சில வருடங்களுக்கு முன் டேப்ளட் பிஸி (Tablet PC) என்று ஒரு கைகணிணியை அறிமுகப்படுத்திய மைக்ரோசாப்ட் இப்போது Microsoft Surface எனும் பெயரில் புதுசாய் ஒரு டேபிள் பிஸியை (Table PC - Surface Computer ) பல பளாபளா சமாசாரங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. பார்க்க சிறு மேஜை போலுள்ள இக்கணிணியின் மேற்பரப்பிலுள்ள 30 இஞ்ச் வண்ணப் பரப்பில் தான் பயனராகிய நம்மின் மொத்த விளையாட்டுகளும்.No keyboard No mouse. விரல்களாலும் கைகளாலும் இந்த மேற்பரப்பில் நளினமாய் டிஜிட்டல் பொருள்களுடன் உண்மையாய் விளையாடலாம். வண்ணமடிக்கலாம். மேஜைபரப்பிலுள்ள டிஜிட்டல் பொருள்களை கைகளால் நகர்த்தலாம். இன்னும் பலப்பல புரியலாம்.கீழ்காணும் வீடியோவை சொடுக்கி பில்கேட்ஸ் காட்டும் டெமோவைப் பாருங்கள்.ஓரளவு புரியும்.மொத்தமாய் புரிய இந்த வருட முடிவுவரை காத்திருக்க வேண்டும்.அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொது இடங்கள் பலவற்றில் இவற்றின் ஆக்கிரமிப்பு அதிகமாய் இருக்கும் என்று தோன்றுகின்றது. விர்சுவல் ரியாலிட்டியின் கதவை மெதுமெதுவாய் திறந்து கொண்டிருக்கின்றோம்.
