மும்பையின் அடுக்குமாடி ஒன்றில் நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளேயுள்ள ஒரு பிரிண்டரை மதுரை மாசி வீதியிலிருந்து பயன்படுத்தலாமாம். எப்படி? இதற்கு printeranywhere எனும் மென்பொருள் வேண்டும்.இது இப்போதைக்கு முற்றிலும் இலவசமாய் கிடைக்கின்றது. இம்மென்பொருள் உங்கள் கணிணியிலும்,தொலை கணிணியிலும் முறையாய் நிறுவப்பட்டிருந்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் உலகின் ஒரு மூலையிலுள்ள ஒரு குறிப்பிட்ட பிரிண்டரை பயன்படுத்தலாமாம்.எல்லாம் இணைய இணைப்பு முன்னேற்றங்கள் கொடுக்கும் சவுகரியங்கள் தாம். கோப்புகளை அனுப்ப மின்னஞ்சல்கள் , அட்டாச்மென்டகள் எனப் பல வழிகள் இருப்பதால் பெரிதாய் இதன் பயன் ஒன்றும் எனக்கு புலப்படவில்லை.ஆனாலும் யாருக்காவது இந்த தீர்வு அவசியமாய் தேவைப்படலாம்.
Download Here
http://www.printeranywhere.com/
"30 நாட்கள் 30 வகை சாதங்கள்" சமையல் மென் புத்தகம் உங்கள் இறக்கத்துக்காக.
"30 days 30 Variety Rice" Tamil recipe ebook for Download. Right click and Save.
http://static.scribd.com/docs/l28jq6s7n7y1e.pdf

No comments:
Post a Comment