உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, October 04, 2006

ரஜினியும் அஜாக்ஸூம்


அஜாக்ஸ் (Ajax) என்பது Asynchronous JavaScript and XML என்பதின் சுருக்கம்.இது ஒரு தனி தொழில் நுட்பமல்ல.கலவை தொழில்நுட்பம்.அதாவது Asynchronous
JavaScript+CSS+DOM+XMLHttpRequest எல்லாம் சேர்ந்து அமைத்த கூட்டணி ஆட்சி.
பொதுவாக நாம் கொடுக்கும் சாதாரண http கட்டளைகள் அதற்கு தேவையான சமயம் எடுத்து செர்வர் போய் விடையெடுத்து வந்து கொடுக்கும்.நம்மூர் செய்திதாள் போல.தேர்தல் முடிவுக்கு விடியும் வரை காத்திருக்க வேண்டும்.

அஜாக்ஸ் தொழில் நுட்பமானது அப்படி அல்ல.அது எப்படி இயங்குகிறதென்றால் சாதாரண http கட்டளைகள் விடையெடுக்க செர்வருக்கு போயிருக்கும் வேளையில் அஜாக்ஸ் எந்திரம் இடையில் அமர்ந்து பயனர்க்கு இடைவிடாது தகவலளித்து கொண்டேயிருக்கும்.நம்மூர் சன்நியூஸ் போல. உடனடி தகவல்கள்.ஆனாலும் ரெஸல்ட் நாளைதான் தெரியும். என்றாலும் அஜாக்ஸ் சூடேற்றி கொண்டேயிருக்கும்.பயனருக்கு குஷி.
Seamless results என்கிறார்கள்.


இது பற்றி மேலும் சில எளிய தகவல்கள் இங்கே
http://adaptivepath.com/publications/essays/archives/000385.php

இணையத்தில் அஜாக்ஸின் பயன்பாட்டை அனுபவித்துபாருங்கள் இங்கே

அஜாக்ஸ் இயக்கும் ஆங்கில அகராதி
http://www.objectgraph.com/dictionary/

அஜாக்ஸ் இயக்கும் IP to location மென்சாதனம்
http://www.seomoz.org/ip2loc/ip2loc.php

அஜாக்ஸ் இயக்கும் டொமைன் பெயர் தேடல் எந்திரம்
http://instantdomainsearch.com/

இந்த சூப்பர் தொழில் நுட்பம் பற்றி 90 களிலேயே நம்மூர் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்கள் "பாஷா" திரைபடத்தில் மிக தெளிவாக கூறியிருந்தார்."அஜக்குன்னா அஜக்குதான்" என்று. :)


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



6 comments:

சீமாச்சு.. said...

எப்படியோ தலைப்புக்கிட்ட கொண்டு சேர்த்துடறீங்க..


:))

சீமாச்சு...

Unknown said...

:)))

Anonymous said...

Very simple explanation about Ajax in Tamil. I have already added you to my favorite tamil blog list.

Sorry dont know how to comment in Tamil.

Keep it going :)

பழூர் கார்த்தி said...

நல்ல ஓரு தகவலை கொண்டு சேர்க்க சிறிது மசாலா சேர்க்கத்தான் வேண்டும் :-))

ரஜினி அப்படித்தான் இங்கே, நோக்கத்தில் வெற்றி, வாழ்த்துக்கள் !!

***

தகவலுக்கு நன்றி !!

***

நானும் ரஜினியை பாத்துத்தான், இங்க வந்தேன், ஹி..ஹி...

PKP said...

வருகைக்கு நன்றி சீமாச்சு,டேவ்,ரவி மற்றும் சோம்பேறி பையன்.
ஏதோ லேசா மசாலா தூவி பார்த்தேன் அவ்ளோதான். :)
நன்றி நன்றி

அறிஞர். அ said...

நல்லா காலாய்கிறீங்க.

நான் ஒருதொடர் எழுதுவதாய் சொன்னேன் முடியவ்வில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்