உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, October 09, 2006

ஆன்லைன் தமிழர்கள் மொத்தம் எத்தனை பேர்?

இன்றைய நிலையில் உலகெங்கும் எத்தனை ஆன்லைன் தமிழர்கள் இருக்க முடியும்? அந்த அபூர்வ எண்கள் நமக்கு கிடைக்க கிடக்கிறதா?.பார்க்கலாம்.உலகளாவிய தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 80 மில்லியன் என்கிறார்கள்.இவர்களில் எத்தனை பேர் ஆன்லைன் உலகில் வருகிறார்கள்?

இந்திய அளவில் 2007 மார்ச்சில் 33 மில்லியனாக இருந்த வலைமக்கள் தொகை இந்த செப்டம்பரில் 37 மில்லியனாக எம்பியிருக்கிறது என்கிறது IAMAI -The Internet and Mobile Association of India-வின் சர்வே.

இது அடுத்த மார்ச்சில் 42 மில்லியனாகவும்,2008 மார்ச்சில் 54 மில்லியனாகவும் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சிறு நகர ,குறு நகர வலைமக்களின் எண்ணிக்கை 142 சதவீதமாக ஏறி இருப்பது தான்.அநேகமான சீக்கிரமாக அரசு சார்ந்த சேவைகள் ஆன்லைன் ஆகும்போது இந்த எண்ணிக்கை இன்னும் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.பழைய email, chat மற்றும் IM -வோடு புது blogs, P2P, video on demand and online gaming-சேர்ந்து நம்மூர் வலை பயன்பாடு சீக்கிரத்தில் களை கட்டப்போகிறது என நம்பலாம்.

இப்போதைக்கு அமெரிக்க வலைமக்கள் தான் மிக அதிகமாம் 153 மில்லியன்.அதை தொடர்ந்து சீனா,ஜப்பான்,ஜெர்மனி வருகிறார்கள்.

இனி தமிழுக்கு வருவோம்.எனக்கு தெரிந்து இப்போதைக்கு தமிழில் முதலிடத்தில் இருக்கும் வலையகம் தினமலர்.காம் dinamalar.com அலெக்ஸா தரத்தில் 66-வது இடம்.( ஈநாடு eenadu.net தெலுங்கு நாளேடு 52 வது இடத்திலும்-அதிக வெளிநாடு வாழ் ஆந்திரைட்ஸ் காரணமோ? ,மசாலா Debonairblog.com 14 வது இடத்திலும்-நம்ம மக்களின் மசாலா ரசனை காரணமோ? உள்ளது குறிப்பிட தக்கது).
தினமலர்.காம் சொல்லும் எண்கள் தினம் 3 லட்சம் பார்வையாளர்கள்.http://www.dinamalar.com/webtariff.htmசில தமிழ் வலையகங்களை மேய்ந்தபோது தினம் 1000 தாண்டும்.வலைபூக்கள் நிலை 100 களில்.
வலைபதிவோர்காக வலைபதிவர்களை கொண்டு வலைபதிக்கப்படுதல் தான் இன்றைய தமிழ் "வலைநாயக" நிலை.

ஆனாலும் சில ஆச்சர்ய புள்ளி விவரங்களில் தமிழ் வலைபதிவு உலகம் இந்திய அளவில் முன்னுக்கு நிற்கிறது புலனாகிறது.
எடுத்து காட்டாக http://india.blogstreet.com/directory.html#City பார்வையிட்டால் சென்னை இந்திய வலைபதிவு உலகில் முந்தி நிற்கிறது
"தமிழ் blog" மற்றும் "हिन्दी blog" கூகிள் தேடலில் தமிழ் எண்கள் முந்தி நிற்கிறது.என் கணிப்பு அநேக இந்திகாரர்கள் ஆங்கிலத்தில் எழுதி காசு பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான்.என்னவாயினும் இது வரை தமிழில் வலை பதிவோர்,ஒன்றில் எதோவொரு வெறியில் (? )எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.தமிழ் பற்றாய் (அல்லது வேறு பற்று)கூட இருக்கலாம் அல்லது நேரப்போக்குகாக (I mean hobby) எழுதிக்கொண்டிருக்கலாம்.

சன் டிவி தமிழர்கள் -அதாவது பேச,புரிய தெரியும்-படிக்க தெரியாத புது வகை தமிழர்களை நாம் இக்கணக்கில் exclude பண்ணியாகவேண்டும்.

3 லட்சம் பேரில் 100 பேர்தான் வலைப்பூ பக்கம் வருகிறார்கள் என்றால் எங்கிருக்கிறது ஓட்டை?


Email PostDownload this post as PDF

Related Posts by Categories8 comments:

வெற்றி said...

நல்ல சுவாரசியமான தகவல்கள்.
மிக்க நன்றி.

- உடுக்கை முனியாண்டி said...

இன்னும் கொஞ்சம் விரிவா எழுதியிருக்கலாம்ன்னு நினைக்கிறேன்.

//3 லட்சம் பேரில் 100 பேர்தான் வலைப்பூ பக்கம் வருகிறார்கள் என்றால் எங்கிருக்கிறது ஓட்டை?// -- இது ஒரு முக்கியமான கேள்வி. நன்றி

வல்லிசிம்ஹன் said...

நல்ல வாக்கியம்.:-)---பேச,புரியும்,படிக்கத் தெரியாத தமிழர்கள்.
இதுதான் தமிழ்நட்டில் 50%இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.


எழுதத் தெரிந்தவர்கள் வெளிநாடு
போய் விட்டார்களோ?

வைசா said...

நல்ல தகவல்கள். நன்றி PKP.

வைசா

வடுவூர் குமார் said...

பேசினா கொஞ்சம் புரியும்.பேச கொஞ்சம் தெரியும்.படிக்க??
இப்படி பல பேர் இங்க இருக்காங்க.

PKP said...

வெற்றி! முனியாண்டி!!வல்லிசிம்ஹன்!!! வைசா!!!!வடுவூர் குமார்!!!!! அனைவருக்கும் நன்றி

தமிழ் எழுத படிக்க தெரியாத படிப்பறிவில்லாதோர் கூட்டம் பெருங்கூட்ட மெனில்
தமிழ் எழுத படிக்க தெரியாத ஆனால் "படித்த" மக்கள் கூட்டமும் பெருகிவருகிறது என்பதும் உண்மை.பெங்களூர்,சென்னை மற்றும் எல்லைகளில் களில் இது சகஜம்.இக்கூட்டத்தில் ஒலிஒளி ஊடகங்கள் ஊடுருவும் அளவு எழுத்து ஊடகங்கள் like newspapaer,web sites ஊடுருவமுடிவதில்லை.
இது பிற்காலத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்ப்படுத்தும் என புரியவில்லை.

மீண்டும் நன்றி.

Anonymous said...

நான் திணமலர் பக்கமே போறேலப்பா....

PKP said...

அனானி,

அப்படியும் ஒரு கூட்டமா?

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்