சூரியனை ஓயாமல் சுற்றி வந்து கொண்டிருக்கும் சனி போன்ற இயற்கை கோள்கள் நம்மிலே, நம் செயல்பாட்டிலே எந்த வித தாக்கங்களை ஏற்ப்படுத்துகின்றனவென திட்டமாய் தெரியவில்லை. ஆனால் பூமியை ஓயாமல் சுற்றி வந்து கொண்டிருக்கும் மனிதனின் செயற்கை கோள்கள்(Satellite) நம்மிலே, நம் செயல்பாட்டிலே அதிக தாக்கங்களை ஏற்ப்படுத்தி வருகின்றது உண்மையே.
உதாரணத்துக்கு சொல்லப்போனால் பூமி உருண்டையை இடைவிடாது சுற்றி வரும்
QuickBird, WorldView I போன்ற சேட்டலைட்கள் இன்றி கூகிள் எர்த் நமக்கு கிடைத்திருக்காது.
Global Navigation Satellite System-ன் அந்த 24 சேட்டலைட்கள் இன்றி அமெரிக்க கார்களின் GPS வேலை செய்யாது.
INSAT 4B இல்லாமல் சன் டிவியின் SunDTH நேரடி சேட்டலைட் வழி ஒளிபரப்பு சேவை நமக்கு கிடைத்திருக்காது.
இப்படி டிவி சேனல்களை கேபிள்களின்றி நாடுமுழுதும் ஒளிபரப்ப ,சுற்று புற சீதோஷண நிலையை மணிக்கு மணி தெரிந்துகொள்ள , கடலடி இண்டர்நெட் கேபிள் வெட்டுண்டு போனாலும் அவசரத்துக்கு இணையம் மேய, நமக்கப்பாலுள்ள அண்டங்களை ரொம்ப அவசியமாய் ஆராய, எதிரியின் தந்திர நகர்வுகளை கவனமாய் நோட்டமிட இப்படி பல உதவிகள் இந்த செயற்கை கோள்களால்.
அந்த காலத்து போர் தந்திரம் ஆரம்ப குறி எதிரியை புற உலகிலிருந்து துண்டிப்பது. சாலைகளை துண்டித்தல், பாலங்களை உடைத்தல், துறைமுகங்களை தகர்த்தல் இப்படி.
வரும் கால போர் தந்திரமும் இப்படியே தான் இருக்கும். ஆனால் சற்று வித்தியாசமாக. பகைநாடு பற்றிய தகவல்களை அள்ளித்தரும் இந்த சேட்டலைட்களை நொறுக்குதல்.
சீனா, ரஷ்யாவின் கருத்துப் படி ஆத்திர அவசரமேயில்லாமல் விண்வெளியில் சும்மா ஒடிக்கொண்டிருந்த ஒரு செயற்கைகோளை ஏவுகணை(SM-3) வைத்து சுட்டு அமெரிக்கா ஒரு வெற்றிகரமான ஸ்டார்வார் (Starwar) ஒத்திகை பார்த்துள்ளதாம்.
இதையே தான் சீனாவும் (KillSat) முன்பு ஒருமுறை சாதித்துள்ளது.
ஆக இன்னொரு யுத்தம் வந்தால் முதல் இலக்கு வானமாய் தான் இருக்குமோ...?
சிறு வயதில் படித்த சிறுவர் பாடல் ஒன்று நினைவுக்கு வருகின்றது.
வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னல் ஒரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூரல் ஒரு தோரணம்
தூய மழை காரணம்
எட்டுத் திசை காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
பார் முழுதும் வீட்டிலே
பறவை கூட கூட்டிலே
தவளை மட்டும் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே
அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை"
மனசு ஏனோ இலகுவாகி சில்லுனு இருக்குது.
வேதாளம் "மந்திரக்கள்ளி மாயம்" தமிழ் சிறுவர் படக்கதை இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Veethaalam Phantom Mandhirak Kalli Maayam Tamil Children Comics pdf ebook Download. Right click and Save.Download
Download this post as PDF