உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, April 26, 2004

தகவல்திங்கள்-22

பகரினும்,சௌதியாவும்

பகரினில்விமானம் இறங்கும்போதே ஒரு வித்தியாசமான உணர்வு.என்னடா கடல்லயா விமானத்தை இறக்க போகிறார்கள் என்று.
ஒரு குறும்தீவு இது.சுற்றி கடல்.
நடுவே கண்ணாடி மாளிகைகள் அடுக்கடுக்காய்.
பளீர்சாலைகள்.
இருமருங்கிலும் செயற்கையாய் பச்சை ஆக்கியிருக்கிறார்கள்.
அரபு நாடென்றாலும் ரொம்ப கெடுபிடியில்லை.அழகிய நங்கைகள் நவ நாகரீக உடைகளில் ஆங்காங்கே.
சந்தேகித்தால் முழு பயணப்பெட்டியையும் விமானநிலயத்தில் சோதிக்கிறார்கள்,போதை வஸ்துக்களுக்காக.
அப்பப்போ ஏதாவதொரு திருவிழா நடந்துகொண்டேஇருக்கிறது.
பகரினில் வாழ்கைகொஞ்சம் ஜாலிதான்.
இங்கிருந்து தரைவழியாகவே பொய்விடலாம் சௌதி அரேபியாவுக்கு.எட்டும் தூரம்.
பகரின் கடல் தீவிலிருந்து சௌதிஅராபிய நிலப்பரப்புக்கு நீண்ட கடல்மேல் பாலம் அமைத்திருக்கிறார்கள்.
சுமார் 26 கிலோமீட்டர்கள்.
சுற்றிலும் கடலைபார்த்த படியே பயணிக்கலாம்.
நடுவில் சௌதியில்நுழையும் போது கெடுபிடி ஆரம்பிக்கிறது.
சூழலில் ஒருவித மான இறுக்கம் வந்துவிடும்.
வெட்டு ஒன்று துண்டு இரண்டு.
உங்கள் பயணபெட்டிகள் சுத்தமாய் அலசப்படும்.எதைவேண்டுமானாலும் அவர்கள் குப்பையாய் தூக்கி எறியலாம்.
பெண்கள் முழு பர்தா அணிய துவங்கிவிடுகின்றனர்.கருப்பாய் முழுநீள அங்கி அவ்ளோதான்.
வாகனங்களெல்லாம் இறக்குமதி செய்யப்பட்ட பழம் பெரும் வாகனங்கள்.
மண்ணும் சேறும் அப்பியிருக்கிறது.
பெரும்பாலான வாகனங்களில் பலபெண்கள் உட்பட குடும்பம் குடும்பமாய் குந்தியிருக்கிறார்கள்.
பாகிஸ்தானியரும்,பங்ளாதேசியர்களும்.மற்றும் இந்தியர்களும் ஏறெடுத்துக்கூட பார்ப்பது இல்லை.
பயம்.
எல்லோருக்கும் சட்டமும்,விதிகளும் நடப்பு நிலவரங்களும் நன்கு தெரிகிறது.
முழு பரிசோதனைக்கு பின் சௌதிக்குள் நுழைகின்றோம்.
அநேக ஏன் எல்லா முஸ்லீம்களுக்கும் அது ஒரு புனிதமான கனவு பிரதேசம்.
"டேய் நீ ரொம்ப குடுத்துவச்சவன்" என என் இஸ்லாமிய தோழி சொன்னது நினைவுக்கு வந்தது.
நீண்ட பரந்த சாலைகள்.இருபுறமும் குப்பைகள்.
ஓடும் வாகனங்களும் அப்படியே.
அல்கோபார்,தமாம் என்று அந்த பயணம் தொடர்கிறது.
குடும்பம் குடும்பமாய் வாழ்கிறவர்கள் பாக்கியசாலிகள்.அதுவும் முஸ்லிமாய் இருந்தால் மிக்க நலம்.
எல்லாமே இரண்டு இரண்டு.பெண்களுக்கொரு மார்க்கெட் .ஆண்களுக்கொரு மார்க்கெட் இப்படியாக.
தனியாக வேலை செய்யும் ஆண்கள் பெரிய மூடப்பட்ட சுற்று சுவர்களுக்குள் வசிக்கிறார்கள்.
ஒவ்வொரு காம்ப்பவுண்டும் ஒரு உலகம்.
அராம்கோ-பெட்ரோல் கம்பனி.பெரும்பாலான தொழில்கள் இதை சார்ந்தே இருக்கின்றன.
இந்தியன் கல்விச்சாலைகளை பார்க்கமுடிகிறது.
சாலைகளில் பெண்களை காண முடிவதில்லை.
கொஞ்சம் சுதந்திரமாய்(?) இருக்க அப்பப்போ பகரின் வந்து செல்கிறார்கள் பலர்.இதில் சௌதியர்களும் உட்பட.
நம்மஊர் ஆட்கள் ஒராண்டோ அல்லது ஈராண்டோ கழித்து விடுமுறையில் இந்தியா போக பகரின் வரும் போது அங்கு நுழைந்ததும் அவர்கள் சந்தோசம் பார்க்க வேண்டுமே மகிழ்ச்சி தெளிவாய் தெரிகிறது.
நவநாகரீக பெண்களையும் சிட்டென காரில் பறக்கும் பெண்களையும் உற்று பார்க்கிறார்கள்.ஒருகணம் சிறு பெருமூச்சுவிட்டு இதயம் அடங்குகிறது.ஒருகாலத்தில் ஆடிய ஆட்டமென்ன இப்பொ இது தான் நம் வாழ்கை.இப்படித்தான் எழுதியிருக்கிறது.இப்படிதான் நாம்
பயணித்தாகவேண்டும் என்று அவர்கள் நினைப்பது போல் தோன்றும்.

வகை:பொது அறிவு


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்