உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, October 27, 2008

யூடியூப் வீடியோ வழங்கிய திருப்பம்

புத்திசாலித்தனமான கிளவர் ஐடியா எதாவது உங்களிடம் இருக்கின்றதா? எதாவது டிப்ஸ் அல்லது மைண்ட்புளோயிங் டிரிக்ஸ் உங்களிடம் இருக்கின்றதா? உடனே அதை வீடியோவாக்கி யூடியூபில் போஸ்ட் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையே மாறிப்போகலாம்.

இப்படித்தான் ஜானி எனும் 28 வயது இளைஞன் Wii remote controller-ஐயும் head tracking glass-களையும் வைத்து எப்படி மிக எளிதாக விர்சுவல் ரியாலிட்டி செய்வது என செய்து காட்டி அதை 5 நிமிட வீடியோவாக்கி யூடியூபில் போட்டான். இன்றைக்கு அவ்வீடியோ 6 மில்லியன் தடவை பார்க்கப்பட்டிருக்கின்றது. இது போல இவனுடைய இன்னும் சில இன்னோவேடிவ் ஐடியாக்களையும் வீடியோவாக்கி யூடியூபில் போட்டான். இவன் கண்டுபிடிப்புகளை கண்டு ஆச்சரியத்தில் வியந்த பெரிய பெரிய வீடியோ கேம் நிறுவனங்களெல்லாம் இவனை மொய்த்தன. சீக்கிரத்தில் இவனைப்பற்றிய பேச்சு மைக்ரோசாப்டிலும் அடிபட ஆரம்பித்தது. ஜானியை மைக்ரோசாப்டில் வேலைக்கு இழுக்க பில்கேட்சை அணுகியபோது அவருக்கு ஏற்கனவே இவனை பற்றி தெரிந்திருந்ததாம். அவருக்கும் ஜானியை வேலைக்கு எடுப்பதில் ரொம்ப சந்தோசம். இப்போது ஜானி Microsoft - Applied Sciences துறையில் ஒரு Researcher. ஐந்து நிமிட யூடியூப் வீடியோ இவன் வாழ்க்கையையே மாற்றிப்போட்டுவிட்டது.

ஒருவேளை இவன் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதியிருந்தால் அதை ஒரு சில பேர் மட்டுமே படித்திருப்பர். ஒரு தொழில்நுட்ப அரங்கில் பேசியிருந்தால் மேலும் சில நூறு பேர் மட்டுமே கேட்டிருப்பர். ஆனால் இவன் குரல் மைரோசாப்ட் வரை எட்ட யூடியூப் ஒரு ஊடகமாக அமைந்தது. மாபெரும் கூட்டத்தையும் எளிதில் எட்ட இன்றைக்கு இருக்கும் வசதிகள் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே. லாவகமாய் பயன்படுத்துவோர் வெற்றி பெறுகின்றனர். வெட்டிவேலைகளில் புகுவோர் சிக்கலில் வீழ்கின்றனர்.










நீ திருந்து..
நாடே திருந்தும்...

ரமணிச்சந்திரன் நாவல் "இடைவெளி அதிகமில்லை" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Ramanichandran Idaiveli Athigamillai Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



9 comments:

Tech Shankar said...

Great Post.

Innovated thinking is must for every software guys as well as others too.

A Blog for Edutainment said...

புதிய சிந்தனைகளை அள்ளி அள்ளித் தருவதில் எங்கள் நண்பர் பிகேபி முதலிடம் வகிக்கிறார்.

Tech Shankar said...

நல்ல செய்தி. யூட்யூபின் பயன் இப்போது புரிகிறது நண்பரே

இனியாள் said...

Super idea thaan, aana oru nalla vishayam kooda video edukura alavukku theriyathee....
PKP unga pdfs ethuvume save aga mattenguthu......

Jafar ali said...

//லாவகமாய் பயன்படுத்துவோர் வெற்றி பெறுகின்றனர். வெட்டிவேலைகளில் புகுவோர் சிக்கலில் வீழ்கின்றனர்.//

'நச்'ன்னு ஒரு அறிவுரை! வாழ்த்துக்கள்!!

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பதிவு பிகேபி சார்... உங்களால் எப்படி முடிகின்றது...

வீணாபோனவன் said...

தங்களின் கூற்றை மிகவும் வழிமொழிகிறேன். நன்றி.

Anonymous said...

Hi PKP,

when i tried to download the ebook, i got the following error msg.
Error in count on line 578.
./mydrive/Tamil Audio Books/Ilayaraja - How to name it/Chamber welcomes Thyagaraja.mp3 is already defined.


Pls look into it.

Muhammad Ismail .H, PHD., said...

/லாவகமாய் பயன்படுத்துவோர் வெற்றி பெறுகின்றனர். வெட்டிவேலைகளில் புகுவோர் சிக்கலில் வீழ்கின்றனர்.//

இதைத்தான் தொழில்நுட்பம் என்பது இருபக்கம் கொண்ட கத்தியை போன்றது. இக்கத்தியை கொண்டு ஆதமுடைய மக்களுக்கு (மனித இனம்) ஆப்பிளை அறுத்து உண்ண கொடுக்கலாம். அல்லது ஆதமின் ஆப்பிளையே (குரல்வளை) அறுத்து ஆப்பு வைக்கலாம். நன்மை, தீமை எனப்படுவது எல்லாம் செயல்களின் (கர்மா/அமல்) அடிப்படையிலேயோ.


with care and love,

Muhammad Ismail .H, PHD,

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்