வித்தியாசமாய் சில இணயதளங்கள்
உண்மையில் சிறுவயதில் பார்ப்பனவெல்லாம் ஆச்சரியமாய் தோன்றும்.சில கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.பலவற்றிக்கு விடை கிடைக்காது.நமது கற்பனையில் எதாவது நினைத்து முடித்திருப்போம்.உதாரணமாக மின்னல் கண்ணைபிடுங்கிக்கொண்டு போய் விடும் என்று சொல்லி மழைகாலங்களில் கண்ணைமூடிக்கொண்டு முடங்கிக்கிடந்தது.மின்சாரம் தொட்டால் அது நம்மை இழுத்துக்கொண்டு போய்விடும்.எங்கே EB அலுவலகத்துக்கு.இப்படியாக பல.இப்படிப்பட்ட உங்கள் சிறுவயது எண்ணங்களை இங்கே நீங்கள் பதிவிக்கலாம் மற்றும் படிக்கலாம்.http://www.iusedtobelieve.com/
ஒரு சின்ன ஆசை.இது எப்படி வேலை செய்கிறது என்று கண்டுபிடிக்கவேண்டும்.உதாரணமாய் ஆகாய விமானம்.அது எப்படித்தான் பறக்கிறது இப்படியாக ஏன்,எப்படி என பல கேள்விகள் எழும்பினால் இங்குவாருங்கள் உங்கள் அநேக கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.http://www.howstuffworks.com/
இணயத்தில் உலாவரும் வதந்திகளுக்காகவே இங்குஒரு அருங்காட்சியகம் வைத்திருக்கிறார்கள்.நேரம் கிடைத்தால் அப்படியே ஒரு சுற்று போய்வாருங்கள் .
http://www.museumofhoaxes.com/
புதிதுபுதிதாக தொழில்நுட்பங்களும்,தொழில்நுட்ப சொற்களும் முளைக்கின்ற காலம் இது.WiFi,iPOD,CRM என்று எதாவது யாராவது சொன்னால் பயந்து விடாதீர்கள். இருக்கவே இருக்கிறது இங்கே அனைத்து சொற்களுக்கும் அழகாக விளக்கம் அளிக்கிறார்கள்.
வகை:பொது அறிவு
Download this post as PDF