இங்கே தினசரிகளில் இஸ்ரேல்,பாலஸ்தீன பிரச்சனைகளைத் தவிர வெறெதுவும் செய்தி இல்லை.வானொலிகளும் இஸ்ரேல்,பாலஸ்தீனம் -ஈராக்,அமெரிக்கா விசயங்களையே திரும்ப திரும்ப ஒலிக்கின்றன.மற்றபடி சுயபிரதேசம் பற்றிய செய்திகளெல்லாம் இருட்டடிப்பு தான்.யாருக்கு தைரியம் இருக்கு.உள்ளதை உள்ளபடியே எழுத.
இந்தியர் என்றால் ரொம்பபேருக்கு இளக்காரம்.மேற்க்கத்திய வெள்ளைதோலைக் கண்டால் ரொம்ப மரியாதை.அவன் தப்பு தப்பாய் பண்ணினாலும் கண்டுகிறது இல்லை.நம்மவர்கள் தும்மினாலும் சிறை பிடிக்கிறார்கள்.அதே வெள்ளையர்கள் அப்பக்கமாய் சற்று மறைந்தால் இவர்கள் காரி துப்புகிறார்கள்.முன்புகொடுத்தது பயத்தினால் கொடுத்த மரியாதை போலும்.
ஐரோப்பியர்கள் எண்ணை கண்டுபிடித்து கொடுத்திருக்கிறார்கள்.அமெரிக்கரின் ஈராக் ஆட்டம் அனைவருக்கும் தெரியும்.அதனால் அவர்களுக்கு நல்ல மரியாதை இங்கு.
இந்தியா மாதிரியா?.இங்கு வெள்ளையன் ஒருத்தனுக்கு நெறி கட்டினால் அவன் நாடு ஒடோடிவருகிறதே.
மேலும் இவர்களுக்கு சொந்தமாய் படை பலம் இல்லை.இராக் மாதிரி எவனாவது ஆக்கிரமிக்க வந்தால் வெள்ளையர் தான் காப்பாற்ற வேண்டும்.
அதற்காக இந்தியரை ஏன் இளக்காரமாக்கவேண்டும்.சொல்லப்போனால் இப்பிரதேசத்தை கட்டி எழுப்பியவர்கள் இந்தியர் தான்.இன்றைய தேதியிலும் நம் பங்களிப்பு மிக மகத்தானது.ஆனால் நாம் எப்பொழுதுமே நம்மை பலமாய் காட்டிக்கொண்டது இல்லை.பேட்டை ரௌடிக்கு தானே இக்காலங்களில் மரியாதை.சாதுக்களை எந்த நாய் கண்டுக்க போகிறது.
இதனால் தான் லேடென்களும்,உசேன்களும் இங்கு பிரபலம்.லேடெனுக்கும்,உசேனுக்கும் எல்லொருமே இங்கு விசிறிகள்.
அமெரிக்கபானம் என பெப்சியை உதறுபவர்கள்.ஆனால் அமெரிக்க இறக்குமதி கார் ஏறி மெக்டொனால்ட் போய் சாப்பிடுவார்கள்.பயன்படுத்தும்ஆப்பரேடிங் ஸிஸ்டம் விண்டோஸ்.
நம்ம ஆட்கள் கெட்டிக்காரர்கள்.வந்தோமா சம்பாதித்தோமா.போனோமா என்று.எவர் இளக்காரங்களையும் கண்டுகிறதில்லை.எனென்றால் நமக்கொரு காலம் வருகின்றது.ஓரு காலத்தில் செல்வம் கொழித்த நாடுதான் நம்மூர்.ஏதொ
தொழில்புரட்சி காலத்தில் நம்மவர்கள் தூங்கிவிட்டிருந்தோம்.இல்லை இல்லை அடிமைதனத்தில் சிக்கியிருந்தோம்.அதிலிருந்து
விடுபட போராடிக்கொண்டிருந்தோம்.இப்போது உழைப்பால் உயர்ந்து கொண்டுள்ளோம்.இனி நாம் மனித வளத்தால் உலகை கொள்ளையடிப்போம்.ஆனைக்கொரு காலம்.பூனைக்கொரு காலம்.நிச்சயமாக.
(பட்டென தோன்றியது.ஏதோ நாடு மத இன துவேசத்திலோ,வெறியிலோ எழுதியதுஅல்ல.வருத்தியிருந்தால் மன்னிக்கவும்)
அப்டேட்:
மேலும் கல்காரி சிவாவின் சுவாரஸ்யமான அரேபிய அனுபவங்கள் இங்கே.கட்டாயம் படிக்க வேண்டியது.
http://sivacalgary.blogspot.com/2006/03/3.html
வகை:பொது அறிவு
Download this post as PDF