உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, January 12, 2010

கற்கள் சொல்லாத கதைகள்

சில வரலாற்று கதைகளுக்கு நாம் சான்றுகளை தேடிக் கொண்டிருக்க சில இடங்களில் அதுவே மாறி இருப்பதுண்டு. என்னென்னமோ சான்றுகள் இருக்கும் கதைகள் கிடைப்பதில்லை. இப்படித்தான் இங்கிலாந்தில் நட்டமாய் நிற்கும் கற்களின் கதைகளும்.Stonehenge என்கின்றார்கள். டன் கணக்கில் எடைகொண்ட இக்கற்கள் எக்காலத்தில் எதற்காக இவ்வளவு அழகாக செதுக்கப்பட்டு இப்படி கதவுசட்டம் போல் நிற்கவைக்கப்பட்டிருக்கின்றனவோ தெரியவில்லை. இன்னமும் பல வரலாற்றறிஞர்களுக்கு இது ஒரு புரியாத புதிர். கொஞ்சம் சிறியதாக இருந்திருந்தால் அந்த காலங்களில் வழிப்போக்கர்கள் ஓய்வெடுக்க அமைக்கப்பட்டிருந்த அம்பலங்கள் முன்பாக அல்லது ஆல மரத்தடிகளின் முன்பாக நிறுவப்பட்டிருக்கும் சுமைதாங்கியாக எடுத்துக்கொள்ளலாம். இவ்வளவு பெரிய கல்லை கிமு காலத்திலேயே அப்படி அலாக்காக தூக்கி மேலே நிறுத்தி வைத்திருக்கின்றார்கள் என்றால் ஏன் எப்படி எதற்காக என பலருக்கும் புரிந்ததில்லை. இறந்தோர் நினைவாகவாக இருக்கலாம் என சிலர் பேச உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா? புரிந்தால் நீங்களும் வரலாற்றறிஞர் ஆகலாம்.

எங்களூர் அருகே மருத்துவாமலை அல்லது மருந்துவாழ்மலை என்றொரு மலை உண்டு. மூலிகைகளால் நிறைந்தது. அனுமான், இலங்கையிலிருந்த ராமனின் சகோதரனான லட்சுமணனின் காயத்துக்கு கட்டுபோட மகேந்திரகிரியிலிருந்து கொண்டு போன சஞ்சீவி மலையின் ஒரு துண்டு வழியிலேயே கீழே விழுந்து அது இப்போதைய மருத்துவா மலையானதாக சொல்வார்கள். இன்றைக்கு மார்த்தாண்டம் என அறியப்படும் இடம் முன்பு தொடுவெட்டி எனப்பட்டது. இதிகாசம் ஒன்றில் யாரோ ஒருவரின் தொடை இங்கு வைத்து வெட்டப்பட்டதால் அது தொடைவெட்டி அல்லது தொடுவெட்டி என்றானதாக இன்னொரு கதை உண்டு. சில விசயங்களில் நமக்கு அவ்வளவாய் ”விவரம்”தெரிவதில்லை.

இலங்கை தீவின் தமிழீழப்பகுதியில் திருநெல்வேலி, நாகர்கோவில் என்ற பெயரில் ஊர் இருப்பதாக கேள்விபட்டிருக்கின்றேன். இங்கிலாந்தில் ஒரு மெட்ராஸ் உண்டாம். அமெரிக்காவிலும் ஒரு salem இருக்கின்றது. மஸ்கட்டிலும் ஒரு மதுரா உண்டு. இண்டரெஸ்டிங் தான். கீழே நீங்கள் காணும் சில படங்கள் இராமாயண இதிகாசத்தில் வரும் இடங்கள். பெரும்பாலும் இலங்கையிலுள்ளன.

ராமன்... Oops ராவணன் சீதையை வைத்திருந்ததாக சொல்லப்படும் அசோக வனம்
Updated:
மாற்று கருத்துக்கள்:
இப்படம் கர்நாடகா மாநிலம், பெல்லாரி மாவட்டம் ஹம்பியிலுள்ள விஜய விட்டாலா (Vijaya-Vitthala) கோவில் வளாகத்தின் ஒரு பகுதி எனவும் இக்கோவில் 15-ஆம் நூற்றாண்டில் விஜயநகரபேரரசர்களால் கட்டப்பட்டதாகவும் இக்கோவிலுக்கும் இராமாயணத்துக்கும் சம்பந்தம் இல்லை எனவும் சில குறிப்புகள் கூறுகின்றன.. ஆனாலும் இராமாயணத்தில் வரும், குரங்கு அரசான கிஷ்கிந்தையுடன் ஹம்பி அடையாளம் காணப்படுவது உண்டு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


