உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, October 13, 2006

தமிழ் பாட்கேஸ்டிங்

வழக்கமான ஆன்லைன் ரேடியோ போலல்லாது எப்போது வேண்டுமானாலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கேட்டு மகிழ தோன்றியிருப்பவை தான் பாட்காஸ்டிங் எனப்படும் ஒலி கோப்புகளின் அணிவகுப்பு.ஆப்பிள் ஐபாடிலிருந்து உண்டான பெயர்.இது ஒருவர் உருவாக்கிய பாடலாக இருக்கலாம் அல்லது நகைசுவை,குறு நாடகம்,இசை,செய்தி,தகவல் ஏன் பிரசாரமாகக் கூட இருக்கலாம்.No rules No regulations.பெரும்பாலும் MP3 வடிவத்தில் காணலாம்.

பாட்காஸ்டிங் செய்ய என்ன வேண்டும்?முதலில் ஒரு மைக்ரோ போன் வேண்டும்.உங்கள் கணிணியில் ஏற்கனவே அமந்துள்ள மைக்ரோபோனை உபயோகபடுத்தினாலும் Audio Technica 3035 Microphone அல்லது Edirol R-9 போன்ற மைக்ரோ போன் நல்ல தரமான ஒலிப் பதிவை தரும்.
அப்புறமாய் ஒலி கோப்புகளோடு விளையாட அதாவது record audio, edit MP3 files, cut, copy, splice மற்றும் mix sounds செய்ய இலவச மென்பொருள் Audacity இங்கிருந்து இறக்கம் செய்து கொள்ளலாம் http://audacity.sourceforge.net.மிக உயர்தர எடிட்டிங்கு-க்கு Sound Forge Audio Studio software-ஐ முயலலாம்.

உங்கள் பாட்காஸ்டிங்கில் கலந்து வழங்க இனிய இசைகளை இங்கிருந்து இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.காப்பிரைட் பற்றி பயப்பட தேவையில்லை.
http://music.podshow.com
http://www.podsafeaudio.com
http://www.audiofeeds.org

சொற்பொழிவு பாட்காஸ்டிங்கு bit rate 48 - 56k Mono வாகவும் இசை பாட்காஸ்டிங்கு 63 - 96k Stereo-வும் வைத்தல் தகும்.உயர் bit rate (around 160kbps) இசை பாடல்களுக்கு நல்லது.வசன பாட்காஸ்டிங்களுக்கு நல்லதல்ல.முடிந்தவரை சிறிய அளவு கோப்பாக இருத்தல் நலம்.எனில் பயனர் இறக்கம் செய்ய எளிது.

ID3 tag-ல் உங்களின் பெயர்,தலைப்பு,வகை குறித்து கொள்ளவும்.தேடல் மற்றும் உங்களை பற்றி அறிதல் எளிதாகும்.
அவ்ளோதான் ஒலிவலைப்பூ-வில் அதாங்க ஆடியோ பிளாகில் போட உங்கள் பாட்காஸ்டிங் ரெடி!!

உதாரணமாய் இங்கே பாருங்கள் தமிழ் பாட்காஸ்ட்களின் அணிவகுப்பை

http://odeo.com/tag/tamil

http://search.singingfish.com/sfw/home.jsp

Make Tamil Podcasting Online Radio Station

அப்டேட்:
திரு.சுந்தர் ராம்ஸ் அறிமுகபடுத்திய சக வலை பதிவாளர் நடத்தும் தமிழ்பாட்காஸ்ட் வலையகம் பார்க்க http://www.tamilpodcaster.com/
http://tamilpodcaster.blogspot.com/


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



4 comments:

Anonymous said...

ஒரு சக வலை பதிவாளரும் தமிழ் வலையொலி நிலையத்தை நடத்துகிறார். பார்க்க http://www.tamilpodcaster.com/
http://tamilpodcaster.blogspot.com/
-சுந்தர் ராம்ஸ்

PKP said...

நன்றி சுந்தர் ராம்ஸ்!

Jay said...

நன்றி அண்மைக் காலங்களில் பி.பி.சி பாட்காஸ்டிங்கைக் கேட்டேன் இன்று தமிழ் பாட்காஸ்டிங் பற்றியும் அறிந்து கொண்டேன் நன்றிகள்.

PKP said...

வருகைக்கு நன்றி மயூரேசன்!!

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்