உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, February 04, 2008

இலக்கியம்?

"சீக்கு பிடித்த கோழி மாதிரி" என்ற வாக்கியத்தில் வரும் சீக்கு எனும் வார்த்தை Sick எனப்படும் ஆங்கில
வார்த்தையிலிருந்து இங்கு தமிழுக்கு வந்ததா அல்லது தமிழிலிருந்து அங்கு போனதா? சுத்தமாய் தெரியவில்லை.

இத்தனைக்கும் இதுமாதிரியான வார்த்தைகளை படித்த இலக்கியவாதிகள் பயன்படுத்துகின்றார் என நாம் கூறவில்லை. ஆங்கிலம் துளிகூடா அறியா கிராமத்து தமிழச்சிகள் பயன் படுத்தும் வார்த்தைகள் தாம் இவை. இன்னொரு உதாரணம் கூட நாம் இங்கே கூறலாம். நம் சிறு வயதில் பக்கத்து வீட்டு மூதாட்டி அடிக்கடி சொல்லும் வார்த்தை"பிளசர்" கார் (Pleasure Car). அதாங்க அந்த கால அம்பாசிடர் கார் வண்டி. இப்படி பிற மொழி நம்மில் கலந்ததா அல்லது நம்மொழி நாடு கடந்ததாவென அறியாமல் அநேக அன்னிய வார்த்தைகளை நாளும் அதுவும் "தமிழ் தெரிந்தோர் மட்டும்" கூட பயன் படுத்திக் கொண்டுத்தான் உள்ளனர். நான் எம்மாத்திரம்?

இன்னும் சொல்லப்போனால் அலமாரி, அன்னாசிப்பழம், சப்பு , சாவி ,ஜன்னல், கோப்பை ,குசினி ,தபால், கக்கூஸ் ,வராந்தா,மேசை இதெல்லாம் கூட அயல் மொழி வார்த்தைகள் தானாம். திறவுகோல், சாளரம், அஞ்சல் என சுத்த தமிழ் எல்லோரும் பேச கேட்கத் தான் ஆசை. முடிகிறதில்லையே.

எனது முந்தைய பதிவை படித்த முகம் காட்டா நண்பர் ஒருவர் நாம் இங்கே இலக்கியம் எழுதுகின்றோம் என நினைத்துக் கொண்டு தெளிவான தமிழில் "Sariyana tamizh Kolai - Ayyoko"என்பதாக பின்னூட்டமிட்டிருந்தார்.உண்மை தான் நண்பா. மன்னிக்க வேண்டுகின்றேன். :)

காகிதப்படங்களை புகைப்படமெனலாம்.Digital Photos-களை ஒளிப்படமெனலாம் எனக் கூறி அறிவுவுறுத்திய நண்பர் பிரேம்ஜிக்கு இங்கு நன்றிகள் பல.


மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை "தமிழ் தாய் வாழ்த்து" ஒலி வடிவில் Manonmaniam P Sundaram Pillai Tamil Thai Vaalthu Song Audio Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



9 comments:

Anonymous said...

இளையராஜாவின் வெளியீடான how to name it மற்றும் nothing but wind ஆல்பம்களை paarthean super.thodarattum pkpyin seavai
thanks pkp
rsankar
singapore

Tech Shankar said...

http://www.esnips.com/nsdoc/d7df7047-f4be-4bf0-ae6b-e1a410faccb1

மூலதனம் - எழுதிய கார்ல்மார்க்ஸ் - வாழ்க்கை வரலாறு

மென்னூல்

http://www.esnips.com/nsdoc/d7df7047-f4be-4bf0-ae6b-e1a410faccb1

சுதாகர் said...

how to name it மற்றும் nothing but wind ஆல்பம் லிங்க் கொடுத்ததற்கு நன்றி

R Kamal said...

Thanks a lot for Ilayaraja's How to name it Music.Your site is very informative and useful.please keep up the great work.Cheers!

Anonymous said...

Unga full name ennanga PKP?
PKP-Pattukkottai Prabagar endru thaan
enakkuth theriyum.

Ok.You tube video-kkalai .flv file download seithu .mpg yaga SUPER converter-il seithu CD yil paarthaal,Quality poor-aaga irukkirathae?
your suggestions please

பிரேம்ஜி said...

நண்பர் PKP க்கு வணக்கம். என்னிடம் 350 MB அளவில் ஒரு AVI வீடியோ உள்ளது. அதை எவ்வாறு சுருக்குவது. மேலும் அதை நான் edit செய்ய விரும்புகிறேன். தயவு செய்து விளக்கவும். நன்றி.

Anonymous said...

tamil vaazthu paadalaiththaan naan thedik kondiruntheen, tamilnation.og yil appaadalaik ketten, aanal pathivirakkam seyya mudiyaamal ponathu.. akkuraiyai ningal nivarti seithu viththeerkal.. migavum nandri anna..

Tech Shankar said...

http://www.esnips.com/nsdoc/ef7341b3-7cb3-4a54-82a1-9315216f8306

Thamizmantram Nandhavanam E-Book 4 U

http://www.esnips.com/nsdoc/ef7341b3-7cb3-4a54-82a1-9315216f8306

Unknown said...

please visit www.TamilKudumbam.com (தமிழ்குடும்பம்.காம்) This is a simple website with lots of information on Veg, non-veg cooking (with photos) and several other hobbies for the family.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்