இம்மென்பொருளை இயக்க உங்கள் கணிணியில் இதை நிறுவ வேண்டிய தேவை இல்லை.ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள்.எப்போதாவது உதவும்.

Just download and run.
http://www.snapfiles.com/get/restoration.html

அப்டேட்:

இப்பதிவின் எதிரொலிகள்
http://www.unarvukal.com/ipb/index.php?showtopic=1038

http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=2891

நன்றி mumani,தேனிசை வானவன் மாதேவி,sivastar

வகை:தொழில் நுட்பம்.


Email PostDownload this post as PDF

Friday, April 07, 2006

லோகோ ரகசியம் - ஹூண்டாய்




சென்னையில் தன் தொழிற்சாலையை நிறுவி Accent Santro Sonata போன்ற கார்களால் நம்மூர்களை நிரப்பிக்கொண்டிருக்கும் ஹூண்டாய்-Hyundai Motor Company-நிறுவனம் அடிப்படையில் தென்கொரியாவை சேர்ந்தது.சங் ஜு யங் (Chung Ju-yung) என்பவரால் 1947-ல் தொடக்கப்ப்ட்டு பிற்பாடு அநேகமாறுதல்களுக்குட்பட்டு பிறகு இந்நிலையை அடைந்துள்ளது.இவர்களின் official slogan "Drive your way" என்பதாகும்.லோகோ சரிந்த நிலையில் ஸ்டைலான 'H' .அதை கூர்ந்து கவனித்தால் இருவர் கைகுலுக்குவது போல் தோன்றும்.அதாவது இந்நிறுவனத்துக்கும் வாடிக்கையாளருக்கும் உள்ள உறவை அது குறிக்கிறதாம்.ஹூண்டாயின் தலைமையகம் சீயோலில் உள்ளது.( Yangjae suburb of Seoul )

பின்குறிப்பு:
Hyundai (கொரிய மொழியில் "நவீன" என பொருள்) என்பதன் சரியான உச்சரிப்பு ஹூண்டாய் அல்ல ஹையூண்டே - Hyeondae என்பதுதானாம்..


Email PostDownload this post as PDF

அரேபிய மண்ணில்

என்னிலிருந்து சில அரேபிய நினைவுகள்.

