*எல்லா ஆணும் ஒரு நாள் கல்யாணம் பண்ணியே ஆகவேண்டும்.பின்னே என்ன சிலர் மட்டும் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாய் இருக்கலாமா?
*பிரம்மாச்சாரிகள் கட்டாயம் அதிகம் வரிகட்ட வேண்டும்.பின்னே அநேகர் நொந்து போய் இருக்கும் போது இவர்கள் மட்டும் சந்தோஷமாய் இருப்பது நியாயமல்ல-ஆஸ்கார் வைல்ட் (மனுஷன் அனுபவபட்டிருக்கார்)
*தீவிரவாதம் பற்றி நான் கவலைப்படுவதில்லை.எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடமாகிறது-ஸாம் கினிசன்
*உங்கள் மனைவியின் பிறந்த நாள் நினைவுக்கே வருவதில்லையா?.அதை நினைவில் வைக்க ஒரு எளிய வழியுள்ளது.ஓரு முறை மறந்து பாருங்கள். :)
*திருமணமானவன் ஆயுள் அதிகம் என்பதெல்லாம் உண்மை அல்ல.ஆயுள் அதிகம் போல் தோன்றுகிறது.அவ்வளவுதான்.
*ஒரு ஆண் தனியாய் இருக்கும் வரை அவன் முழுமை அடையாதவன்.திருமணம் ஆனவுடன் சகலமும் முடிந்துபோய்விடுகிறது.
*பணத்துக்காக கல்யாணம் பண்ணாதே.இப்போதெல்லாம் சுலபத்தில் கடன் (அட்டை)கிடைக்கிறது.
*கார் கதவை மனைவிக்கு ,கணவன் திறந்து விடுகிறான் என்றால் ஒன்றை புரிந்து கொள்.ஓன்றில் கார் புதுசு.இல்லை மனைவி புதுசு.
*காதலுக்கு கண்ணில்லை.கல்யாணம் கண்ணை திறந்து விடுகிறது.
*பெண்துணை இல்லாத ஆண்,சைக்கிள் இல்லாத மீன் போல-யூ2
*இரண்டு விதத்தில் பெண்ணைவிட ஆண் கொடுத்து வைத்தவன்.தாமதமாக திருமணம் செய்கிறான்,சீக்கிரமாய் செத்துப்போகிறான் -ஏச்.எல்.மென்கென்
*பிரம்மச்சாரிகளுக்கு பெண்களைப் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கிறது.இல்லை என்றால் அவர்களும் திருமணம் செய்திருப்பார்களே-ஏச்.எல்.மென்கென்
*நானும் எனது மனைவியும் இருபதுவருடங்கள் சந்தோசமாய் வாழ்ந்தோம்.அப்புறமாய் இருவரும் சந்தித்தோம்.- ரொட்னெய் டய்ன்செர்பீல்ட்
*ஒரு நல்ல மனைவி தான் தவறு செய்யும் போது தன் கணவனை மன்னித்து விடுகிறாள்.-மில்டொன் பெர்லெ
*மகிழ்வான மணவாழ்வின் ரகசியம்,இன்னும் ரகசியமாகவேயுள்ளது- கென்ன்ய் யங்மன்
*உன்மனைவியை எவனாவது திருடினால் விட்டுவிடு.அப்படி தான் சரியாய் பழிவாங்கவேண்டும்.
*கடந்த இருவருடமாக என் மனைவியிடம் நான் பேசவில்லை.அவளை ஏன் நான் தடுக்க வேண்டும்.
*என் பெண்நண்பி என்னை கவர்ச்சியாய் இருக்க சொன்னாள்.இன்னும் இரு பெண்நண்பிகளை சேர்த்துக்கொண்டேன்
*கிரெடிட் அட்டை காணாமல் போன என் நண்பன் போலீஸில் புகார் செய்யவேயில்லை.மனைவியைவிட குறைவாய் தான் அத்திருடன் செலவளிக்கிறானாம்
*கல்யாணம் என்னும் கல்லூரியில் ஆண் தன் Bachelors பட்டத்தை இழக்கிறான்.பெண் தன் Masters பட்டத்தை பெறுகிறாள்.
முதலாம் ஆண்டு ஆண் பேசுகிறான் பெண் கேட்கிறாள்
இரண்டாம் ஆண்டு பெண் பேசுகிறாள் ஆண் கேட்கிறான்
மூன்றாம் ஆண்டு இருவரும் பேசுகிறார்கள் பக்கத்து வீட்டார் கேட்கின்றார்கள்.
*"எல்லாமேஇருந்தது.கைநிறைய பணம்,தேவதை போல ஒரு பெண்,அழகிய வீடு..ஊப்ஸ்..எல்லாமே ஒரே நாளில் போய்விட்டது."
"என்னாச்சு"
"என் மனைவி அதை கண்டுபிடித்துவிடடாள்"
*ஒருவன் சொன்னான் "என் மனைவி ஒரு தேவதை."
இன்னொருவன் சொன்னான் "நீ அதிஷ்டகாரன்.என் மனைவி இன்னும் உயிரோடு இருக்கிறாள்"
வகை:நகைச்சுவை
Download this post as PDF