சமீபத்தில் மணம் முடித்த புதுமண தம்பதியர் மலைபிரதேசம் ஒன்றுக்கு மகிழ்வாய் தேனிலவு போகப் புறப்பட்டார்கள். அதிகாலையிலேயே தங்கள் நகரத்திலிருந்து கிளம்பிய அந்த பேருந்து கடந்த 8 மணிநேரமாக பயணித்து கொண்டேயிருகின்றது.
பயணிகளெல்லாம் அயர்ந்து தூங்கிகொண்டிருக்க இரைந்து இரைந்து மலைமுகடுகளிலெல்லாம் ஏறிக்கொண்டிருந்த அந்த பஸ் இன்னும் சில மணித் துளிகளில் அந்த குறிப்பிட்ட மலைபிரதேசத்தை சென்றடையும்.
இத்தம்பதியர் குஷியாய் முந்தின நிறுத்தத்திலேயே இறங்கிவிட தீர்மானித்திருந்தனர். அங்கிருந்து அவர்கள் தங்குமிடம் பக்கமாம். அவர்கள் இருவருக்காக பேருந்தும் நின்றது.பேருந்திலிருந்து இறங்கிய தம்பதியர் நடுங்கும் குளிரில் விடுவிடுவென பஸ் நிறுத்தத்தை ஓடினர். படுபயங்கர சத்தம் கேட்டு திரும்பினர்.எங்கிருந்தோ புரண்டோடி வந்திருந்த மாபெரும் மலைப்பாறை ஒன்று இவர்கள் இதுவரை பயணித்து வந்த பேருந்தை முட்டிமோதி மலைச்சரிவில் புரட்டியிருந்தது. பஸ் அல்லோகல மரணக் குரல் எழுப்புவது எங்கும் கேட்டது. "சே பேசாமல் நாமும் அந்த பஸ்ஸிலேயே போயிருந்திருக்கலாம்" என வெறுப்பாய் பேசிக் கொண்டு போனார்கள் அந்த புதுமண தம்பதியர் .
மகிழ்வாய் தேனிலவு புறப்பட்ட அந்த புதுமண தம்பதியர் அவ்வாறு வெறுப்பாய் பேசிக்கொள்ள காரணம் என்ன?
விடைகொடுத்தால் மகிழ்வேன்.
இல்லையேல் விடையை நாளைப் பார்க்கலாம். :)
விடை:
ஒரு வேளை அந்த தம்பதியர் அந்த பஸ் நிறுத்ததில் இறங்காதிருந்திருந்தால் அந்த பஸ் அங்கு நிற்காமல் சென்று கொண்டே இருந்திருக்கும்.
அந்த ஒரு சில நொடிப்பொழுதுகளில் அந்த பஸ் அந்த விபத்து பகுதியை தாண்டி சென்றிருக்கும்.பஸ் விபத்தில் சிக்காமல் இருந்திருந்திருக்கும்.
Download this post as PDF
4 comments:
அவர்கள் வந்ததே தற்கொலை செய்துகொள்ளவோ???
வருகைக்கு நன்றி வல்லிசிம்ஹன் !!
வித்தியாசமான சிந்தனை....
:)
saraLamAna thamizhil
seidhi
pOttAl nanrAga irukkum..vazhthukkaL..Vengrai
முகம்மது பனைக்குழம்
கதை சொன்ன டேரக்டரை கேட்டால் தெரியும்
Post a Comment