அனுமானால் அழிக்கப்பட்டதாக சொல்லப்படும் ராவணனின் அரண்மனை


சுக்ரிவனின் குகைகள்.
Updated:
மாற்று கருத்துக்கள்:
”இங்கே குறிப்பிட்டிருக்கும் படங்களில், 'சுக்ரிவனின் குகைகள்' எனக் குறிப்பிட்டிருக்கும் படங்கள் தவிர்த்து, வேறெதுவும் இலங்கையில் இல்லை” என ஒரு இலங்கை நண்பர் தெரிவிக்கின்றார். சீகிரிய குகை என அழைக்கப்படும் இலங்கையின் பிரசித்தமான அக் குகை, இலங்கை அரசன் காசியப்ப ஒளிந்திருந்த இடமாக உள்ளது. அந்த ஓவியங்கள் அவரால் வரையப்பட்டு சீகிரியக் குன்று ஓவியங்கள் என அறியப்பட்டுள்ளன. சீகிரிய பற்றிய மேலதிக விபரங்களுக்கு,
http://en.wikipedia.org/wiki/Sigiriya

இன்னொரு நண்பர் ”இங்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ராவணன் சீதையை வைத்திருந்ததாக சொல்லப்படும் அசோக வனம், அனுமானால் அழிக்கப்பட்டதாக சொல்லப்படும் ராவணனின் அரண்மனை போன்ற இலங்கையில் இல்லை..'சுக்ரிவனின் குகைகள்' எனக் குறிப்பிட்டிருக்கும் படங்கள் காசியப்ப மன்னனால் குடைந்து கட்டப்பட்ட சிகிரியாக் குகைமாளிகை தந்தையான தாதுசேனனை உயிருடன் சமாதிகட்டி கொன்றுவிட்டு, அந்த அவலத்தை மறந்து வாழ அவனால் அமைக்கப்பட்டது.” என்கின்றார்.




மூலிகைகள் கொண்ட சஞ்சீவிமலை
Updated:
மாற்று கருத்துக்கள்:
இது பற்றிய ஒரு நண்பரின் கருத்து: “மூலிகைகள் கொண்ட சஞ்சீவிமலை என நீங்கள் குறிப்பிட்டிருப்பது adam's peak என ஆங்கிலத்திலும் "சிவனொளிபாத மலை" என தமிழிலும் "சிறீபாத" என சிங்கள மொழியில் அழைக்கப்படும் மலை. அவ் மலையில் சிவனுடைய பாதம் பதிந்த அடையாளம் இருப்பதாக தமிழர்களும், புத்தருடைய பாத அடையாளம் இருப்பதாக சிங்களவர்களும் ஆதாமின் பாத அடையாளம் இருப்பதாக கிறீஸ்தவர்களும் நம்புகின்றனர்.. ”
நண்பர்களுக்கு நன்றி.


வானரசேனைகளும் ராமனும் சேர்ந்து உருவாக்கிய பாலத்திற்கு உதவிய மிதக்கும் கற்கள்


வானரசேனைகளும் ராமனும் சேர்ந்து உருவாக்கிய அந்த பாலம்


சஞ்சீவி மலையின் ஒரு துண்டு இன்றைய மருத்துவாமலையாக கன்னியாகுமரி மாவட்டத்தில்



”இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.
ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.”
-நபிகள் நாயகம்








கமழ் மு.சாலோமோன் “டேவிட் பேசுகிறான்” கிறிஸ்தவ தமிழ் மென்புத்தகம். Kamal M.Solomon "David Pesukiran" Christian ebook in Tamil Pdf Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



16 comments:

ஸ்ரீராம். said...

PKP சார்,
ராமன் சீதையை தன் நெஞ்சில் அல்லவா வைத்திருந்தார்...ராவணன்தான் சீதையை அசோகவனத்தில் சிறை வைத்தான்..

ஸ்ரீராம். said...

படங்கள் அற்புதம். எங்கிருந்து எடுத்தீர்கள்? ஆதாரம் எப்படி சொல்லப் பட்டிருக்கிறது?
நேரில் பார்க்க முடியாத இடங்களை பார்ப்பதில் ஒரு த்ரில். அழகான இடங்கள்.

கல் மிதப்பது மாதிரித் தெரியவில்லையே...

