பல தமிழ் இணைய இதழ்கள் ஆளுக்கொரு எழுத்துருவை வைத்துக் கொண்டு இன்னும் வலை ஓடிக் (ஓட்டிக்) கொண்டிருக்கிறார்கள்.இதுவரை பலர் உரக்கக் கூவியும் யார் கேட்பது.யூனிக்கோடில் (Unicode) வலை அமைப்பதால் வரும் சாதகங்களை இன்னும் பல முன்னணி தமிழ் இணைய இதழ்கள் அனுபவிக்க தொடங்கவில்லை.பந்தயத்தில் ரொம்ப பின்னாலே.மற்றும் பின்னோக்கியே.பிற்காலத்தில் என்ன இழக்க போகிறார்கள் என பார்ப்போமாயின் முக்கிமாய் இழக்க போவது SEO (Search engine optimization) சங்கதி.ஒவ்வொரு வலை முதலாளியும் தன் வலைபக்கம் தேடல் எந்திரத்தில் மக்கள் தேடும் போது முதலில் வர வேண்டும் என பாடாய்படுகிறான்.அதற்காகவே தோன்றியது தான் SEO துறை.இன்று "அந்துமணி" என கூகிளில் தேடினால்
செந்தழல் ரவி வந்துநிற்கிறார்."அரசு பதில்கள்" என தேடினால் வலைப்பதிவர் அரசு வந்து நிற்கிறார்.தினமும் பெரும் உழைப்பில் உருவாகி சேமிப்பில் இருக்கும் ஆயிரம் ஆயிரம் தமிழ் பக்கங்களை தேட தேடலெந்திரம் உதவி வேண்டாமோ?.அவர்கள் இவ்வகை வருகைகளை நிராகரிக்கிறார்களா? இல்லை யூனிக்கோடில் நம்பிக்கை இல்லையா?.புரியவில்லை.கஷ்டபட்டு தேடிப் பிடித்து தினத்தந்தி வலைபக்கம் வந்துவிட்டு ஜங்க் எழுத்துகளை பார்த்து விட்டு எழுத்து நிறுவ (Font) பொறுமையில்லாமல் அல்லது தெரியாமல் அப்படியே நகர்ந்து போவோர் ஆயிரம்.
இன்னொன்று செய்தியோடை அமைப்பு.RSS வெளீயிடு உள்ள ஜனரஞ்சக தமிழ் இதழ் இல்லவே இல்லை.
RSS -ன் கீர்த்தி நம்மவர்களுக்கு புரிய இன்னும் பல்லாண்டு பிடிக்கும் போலும்.
தொலைக்காட்சி மீடியாக்களை விழுங்கி,அப்புறமாய் வானொலி மீடியாக்களை விழுங்கி இப்போ காகித மீடியாக்களை விழுங்கி கொண்டிருக்கும் சூரிய குடும்பம் தமிழ் இணைய மீடியாவில் மும்முரமாய் இறங்கும் போது "பெஸ்டுகண்ணாபெஸ்டுனு" போட்டி தொடங்கும்.சும்மா நச்சுனு சுவாரஸ்யமாய் இருக்கும்.
ரொம்ப படித்து தளர்ந்திருப்பீர்கள்.ஒரு இன்டரெஸ்டிங் தகவல்.
தினமலம் என ஒரு முறை கூகிளில் டைப்பி பாருங்களேன்......:)
Download this post as PDF
2 comments:
தமிழ் பத்திரிக்கைகள் பயப்படுவது என்னவெனில் அவர்கள் பத்திரிக்கைகளை கணிணியில் கோர்க்கும் குறிகள் Unicode அல்லாதவைகள். Unicode மாறும்பொழுது tanglish ல் டைப்செய்ய வேண்டிவரும். இது பழைய முறையில் பழகியவர்களுக்கு சற்று கடினமே. அதற்கு பதிலாக அவர்கள் உள்ளீடுவதற்கு பழைய குறியீட்டு முறையையே பயன்படுத்தி இணைய பக்கங்களை unicode க்கு மாற்ற முடியும்.
மேலதிக விவரங்களுக்கு என்னை தொடர்புகொள்ளலாம்.
மாஹிர்! உங்கள் பதிவுகளில் அருமையான தொழில்நுட்ப தகவல்களை வழங்கிவருகிறீர்கள்.நன்றி.
நம் பத்திரிகைகள் விரைவில் ஒருங்குறியீட்டுக்கு மாறுவார்கள் என நம்புவோம்.
பின்னூட்டத்துக்கு நன்றி.
Post a Comment