Softgrid அல்லது Softricity என்பது இப்போதைக்கு பரவலாக பேசப்படும் buzzword-களில் ஒன்று.அது பற்றி கொஞ்சம் இங்கே.முன்பெல்லாம் ஒரு நிறுவனத்தில் 1000 கணிணிகள் இருந்தால் அந்த 1000 கணிணியிலும் மைக்ரோசாப்ட் ஆபீஸ், ஆக்ரோபாட் ரீடர் இன்னும் பிற அந்தந்த நிறுவனம் சார்ந்த அனைத்து மென்பொருள்களையும் தனித் தனியே ஒவ்வொரு கணிணியிலும் நிறுவ வேண்டும்.இந்த சாப்ட்கிரிட் வந்ததால் இனிமேல் ஒவ்வொரு கணிணியிலும் இப்பயன்பாட்டு மென்பொருள்களை தனித் தனியே நிறுவ வேண்டியதில்லை.ஒரே ஒரு முறை , ஒரு மையமான சாப்ட்கிரிட் செர்வரில் அந்த மென்பொருள்களை நிறுவினால் போதும்.அனைத்து 1000 கணிணிகளும் தங்களுக்கு தேவையான பயன்பாட்டு மென்பொருள்களை அந்த சாப்ட்கிரிட் செர்வரில் இருந்து எடுத்து கொள்ளும்.அதுவும் அவை முற்றிலும் பாதுகாக்கப்பட்ட ஒரு பெட்டியில் உங்கள் கணிணியை கொஞ்சம் கூடத் தொடாமல் ஒரு Virtual registry-யை உருவாக்கி அவை தாமரை இலை மேல் நீர் போல ஓடும்.ஏறக்குறைய சிட்ரிக்ஸ்(Citrix) மாதிரி,ஆனால் அதையும் தாண்டி அருமையான செயல்பாடுகளுடன்).
தொடக்கத்தில் இந்த மென்பொருள் Softricity என்ற நிறுவனத்திடமிருந்தது.மைக்ரோசாப்ட்டின் கவனத்தை ஈர்த்த இந்நிறுவனம் கடந்த ஜூலையில் அதனிடம் விலைபோனது.அது நல்லதோ கெட்டதோ.மைக்ரோசாப்ட் இந்த தொழில் நுட்பத்தை (Application Virtualization) ஆக்கவும் செய்யலாம் அல்லது அழிக்கவும் செய்யலாம்.அதை தானே வரலாறும் சொல்கிறது.
Softricity-உருவாக்கிய நிறுவனத்தின் பெயர்
Softgrid Virtual Application Server-செர்வர் மென்பொருளின் பெயர்
Sequencer-பயன்பாட்டு மென்பொருள்களை இது போன்ற சூழலுக்கு தயார்படுத்த உதவும் மென்பொருள் பெயர்.
SystemGuard-ஒரு மென்பொருளை நிறுவாமலே Virtual registry-ல் ஓட்டும் நுட்பத்தின் பெயர்.
More reading
http://www.softricity.com
Download this post as PDF
No comments:
Post a Comment