M.Rishan Shareef said...

அன்பின் நண்பருக்கு,

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படங்களில், 'சுக்ரிவனின் குகைகள்' எனக் குறிப்பிட்டிருக்கும் படங்கள் தவிர்த்து, வேறெதுவும் இலங்கையில் இல்லை.

சீகிரிய குகை என அழைக்கப்படும் இலங்கையின் பிரசித்தமான அக் குகை, இலங்கை அரசன் காசியப்ப ஒளிந்திருந்த இடமாக உள்ளது. அந்த ஓவியங்கள் அவரால் வரையப்பட்டு சீகிரியக் குன்று ஓவியங்கள் என அறியப்பட்டுள்ளன.

சீகிரிய பற்றிய மேலதிக விபரங்களுக்கு,

http://en.wikipedia.org/wiki/Sigiriya

Nimal said...

அசோக வனம், ராவணனின் அரண்மனை என்று நீங்கள் குறிப்பிட்ட இரண்டைத்தவிர ஏனையவற்றை நான் அறிந்திருக்கிறேன். இந்த இரண்டு படங்களும் குறிக்கும் இடங்களின் தற்போதைய பெயர்களை அறியமுடியுமா...?

நாகராஜ் said...

pathivu arumai,pugaipadangal kanakidaikathavai

nandrigal

Anonymous said...

மஸ்கட்டிலும் ஒரு மதுரா உண்டு.
அது முத்ரா என்று அழைக்கப்படுகிறது.

மாயா said...

வணக்கம் அண்ணா !

இங்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ராவணன் சீதையை வைத்திருந்ததாக சொல்லப்படும் அசோக வனம், அனுமானால் அழிக்கப்பட்டதாக சொல்லப்படும் ராவணனின் அரண்மனை போன்ற இலங்கையில் இல்லை..

'சுக்ரிவனின் குகைகள்' எனக் குறிப்பிட்டிருக்கும் படங்கள் காசியப்ப மன்னனால் குடைந்து கட்டப்பட்ட சிகிரியாக் குகைமாளிகை தந்தையான தாதுசேனனை உயிருடன் சமாதிகட்டி கொன்றுவிட்டு, அந்த அவலத்தை மறந்து வாழ அவனால் அமைக்கப்பட்டது.

மூலிகைகள் கொண்ட சஞ்சீவிமலை என நீங்கள் குறிப்பிட்டிருப்பது adam's peak என ஆங்கிலத்திலும் "சிவனொளிபாத மலை" என தமிழிலும் "சிறீபாத" என சிங்கள மொழியில் அழைக்கப்படும் மலை. அவ் மலையில் சிவனுடைய பாதம் பதிந்த அடையாளம் இருப்பதாக தமிழர்களும், புத்தருடைய பாத அடையாளம் இருப்பதாக சிங்களவர்களும் ஆதாமின் பாத அடையாளம் இருப்பதாக கிறீஸ்தவர்களும் நம்புகின்றனர்..

padmanabang said...

anna arumaiyana historical photos i need more from u by padmanaban

Anonymous said...

படங்கள் அற்புதம்...pkp sir

சர்வசித்தன் said...

அன்பின் பிகேபி அவர்களுக்கு,
தாங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் வேறுபல இடங்களின் பெயர்களும், இந்தியாவில் உள்ள இடங்களை ஞாபகமூட்டுவனவாக உள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள ‘நல்லூர்' (சென்னையில் நங்கநல்லூர்; ஆந்திரவின் நெல்லூர்); கிளிநொச்சியில் உள்ள ‘திருவையாறு', இராமநதபுரம்' இப்படி இவை குறித்து ஓர் நூலே எழுதலாம்.அது மட்டுமல்ல, இன்று சுமத்திரா என அழைக்கப்படும் இந்தோநேசிய தீவின் முன்னைய பெயர், நன் மதுரை ( சு- நன்; மத்ரா-மதுரை மருவி மதுரா ஆகிப் பின் மத்ரா ஆயிற்றாம்).தங்கள் வலைப்பதிவினை திரு ராமகிருஷ்ணன் அவர்களது ‘விரும்பிப்படிக்கும் வலைப்பதிவுகள்' வாயிலாகத் தெரிந்து வாசித்து வருகிறேன். நன்றாக உள்ளது.பல தகவல்களை ஒருங்கு திரட்டி அழகாக எழுதுகிறீர்கள். வளர்க,வாழ்த்துக்கள்.