1.விபத்தில் மோதிக்கொண்ட இரண்டு வாகனங்களிலிருந்து இறங்கி வரும் அரேபியர்கள் கூட முதலில் செய்வது இருவரும் கைகொடுத்து "சலாம் அலைக்கும்" (I guess it meeans "Peace be with you") என சொல்லிக்கொள்வதுதான்.இதுவே நம்மூரில் என்றால் கதை வேறு.காதை திறக்கமுடியாது.அமெரிக்காவில் நன்கு படித்த இந்திய பெண்கள் கூட சிறு பார்க்கிங் போன்ற விசயத்துக்காக காட்டு கத்து கத்துவதாக கேள்வி.
2.அங்கு சாலையை கடந்து செல்வோருக்காக எந்த வாகனமும் நின்று போகும்.நம்மூரில் "சொல்லிட்டு வந்துட்டியா பேமானி" பட்டம் கிடைக்கும். :)
3.குறிப்பிட்ட சமயமானால் எக்காரியமானாலும் கண்டுக்காமல் தொழுகைக்கு போய்விடுவர்.எனவே ஸாப்பிங் காம்ப்ளெக் முதல் எல்லா இடமும் prayer rooms.
4.சமீப காலமாக வெளிநாடுபோய் கல்வி கற்கும் இளைய அரேபியர் அதிகம்.குறிப்பாக UK,USA,India,Malaysia etc.ஸோ திறமையான work force உருவாகிவருவது உண்மை.அரேபிய அரசுகள் கல்விக்கு சலுகைகளை வாரிவழங்குகிறது.
5.ஆச்சர்யமாக இந்தியா and the rest of the world அரேபிய எண்களையும் அரேபியர் இந்திய எண்களையும் பயன்படுத்துகின்றனர்.
6.துபாய் ஸாப்பிங் சென்டர்களில் உங்கள் ஒருபுறம் தங்களை முழவதுமாய் கருப்புதுணியால் மூடிக்கொண்டு செல்லும் பெண்களையும் இன்னொறுபுறம் தமிழ் கிளாமர் நடிகைகளை விட கேவலமான உடையில் செல்லும் பெண்களையும் காண முடியும்.குழப்பத்தின் உச்ச கட்டம் அது.
7.அபுதாபியின் அழகிய கட்டிடங்களை படம்பிடிக்க கேமராவுடன் நின்றிருந்த நண்பனை ஒரு அரேபிய கிழவன் முறைத்து பார்த்து திட்டியுள்ளான்.அவன் தன் பெண்களோடு குடும்பமாய் சென்று கொண்டிருந்தானாம்.தன் பெண்களை படம் எடுத்துவிடுவானோ என பயந்திருக்கிறான் போலும்.
8.வெள்ளை தோலுக்கு இவர்கள் அளிக்கும் மதிப்பு பற்றி ஏற்கனவே 2004-ல் எழுதியிருக்கிறேன்.படிக்க இங்கே சொடுக்கவும்.
9.எல்லோருமே பணம் படைத்தவர் அல்லர்.சாப்பாட்டுக்கு கஸ்டப்படும் ஏழை அராபுகளும் இருக்கிறார்கள்.நம்மாட்களால் மோசம்போய் ஏமாற்றப்பட்ட போண்டியான அராபுகளும் இருக்கிறார்கள்.நம்மாட்களால் விர்ரென வியாபாரத்தில் கொழுத்த அராபுகளும் இருக்கிறார்கள்.
10.நற்குணம் கொண்டோர்,அறிவாளிகள் திறமைமிக்கோரை பார்த்திருக்கிறேன்.தன்னந்தனியாய் பெண்கள் பின்இரவில் கடலோர வாக்கிங் போவது இங்கே முடிகிறது.
11.கால் பந்தாட்டமும்,கார் ரேசும் அவர்கள் பேவரைட்.
12.செல்போன் பிரியர்,they hate dogs.
13.அமெரிக்காவை எந்த அளவுக்கு வெறுக்கிறார்களோ அந்த அளவுக்கு விரும்புகிறார்கள்.அமேரிக்காவில் குடியேறுவது அநேகரின் கனவு.
14.தமிழன் என்றால் உடனே"டைகர்" தான் அவர்களுக்கு பிளாஷ் ஆகிறது.விசாரிக்கிறார்கள்.
15.சிக்கன மருத்துவத்துகாக இந்தியா வருவோர் அநேகர்.
16.இந்தியாவில் ரயில் பயணம் அவர்கள் ரசிப்பதில் ஒன்று.No trains over there.
17.அமிர்தாப்பாச்சனுக்காய் உயிரை விடும்,தினமும் பிரார்த்தனை பண்ணும் அரேபியர் அநேகம்.
18.பாலிவுட்டின் தாக்குதல் இங்கு வெகு பளீர்.வயதான அரேபியர்கள் பழைய இந்தி தத்துவ பாடல்களின் ரசிகர்கள்.
19.தமிழர் படை சிங்கப்பூர்,மலேசியாவில் என்றால்,தெலுங்கர் படை அமெரிக்காவில் என்றால் மலையாளப்படை வளைகுடாதான்.அரேபியர் மலையாளம் பேசுவதை பார்த்திருக்கிறேன்.மலையாளம் தெரிந்தாலே இங்கு பிழைத்துக்கொள்ளலாம் போலும்.
20.பொதுஇடங்களில் பெரும்பாலும் அவர்கள் பேச்சு பாலஸ்த்தீன்,இராக்,அமெரிக்கா,இஸ்ரேல் ப்ற்றித்தான் இருக்கிறது.
21.அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று வீழ்ந்தால் மொத்த அரேபிய உலகமும் மகிழ்வு கூத்தாடுகிறது என்பது மறுக்க இயலா உண்மை.
23.பின்லேடன்-நம்மூரில் எம்ஜிஆர்,ரஜினி போல் அங்கு அனேகருக்கு ஹீரோ.
24.சிலவகையான ஏற்ற தாழ்வுகள் அவர்களுக்குள்ளும்.வேலையில் முன்னுரிமை,அரசியலில் சமுதாயதில் முன்னுரிமை போன்ற ஏற்ற தாழ்வுகள்,சில இனவேறுபாடுகள் உள்ளன.
25.பத்து மைல்களுக்குள் கிடைக்கும் அந்த வாழ்வியல் மகா வேறுபாடு பக்ரைனிலிருந்து சவுதியாவுக்கு தரைவழி பயணம் போனால் தெரியும்.வேறெங்கும் இந்த அனுபவம் கிடைக்குமா என தெரியவில்லை.
ஆட்டம் பாட்டமென களிப்பிலிருக்கும் பக்ரைனிலிருந்து சவுதியாவுக்கு போகும் அந்த பஸ்களில் பயணிக்கும் ஒவ்வொரு இதயமும் எப்படி துடிக்கும் என நான் அறியேன்.பெரும்பாலோனோர்க்கு புண்ணிய பூமியில் நுழையும் பக்தியும் மகிழ்வும் இருந்தாலும் ஏதோ ஒரு இனம் புரியாத பயம் எல்லோரையும் கண்டிப்பாக பிடித்திருக்கும் என்பது உண்மையே.

