யாரை எது எப்போது இன்ஸ்பையர் செய்யும் எனத் தெரியாது. விமானத்தில் கண்ட ஒரு விமானியின் கெம்பீரம் ஒரு சிறுவனை விமானியாக இன்ஸ்பையர் செய்யலாம். "அக்கினி சிறகுகள்" படிக்கும் இஞ்சினியரிங் மாணவன் ஒருவனை அப்துல்கலாம் இன்ஸ்பையர் செய்யலாம். நாளை ஒரு சுனித்தா வில்லியம்சாக அல்லது சானியா மிர்ஸாவாக சன் டிவி செய்திகள் சிறுசுகளை இன்ஸ்பையர் செய்யலாம். அது போலத் தான் நாமும் இங்கு சொல்லவருவது வளரும் சிலரை உற்சாக மூட்டவேயன்றி ஹைடெக்கெல்லாம் பேசவல்ல. "இன்னும் தீர்வுகாண, சாதிக்க, கண்டுபிடிக்க வென அநேகமுள்ளது தம்பி. நம்பி முன்னுக்கு வா நீ" என நம்பிக்கையூட்டத்தான்.
billgates@microsoft.com எனும் முகவரியிலிருந்து ஒரு சீரியஸ் மெயில் வந்தால் ஒரு நிமிடம் ஆடிப்போய்விட மாட்டீர்களா என்ன? அது போன்ற போலி ஈமெயில்களை எளிதாக நண்பர்களுக்கு அனுப்பி விளையாட்டுக்காட்டலாம்.
எப்படி? எல்லாம் Cdonts-க்கே வெளிச்சம்.உதாரணமாய் Cdonts பயன்படுத்தப்படும் கீழ்கண்ட சுட்டியில் To: -ல் நண்பர் ஒருவரின் ஈமெயில் முகவரியையும் From: -ல் நண்பரின் Girlfriend-ன் ஈமெயில் முகவரியையும் கொடுத்து "Send Message" கிளிக்கினால் அடுத்த நாள் நீங்கள் டைப்பிய மெயில் சாரம்சத்தை பொருத்து உங்கள் நண்பர் தனது Girlfriend-டிடம் கொதித்துப்போவார் அல்லது கூலாய்ப்போவார். கண்டிப்பா அந்த மெயில் உங்கள் கைவரிசையென அவருக்கு தெரியவாய்ப்பில்லை.
இது போல போலி ஈமெயில்கள் அனுப்புவது மிக எளிது.இதனை தவிர்க்க வழியுள்ளதா என விவரம் தெரிந்தவர்கள் தான் சொல்லவேண்டும். அதுவரைக்கும் நாம கவனமா தான் இருக்கோணும்.
http://www.charlestonhunting.com/classifieds/admin/XcCDONTS.asp
சுஜாதாவின் "கற்றதும் பெற்றதும்" மென்புத்தகம் Sujatha Katrathum Petrathum Tamil ebook Download. Right click and Save.
http://static.scribd.com/docs/44htrjwt6cj31.pdf
Download this post as PDF
3 comments:
டெஸ்ட் பண்ணி பார்க்கிறேன் பேர்வழின்னு, பில்கேட்ஸ் ஐடியில் இருந்து என்னொட ஐடிக்கு மெய்ல் அனுப்பறதுக்கு பதிலா, என்னோட ஐடியில் இருந்து பில்கேட்ஸோட ஐடிக்கு அனுப்பிட்டேன். ஒன்னும் பிரச்சனை வராதுல்ல?!?!
//"இன்னும் தீர்வுகாண, சாதிக்க, கண்டுபிடிக்க வென அநேகமுள்ளது தம்பி. நம்பி முன்னுக்கு வா நீ"//
உண்மைதான் கேபி.... உங்களால் நாங்கள் நிறைய இன்ஸ்பையர் ஆகிவிட்டோம்.. உங்கள் பணி தொடரட்டும்...
பல பிரட்சனைகளை உருவாக்கும் வகையில் இந்த சுட்டி உள்ளது.. இதற்கு தீர்வே இல்லையா?? யாராவது சீக்கிரம் சொல்லுங்கப்பா??
Post a Comment