உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, February 15, 2007

நீலத்திரை மரணம்

Blue Screen of Death அல்லது bluescreen அல்லது stop error அல்லது BSD error என்பது விண்டோஸ் உலகில் அறியாதோர் இருக்க முடியாது.கணிணி வல்லுனர்களை திகிலூட்டும் இந்த "Blue Screen of Death - நீலத்திரை மரண பழு" என்ற சொற்றொடர் 1991-யிலேயே Erik Noyes என்பவரால் உருவாக்கப்பட்டது.Charles Schwab and Co என்ற நிதி நிறுவனத்தில் அவர் பணியாற்றும்போது தனது வாடிக்கையாளர்களிடையே இந்த விண்டோஸ் பழுதை Blue Screen of Death என்று கூறினார்.அது அப்புறமாய் மிக பிரபல வார்த்தையாகிவிட்டது.1998-ல் COMDEX எனும் மாபெரும் விழாவில் Windows98 ஆப்பரேடிங் சிஸ்டத்தை விண்டோஸ் பயில்வான் பில்கேட்ஸ் உலகுக்கு அறிமுகப்படுத்தும் போது அவர் கண்ணெதிரே மாபெரும் திரையில் Blue Screen வந்து அவர் மானத்தை வாங்கியது.அப்போது "That must be why we're not shipping Windows 98 yet"எனக் கூறி சம்மாளித்தார்.இது போல ஒரு நாளைக்கு 25 மில்லியன் தடவை விண்டோஸ் உலகெங்கும் கிராஷ் ஆகிறதாம்.Blue Screen of Death இருக்கட்டும் Red Screen of Death கேள்விபட்டிருக்கிறீர்களா?
சில விண்டோஸ் விஸ்டா பீட்டா பதிப்புகள் அபூர்வ Red Screen of Death கொண்டிருக்கிறதாம்.இதிலென்ன அபூர்வம் என்கிறீர்களா? :)

Red Screen of Death


காம்டெக்ஸ்98 ல் பில்கேட்ஸ்
http://video.google.com/videoplay?docid=-8363127660275444169

அந்தகால Black Screen of Death


Blue Screen of Death கொஞ்சம் கவர்ச்சியாக :)


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்