இப்பதிவுக்கும் கால்கரி சிவாவுக்கும் சத்தியமாக சம்பந்தம் கிடையாது.நம்புங்கள். :)

அரேபிய இந்திய காரமான செய்திகள்
http://www.keralamonitor.com/

அரேபிய வேலைவாய்ப்புகள்
http://www.bayt.com
http://www.khaleejtimes.com/


Email PostDownload this post as PDF

Thursday, April 06, 2006

இந்தியாவும் இத்தாலியும்

தேர்தல் அரசியல் இந்த விளையாட்டுக்கெல்லாம் வரலேங்கோ.ஆனாலும் இந்தியாவும் இத்தாலியும் எத்தனை விதங்களில் ஒத்துப்போகிறதென்று இங்கே பாருங்கள்.இது கொஞ்சம் பாப்புலரான flash தான்.ஏற்கனவே நீங்கள் பார்த்திருந்தால் please pass.

http://www.infonegocio.com/xeron/bruno/italy.html

வகை:நகைச்சுவை


Email PostDownload this post as PDF

Wednesday, April 05, 2006

லோகோ ரகசியம் - சிஸ்கோ

"Cisco" என்ற பிரபல கணிணி வலை சார்ந்த ரொவ்டர் முதலான உயர்தொழில்நுட்ப சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம் நாம் யாவரும் அறிந்ததே.இதன் பெயர் SanFrancisco என்ற ஊர் பெயரிலிருந்து வந்ததாம்.ஜான் மார்கிரிட்ஜ்(John Morgridge)-இந்நிறுவனத்தின் முதல் பிரஸிடன்ட் இப்படியாக சொல்கிறார்-இக்கம்பெனியின் நிறுவனர்களான தம்பதியர் லியோனார்ட் பொசாக்கும் சான்ரா லெர்னெரும் (Leonard Bosack and Sandra Lerner) தங்கள் கம்பனி பெயர் மற்றும் லோகோவை பதிவு பண்ணுவதற்காக சாக்ரமென்டோ(Sacramento) நோக்கி காரோட்டிக்கொண்டிருக்கும் போது தங்கள் கம்பெனி பெயரும் Golden Gate Bridge-ஐ பார்த்து தங்கள் கம்பெனி லோகோவும் அவர்கள் மனதில் உதித்ததாக சொல்கிறார்.இன்றும் அநேக இடத்தில் cisco Systems என cisco வின்"c" lowercase-ல்இருப்பதை பார்க்கலாம்.

