உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, April 12, 2004

தகவல்திங்கள்-12

DVD தட்டுகள்

இன்றைய தேதியில் DVD தட்டுகள் மிகப் பரவலாக எல்லோருக்கும் இன்றி அமையாததாகிவிட்டது.நல்ல தரமான ஒலி ஒளியுடன் கூடிய பல பழைய,புதிய திரைப்படங்கள் சந்தையில் DVD-யாக சூடாக விற்பனையாகின்றன.வீட்டு திரைக்கூடங்களில் DVD தட்டுகள் முழு திரை தாக்கத்தையும் அளிக்கிறது.(அதாவது Surround,DTS,DigitalDolphy,Wide Screen என இன்னும் பல இத்தியாதிகளுடன்).இன்னொறு விஷயம் DVD என்றாலே திரை படங்கள் மட்டும் என்றல்ல,இசை மற்றும் மென்பொருள் தகவல்கள் கூட சேமித்து வைக்கலாம்.
இங்கே சில கொசுரு தகவல்கள் DVD பற்றி உங்களுக்காக.

-ஒரு சாதரண DVDயால் 7 CD அளவு தகவல் வைத்திருக்கமுடியும்.

-ஒரு சாதரண DVDயால் 133 நிமிட உச்ச தெளிவான ஒலியுடன் கூடிய ஓட்டபடம்,8 மொழிகளில் 5.1 channel Dolby digital surround sound-டோடு வைத்துக்கொள்ளலாம்.கூடவே 32 மொழிகளில் எழுத்துவிளக்கமும்(subtitle) வச்சுக்கலாம்.

-DVD வகைகள்
Single-sided/single-layer 4.38 GB 2 hours
Single-sided/double-layer 7.95 GB 4 hours
Double-sided/single-layer 8.75 GB 4.5 hours
Double-sided/double-layer 15.9 GB Over 8 hours

-ஒற்றை அடுக்கு DVD தட்டு முழு நீள திரைப்படம் ஒன்றை ஒரே நேர் கோட்டில் இட்டால் 7.5 மைல்கள் போகுமாம்.

-DVD-ல் ஓட்டப்படம் MPEG2 முறையில் உள்ளது

-DVD-யிலுள்ள சில முக்கிய கோப்பு வகைகள்
.IFO files -contain menus and other information about the video and audio.
.BUP files -are backup copies of the .IFO files.
.VOB files (for DVD-Video)
.AOB files (for DVD-Audio) are MPEG-2 program streams with additional packets containing navigation and search information

-DVD-ல் ஓட்டப்படம் 4:3 முறையிலோ (சாதாரண தொலைகாட்சிக்காக)அல்லது 16:9 (அகன்ற திரை தொலை காட்சி) முறையிலோ இருக்கும்.

-DVD-ல் UDF மற்றும் ISO-9660 file systems (கோப்புமுறை) பயன்படுத்துகிறார்கள்.

வகை:தொழில் நுட்பம்


Email PostDownload this post as PDF

Related Posts by CategoriesRelated Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்