இது ஒரு மழைக் காலம்
அப்பப்போ மழைவருதோ இல்லையோ
அவ்வப்போ தேர்தல் வந்துடுது
வாக்கு வாங்க சிலர்
வாக்கு போட சிலர்
வாக்கு பிடுங்க சிலர்
நல்ல போட்டி.
நேரம் போகிறது அநேகருக்கு.
ஆனால் இந்தமுறை ஒரு சின்ன நிம்மதி
அது அந்த இளைஞர்களின் புதுமதி
அந்த காந்தியை திட்ட இறக்கிவிடப்பட்டது இந்த காந்தி
மரியாதையாய் பேசி இன்றோ வருண் எல்லார் மனதிலும் ஓங்கி
தொடை நடுங்கி தலைகள் மத்தியில்-குடும்ப
படை திரண்டு பாக் போய் கலக்கியது பிரியங்கா
பேசத் தெரியாத பெரிசுகள் பைத்தியமாய் பேட்டிகொடுக்கிற போது
புதிதாய் வந்த ராகுல்என்னமாய் விடைக்கிறான்
வேஷ்டி வேஷம் இல்லாத இளைய மாறனை எல்லோருக்கும் பிடிக்குது
இளைய ராஜீவ்கள் அநேகம்
இளைய மன்மோகன்கள் அநேகம்
இளைய வாஜ்பாய்கள் அநேகம்
இளைய சந்திரபாபுக்கள் அநேகம்
இளைய துபேக்கள் அநேகம்
இளைய கலாம்கள் அநேகம்
இளைய கல்பனா சாவ்லாக்கள் அநேகம்
வயதானவர்களெல்லாம் கொஞ்சம் இளைஞனுக்கு வழி விடுங்கள்
வாழ்ந்துவிட்டவனல்ல அவன்
வாழப்பிறந்தவன்
ஆக்கமாய் சிந்திப்பான்.
(இதை எழுதியது பழுத்த காங்கிரஸ்காரனோ அல்லது பிஜேபிவாலாவோ அல்ல.ஒரு இளைஞன்.ஆனாலும் இன்றைய இந்திய IT எழுச்சிக்கு ராஜீவும்,அயல்நாட்டு முதலீடுகளுக்கு மன்மோகனும் முக்கியகாரணமானவர்கள் என நம்புபவன்.யாரோ தான் பண்ணினதாய் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்.அதை அப்படியே KEEP IT UP பண்ணியதில்,பாக்கிஸ்தான் கூடாலான உறவில் நம்ம வாஜ்பாய் கலக்கீட்டார்.உண்மையிலேயே INDIA SHINING மாதிரி(?)தெரியுது)
வகை:சலோ இந்தியா
Download this post as PDF