1984 -ல் துவக்கப்பட்ட இந்நிறுவனத்தில் இன்று 34,000 பேர் வேலை பார்க்கிறார்கள்.தலைமைஇடம்-சான் ஒசே,கலிபோர்னியா.
சக்கைபோடு போடும் இக்கம்பெனியின் ஆண்டு வருவாய் 24.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
PIX,Linksys,BPX,Aironet இவை இவர்களின் முக்கியமான வணிக அடையாளங்கள்.

பின்குறிப்பு:

170 மில்லியன் டாலரை எடுத்துக்கொண்டு சிஸ்கோவிலிருந்து பிரிந்து போன தம்பதியர் லியோனார்ட் பொசாக்கும் சான்ரா லெர்னெரும் அப்புறமாக விவாகரத்தும் செய்துகொண்டனர்.

வகை:லோகோ ரகசியம்


Email PostDownload this post as PDF

Tuesday, April 04, 2006

அமெரிக்கா போறீங்களா? - டிப்ஸ் 13

அங்கே நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் எண்களால் குறிப்பிடப்படுகின்றன.வடக்கு தெற்காய் ஓடும் சாலைகள் ஒற்றைபடை எண்ணிலும் (எ.கா Route 1-(Pronounced as ரவுட்)) கிழக்கும் மேற்காய் ஓடும் சாலைகள் இரட்டைபடை எண்ணிலும் குறிப்பிடுகிறார்கள்.(எ.கா.ரவ்ட் 256)
மாகாணங்களை இணைக்கும் பெருஞ்சாலைகள் டர்ன்பைக் (TurnPike)எனப்படுகின்றன.
மற்ற நெடுஞ்சாலைகள் பார்க்வேஸ் (Parkways) எனப்படுகின்றன.பெரும்பாலும் குறுக்காக செல்லும் சாலைகள் அவெனியூ (Avenue) என்றும் நெடுக்காக செல்லும் சாலைகள் ஸ்டிரீட்-Street அல்லது ரோடு-Road என்றும் அழைக்கப்படுகின்றது.
இரு மருங்கும் மரங்கள் நிறைந்த சாலை போலேவாட்-Boulevard எனப்படுகிறது.
பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகள்,ரயில்கள் நம்பமுடியா அளவு அட்டவணை நேரப்படி வந்து போகும்.Academy,greyhound,CoachUSA,NJTransit,MTA,NYC Transit இவை சில East Coast பொது பேருந்துகள்.Amtrack,NJTransit,Subway,PATH,MTA இவை சில East Coast ரயில்கள்.ஒற்றைபடை எண் கட்டடங்கள் சாலையின் ஒரு மருங்கிலும்,இரட்டைபடை எண் கட்டடங்கள் சாலையின் மறு மருங்கிலும் வரிசைபடுத்தப்பட்டுள்ளன.சாலைகளின் சிக்னல்கள் லைட்ஸ் எனப்படுகின்றன.
"Support Our Troops,Proud to be an American" இவை சாலை வாகனங்களின் பிரபல வாசகங்கள்.சில வாகனங்கள் Stop War.Put troops on the Mexican border என புஷ்ஷை திட்டவும் செய்கின்றன.
சைரென் லைட் உள்ள ,இல்லாத கார்களில் மாமாக்கள் வலம் வருவார்கள்.சில சமயம் பதுங்கியும் இருப்பர்.ஓவர் ஸ்பீட் தாதாக்களை பிடிக்கத் தான்.மரத்தாலும் இரும்பாலும் ஆன நாடு இதுவென்றால் மிகையில்லை.வீடுகள் மரத்தாலானதென்றால்,மாபெரும் பாலங்களும்,வானுயர் கட்டடங்களும் இரும்பை உருக்கி கொட்டி கட்டியிருக்கிறார்கள்.
மாதம் ஏறக்குறைய $400 தவணையும்,$300 இன்சூரன்சும்,$100 காஸ்க்கும் (அதாங்க Gasoline எனப்படும் பெட்ரோல்) நீங்கள் செலவு பண்ணமுடியுமென்றால் நீங்களும் கார்வைத்துக்கொள்ளலாம்.எல்லாரும் அதைத்தான் செய்கிறார்கள்.காரில்லா வாழ்வு மிகக் கடினம்.யாரோ சொன்னார்கள்.அமெரிக்க வாழ்க்கைக்கு நான்கு C-க்கள் மிக முக்கியம் என்று.CAR--CREDIT CARD-COMPUTER-CELLPHONE.
கூடவே Job-ஐயும் சேர்த்துக்கோங்கப்பு.

