உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, September 20, 2007

துப்பாக்கியேந்திய ரோபோக்கள்

1987-களில் மலேசியாவில் மெசின் ஒன்றில் பொத்தானை தட்டினால் கரன்சி கரன்சியாய் நோட்டுகள் கொட்டுதாம்பாவென ATM மெசின்களை பற்றி ஆச்சர்யமாய் பேசினார்கள். இன்று கும்பகோணம் T S R Big Street வரை ATM வந்துவிட்டது. இது போலத் தான் ரோபோக்கள் கதையும் அமையும் போலும். இன்று அவை ஜப்பானியர்களின் சொந்தம் போல கொண்டாடப்படுகின்றது. நாளை அவை நம் வீட்டிலும் குடிவரலாம். அதென்னவோ பலருக்கும் கஷ்டமான வேலை வீட்டை சுத்தம் செய்வது போலத் தெரிகின்றது.அதனாலோ என்னவோ வீடுகளுக்கு வந்துவிட்ட/வரவிருக்கும் முதல் domestic ரோபோக்கள் தானாகவே வீட்டை vacuum clean பண்ணுவதோடு அப்படியே வீட்டுக்கு செக்குரிட்டியாகவும் இருக்கும்.

வீட்டில் இப்படியிருக்க நாட்டில் ரோபோக்களின் முகம் அசூர முகமாகி வருகின்றன. SWORDS
(special weapons observation remote reconnaissance direct action system) எனப்படும் அமெரிக்க ரோபோக்கள் M249 இயந்திரதுப்பாக்கிகளோடு ஈராக் நகர வீதிகளில் வரவிருப்பதாக தகவல்.தொலைவில் எங்கோ இருந்து மனிதனால் ரிமோட்டாய் இயக்கப்படும் இந்த ரோபாட்டுகள் எதிரி வந்தால் சுட்டு தள்ளிவிடுமாம். அதன் X-ray kit அக்கம் பக்கம் வருவோர் பை,பாக்கெட்டுகளை ஸ்கேன் செய்துகொண்டே வருமாம். முடியாத பட்சத்தில் அது தன்னைதானே அழித்துக் கொள்ளவும் செய்யும்.

இது போன்ற robotic army உருவாக்க ஆய்வு நடைபெற்று வருவதாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கடந்த வருடம் மே-யில் சொல்லியிருந்தார். தென்கொரியாவும் இதுபோன்ற killerbots Soldiers உருவாக்க ஆர்வமாய் இருக்கின்றதாம். ஆனைப்படை, குதிரைப்படை, வரிசையில் இனி காலாட்படைக்கு பதில் ரோபாட்படை போடவேண்டுமாக்கும்.


இயக்குனர் சேரனின் கதை "டூரிங் டாக்கீஸ்" மென் புத்தகம் உங்கள் இறக்கத்துக்காக."Touring Talkies" Tamil Cinema Director Cheran Story ebook for Download. Right click and Save.
http://static.scribd.com/docs/a2eo3ye2bfuhl.pdf


Email PostDownload this post as PDF

Related Posts by CategoriesNo comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்