நம்ம ஊர் அநேக முத்துக்களை உலகுக்கு அளித்துள்ளது. அத்தகைய முத்துக்களை பற்றி அறிந்து கொளல், நிச்சயம் வளர்வோர்க்கும், வளர விளைவோர்க்கும் ஓர் உற்சாக மூட்டலாய் அமையும்.
சிங்காரச் சென்னையின் சைதாப்பேட்டையிலுள்ளது "Great Lakes Institute of Management". இங்கு நிர்வாகவியல்(Management) படித்து வெளியேறும் ஒவ்வொரு "Great Lakers" மாணவர்களுக்கும், அடுத்த நிமிடமே பெரும் பெரும் நிறுவனங்களில் கைநிறைய சம்பளத்தோடு பணிக்கமர வாய்ப்புகள் வருகிறனவாம்.இந்த வருட கணக்குப்படி இங்கிருந்து வெளியேறிய 100% மாணவர்களும் சராசரியாய் 9.3 லட்ச ரூபாய்கள் சம்பள ஆபர் லெட்டர்களோடு வெளியேறியிருக்கின்றார்கள். மற்ற பிஸினஸ் ஸ்கூல்களுக்கெல்லாம் பொறாமையாய் குறைந்த கால அளவில் வழங்கப்படும் தரமான கல்வியால் கடந்த மூன்று ஆண்டுகளில் அபாரமாய் வளர்ந்திருக்கிறது இந்த கல்வி நிறுவனம்.
இதை நிறுவிய பாலா வி பாலசந்திரன் (Bala V Balachandran) 1960-களில் அண்ணாமலை பல்கலைகழகத்தில் புள்ளியியல் படித்து அமெரிக்கா பறந்தவர். சீக்கிரத்தில் அமெரிக்காவில் புகழ்பெற்ற பிஸினஸ் ஸ்கூலான சிக்காகோவிலுள்ள கெல்லாகில் (Kellogg School of Management) ஆசிரியராக சேர்ந்தார். இன்று அவர் US Air Force உட்பட அநேக பெரு நிறுவனங்களுக்கு நிர்வாகவியல் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றார். நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் ஒரு பிரிலியன்ட் அமெர்க்க இந்தியர். அநேக தொழில் அதிபர்கள் இவர் வார்த்தைகளில் அப்படி நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். மாணவர்கள் எல்லாம் அன்பாய் இவரை "அங்கிள் பாலா" வெனவே அழைக்கின்றனராம்.
"பணத்துக்காக இந்நிறுவனத்தை நான் துவக்க வில்லை,ஏன்னா எல்லோருக்கும் கடைசியில் மிச்சமாவது செத்துபோதலும்,பிணமாகுலும் தான்" என்கின்றார்.
பின்குறிப்பு:இங்கு பயிலும் எல்லா மாணவருக்கும் சீன மொழி கற்றல் கட்டாயமாம்.அங்கிள் பாலாவின் தூரப்பார்வை புரிகின்றதா?
More Details
http://www.glakes.org
Download this post as PDF
1 comment:
சீன மொழி - அவசியம் நன்றாகவே புரிகிறது.
Post a Comment