வகை:அமெரிக்கா


Email PostDownload this post as PDF

Monday, April 03, 2006

திருட்டுப் பதிவு

திருட்டு வி.சி.டி போல் திருட்டுப் பதிவு எனப்படுவது சீக்கிரமாய் மார்க்கட்டில் வந்துவிடலாம்.கஷ்டப்பட்டு ஒருவர் தயாரித்த சினிமாவை எளிதாய் ஒருவர் வி.சி.டியில் காபி செய்து விநியோகித்து சம்பாத்தித்து விடுவார்.இது போல் கஷ்டப்பட்டு ஒருவர் பதிவு எழுத இன்னொருவர் அதை எளிதாய் காப்பி பேஸ்ட் பண்ணி தன்னோடைய பதிவிலோ இல்லை இணையத்திலோ வெளியிட வாய்ப்பு உண்டு.

இது போல உங்கள் எழுத்துக்களை யாராவது காப்பி அடித்திருக்கிறார்களா என கண்டறிய இதோ ஒரு இலவச சேவை.Search for copies of your page on the Web. http://www.copyscape.com/உங்கள் URL-ஐ மட்டும் டைப் செய்யுங்கள்.

இணையம் பூரா தேடி யார் யார் உங்களிலிருந்து காப்பி அடித்திருக்கிறார்கள் என இது லிஸ்ட் போட்டு கொடுத்துவிடும்.

உங்கள் பதிவு அது உங்கள் உழைப்பு.அது உங்கட்கே சொந்தம்.இல்லையா?

வகை:அமெரிக்கா


Email PostDownload this post as PDF

அமெரிக்கா போறீங்களா? - டிப்ஸ் 12

அங்கு காலையில் முட்டையும் முட்டை சார்ந்த உணவும் மதியம் சிக்கனும் சிக்கன் சார்ந்த உணவும் பிரபலம்.சன்னி சைட் அப்,ஸ்கிராம்பில்ட் எக்,வித விதமான ஆம்லேட்,சான்விச் என நிறைய வகைகளில் முட்டை சாப்பிடுகிறார்கள்.காலையில் பெரும்பாலோனோரை டன்கின் டோனட்ஸ் காபி கப்போடு தான் பார்க்க முடியும்.டோஸ்ட்,மப்பின்,க்ரோஸன்ட்,டோனட்,பீகிள்,சாலட்,சூப்,
லசானியா,பீஸா,சப்,நூடுல்ஸ்,ராப்ஸ்,பான் கேக்ஸ்,சைனீஸ் பப்பே,காட் டாக்ஸ்,நக்கட்ஸ்,ஸ்ரைப்ஸ்,ப்ரைஸ்,பர்கர் உணவு வகைகள் பிரபலம்.எல்லா உணவிலும் சீஸ் தவறாமல்.கோக்,பெப்ஸி வகையராக்களை சோடா என்கிறார்கள்.
மெக்டொனால்ட்ஸ்,பர்கர்கிங்,பீஸாகட்,பப்பாயீஸ்,ரெட்லாப்ஸ்டெர்,
டிஜிஐப்ரைடேஸ்,சார்லி ப்ரொவ்ன்,ரூபி ட்யூஸ்டே,ஹார்டீஸ்,ஒயிட்கேஸ்டில்,சப்வே,கேஎப்சி,டாகோபெல்,
பட்ரக்கர்ஸ்,பிளிம்பீஸ்,டெலி,ஆலிவ் கார்டன்,பாஸ்டன்மார்க்கட்,டைனெர்,டோமினொஸ்,விண்டீஸ்,
ஹூட்டர்ஸ்,பென்னிகென்ஸ்,ஆப்பிள்பீஸ்,குயிஸ்னோஸ் இவை பிரபல உணவகங்கள்.
நன்றாக சீஸ் சாப்பிடுவதாலோ என்னமோ பெரும்பாலோர் ஓவர் வெயிட்.ரோட்டோரமாய் அல்லது எதாவது பார்க்குகளில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் இல்லை வோர்க் அவுட் ப்ளேஸ் போய் உடற்பயிற்சி செய்து சில பவுண்ட் எடை குறைக்க எல்லோருமே முயன்று கொண்டிருக்கிறார்கள்.