Praveenkumar said...

பி.கே.பி. சார் வணக்கம். நான் படித்ததில் மிகவும் பிடித்த(படிப் படியாய் படி http://www.scribd.com/doc/24806405/Padi-Padiyai-Padi-Book)இப்புத்தகத்தினை தாங்கள் படித்து அனைவருக்கும் பயன்படும் என்று கருதினால் தங்களது இலவச மென்புத்தகம் பகுதியில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்களால் இப்புத்தகம் அனைவருக்கும் பயன்படட்டும் எனும் நல்லெண்ணத்துடனும், ஆசரியரின் அனுமதியுடனும், பிரவின்குமார்.

HK Arun said...

//இங்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ராவணன் சீதையை வைத்திருந்ததாக சொல்லப்படும் அசோக வனம், அனுமானால் அழிக்கப்பட்டதாக சொல்லப்படும் ராவணனின் அரண்மனை போன்ற இலங்கையில் இல்லை..//

சீதையை இராவணன் வைத்திருந்ததாகக் கூறப்படும் இடம் இலங்கையில் உள்ளது. Sita Eliya எனும் பெயருடன் உள்ளது. அங்கே சீதையின் சிலையும் உள்ளது. இன்னும் இராவணன் நீர்வீழ்ச்சி என்றும் ஒன்று உள்ளது. ஆனால் அவை தமிழரின் ஆய்வுக்கு உற்படுத்த முடியாத சிங்களவர் பிரதேசங்களில் உள்ளன.

இராவணனின் வழித்தோன்றல்களாகக் கூறிக்கொள்ளும் சிங்கள மக்களும் உள்ளனர்.

சான்றுகள்:
http://www.lankalibrary.com/heritage/sita.htm

http://travel.mapsofworld.com/sri-lanka/sri-lanka-waterfalls/ravana-ella.html

நன்றி

HK Arun said...

சீகிரிய குகை ஓவியங்களும் தமிழரின் தொன்மையான ஓவியக் கலையைப் பறைச்சாற்றுவதாகவே உள்ளன.

இராச ராச சோழன் காணொளியில் 8.00 - 9.30 பார்த்தால் புரியும். http://www.youtube.com/watch?v=SnANjdReAlY

குறிப்பாக சிங்களவர் பொட்டு வைத்தல், மூக்கு குத்துதல் போன்ற பழக்க வழக்கங்கள் அவர்களிடம் இல்லாத நிலையில் இவை தமிழரின் ஓவியக் கலை என்பதையே பறைச்சாற்றுகின்றன.

Unknown said...

அன்பு நண்பரே இதன் மூலம் தாங்கள் எதை கூற விரும்புகிறீர்கள். உங்கள் கணிணி மூளையையும் ஆரியம் முளைவிடுவது போல் தெரிகிறதே. இது தாங்களின் அறிமுகமா அல்லது சுயரூபமா? அருமையாக வேலை செய்கிறது சாணக்கிய மூளை. கட்டுரை இந்துத்துவம்... தத்துவம் இஸ்லாம்... இணைப்பு கிருஸ்த்தவம்... இது மதச்சர்ரபற்ற நிலையாக தெரியவில்லை. எதையோ நீங்கள் உறுதிபடுத்துவதாக தெரிகிறது. அந்த பதிவை நீக்கிவிடுங்கள். இல்லையெனில் பலரது புக்மார்க்கிலிருந்து உங்கள் வலைதளத்தை நீக்கநேரிடும். இதுவரை பயன் பெற்றவன் என்பதனால் நன்றியுடன் சமூக சுத்தி

Anonymous said...

The Ramayana is an ancient Sanskrit epic and an important part of the Hindu canon. The Ramayana narrates the story of Rama’s wife Sita, being abducted by Rāvana the demon (Rākshasa) king of Lanka; the war between Rama (Sita’s husband) and Ravana, and Ravana’s subsequent defeat by Rama.

There are many places in Sri Lanka associated with the Ramayana.

http://www.tourslanka.com/ramayana-sri-lanka.php

Sri Lanka Government Approves Ravan A Part Of Their History- Ravan’s Coffin Available- Pushpak Viman- 5 Air Ports- Sita Goli- Sri Lanka Preparing CD For Dissemination- Knowledge Awareness-

By Professional Engineer Suraj Singh Abu Dhabi

Anonymous said...

In Indonesia also there is small island called "MADURA" Recently government of Indonesia build a bridge between Java Island and Madura Island

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்