உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, September 05, 2007

புளூடூத்தின் வாரிசாக Wibreeமொபைல் போனை உங்கள் வயர்லெஸ் headset-டோடு இணைக்க, இரு மொபைல்போன்களிடையே தகவல் பறிமாறிக்கொள்ள,இரு மடிக்கணிணிகளிடையே கோப்பு பறிமாறிக்கொள்ளவென புளூடூத்தின் பயன்பாடு இன்னும் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. இப்படி மொபைல்போன், கைக்கணிணி, மடிக்கணிணி போன்ற மிகப்பெரிய (?) கைச்சாதனங்களுக்கு மட்டுமே புளூடூத் லாயக்காம், மிகச் சிறிதாக உள்ள கைக்கடிகாரங்கள், பேனா ,கழுத்தில் தொங்கும் நெக்லஸில் டாலராய் கிடக்கும் இரத்த அழுத்த மானிட்டர், இது போன்ற நுண்சாதனங்களால் புளூடூத்தை பயன்படுத்தி கணிணியோடோ அல்லது செல்போனோடோ தொடர்பு கொள்ள இயலாது. ஏனெனில் புளூடூத்துக்கு இந்த நுண்சாதனங்களில் பெரிதாய் ரூம் வேண்டும்.பெரிதாய் ரூம் கொடுத்தால் அப்புறம் கைகடிகாரத்தின் அளவும் பெரிதாகிவிடும்.

கடிகாரம் போன்ற நுண்சாதனங்களிலிருந்தும் கணிணியுடன் ரேடியோ அலைகளால் பேச புதிதாய் வந்திருக்கும் டெக்னாலஜியே வைப்ரீ.இதை
"Ultra Low Power Bluetooth Technology" என்கின்றார்கள். செல்போன் பயில்வான் நோக்கியாவின் நெடு நாளைய கனவு படைப்பு இது. இந்த Wibree ரேடியோ அலைகளால் இனி நுண்பொருட்களும் கணிணியுடனோ அல்லது மொபைல்போனுடனோ பேசலாம்.
பேச சிறிதாய் மட்டுமே மின்சாரம் எடுத்து கொள்வது இதன் பலம்.இப்போதைக்கு 10 மீட்டர் வரை இதன் அலைகள் போகுமாம்.அதிகபட்சம் 1MBbs.

சமீபகாலமாய் விளையாட்டு களத்தில் விளையாண்டவாரே உயிரைவிடும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இது போன்ற வீரர்களின் உடல் நிலையை வயர்லெஸ்ஸாய் கண்காணிக்கவும், வீட்டில் நடமாடிக்கொண்டிருக்கும் வயதானவர்களின் உடல் நிலையை வயர்லெஸ்ஸாய் கண்காணிக்கவும் இது போன்ற டெக்னாலஜிகள் சீக்கிரத்தில் உச்சாணிக்கொம்பில் ஏறலாம்.பொறுத்திருந்து பார்ப்போம்.

More details
http://www.wibree.com/


Email PostDownload this post as PDF

Related Posts by CategoriesNo comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்