வகை:அமெரிக்கா


Email PostDownload this post as PDF

Sunday, April 02, 2006

உங்கள் ஊர் மேப்புகள்

என்னத்தான் கூகுள் எர்த்,மேப் குவெஸ்ட்,வெர்சுவல் எர்த்,யாகூ மேப் வழி அமெரிக்காவைப் பார்த்தாலும் நம்ம ஊரு மேப்புகளை நாம் பார்ப்பதற்கு நமக்கு தனி அலாதி தான்.இங்கே என் கைக்கு எட்டிய நம்ம ஊரு மேப்புகளை வரிசைப் படுத்தியுள்ளேன்.உங்களிடம் ஏதாவது லிங்க் இருந்தாலும் எனக்கு தெரிவியுங்கள்.அப்டேட் செய்துகொள்வேன்.மேப்பை பார்வையிட கீழே உங்கள் ஊர் பெயரை சொடுக்குங்கள்.

பழனி
ஆத்தூர்-சேலம் மாவட்டம்
மதுரை
திருச்சி
மவுண்ட்ரோடு
கோவை
கோவை
கோடைக்கானல்
ராமேஸ்வரம்
சென்னை
சென்னை போக்குவரத்து
தஞ்சாவூர்
ஊட்டி
கன்னியாகுமரி
கரூர்
திருநெல்வேலி
பணகுடி
தேர்தல் ஸ்பெஷல் தமிழக சட்டசபைகள் லிஸ்ட் மேப்

வகை:தமிழ்நாடு


Email PostDownload this post as PDF

Saturday, April 01, 2006

வெப் மெயில் மற்றும் வெப் FTP

எதாவது Service provider கொடுக்கும் ஒரு POP அல்லது IMAP ஈமெயில் ஐடி நீங்கள் வைத்திருந்தால் அதை எளிதாக திறக்க மற்றும் உபயோகபடுத்த http://www.mail2web.com இணையதளம் உதவுகிறது.முற்றிலும் இலவசம்,பதிவு பண்ண வேண்டிய தேவை இல்லை.பொதுவாக POP அக்கவுண்ட் நீங்கள் வைத்திருந்தால் Outlook Express போன்ற Mail Client-யை பயன்படுத்தும்போது உங்கள் மெயில்கள் செர்வரை விட்டு உங்கள் கணிணீயில் இறக்கப்பட்டுவிடுமாதலால் பிற கணிணிகள் வழி உங்கள் பழைய மெயில்களை செக் செய்யஇயலாது.இது போன்ற சிக்கல்களை இத்தளம் நீக்குகிறது.POP -ஐ Post Office Protocol என்பார்கள்.நாம் தமிழில் இதை "தபால் அலுவலக நெறிகள்"எனலாமா? :).

http://surftp.com/index.htm வெப்தளம் இலவசமாக பாதுகாப்பாக உங்கள் கோப்புகளை ஆன்லைனில் FTP செய்ய உதவுகின்றது.எந்த ஒரு மென்பொருளும் உங்கள் கணிணியில் நிறுவ தேவை இல்லை.Fast and Easy Web based FTP.

வகை:தொழில் நுட்பம்.


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்