அவசரமாய் அமெரிக்காவிலுள்ள ஒரு நண்பரை தொடர்புகொள்ள வேண்டுமா? நீங்கள் ஒரு மின்னஞ்சல் செய்தால் போதும். அது அமெரிக்காவிலிருக்கும் உங்கள் நண்பரின் அலைபேசியில் குறுஞ்செய்தியாக கிடைக்கும்.அதற்கான வசதி நெடுநாட்களாகவே இருந்து வருகின்றது.ஆனாலும் உங்களில் தெரியாதோருக்கு மட்டும் இத்தகவல் இங்கே.
அதாவது நீங்கள் இலவசமாய் நண்பருக்கு மின்னஞ்சல் வழியாய் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருப்பீர்கள். அதை பெறுவோரின் பில் மட்டும் எகிறிக் கொண்டேயிருக்கும்.
இப்படி SMS செய்ய, உங்களுக்கு தெரிய வேண்டியதெல்லாம் அந்நண்பரின் 10 இலக்க கைப்பேசி எண்ணும் அவருக்கு அலைச்சேவை வழங்கும் நிறுவனத்தின் பெயரும் மட்டுமே.
மின்னஞ்லைத் தட்டியதும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்துங்கள்.
AT&T: 10digitphonenumber@txt.att.net
Verizon: 10digitphonenumber@vtext.com
Sprint: 10digitphonenumber@messaging.sprintpcs.com
T-Mobile: 10digitphonenumber@tmomail.net
Nextel: 10digitphonenumber@messaging.nextel.com
Virgin Mobile: 10digitphonenumber@vmobl.com
Alltel: 10digitphonenumber@message.alltel.com
CellularOne: 10digitphonenumber@mobile.celloneusa.com
Omnipoint: 10digitphonenumber@omnipointpcs.com
Qwest: 10digitphonenumber@qwestmp.com
ஒருவேளை நண்பருக்கு அலைச்சேவை வழங்கும் நிறுவனத்தின் பெயர் தெரியாதிருந்தால் கீழ்கண்ட முகவரியை பயன்படுத்தலாம்.
10digitphonenumber@teleflip.com
கனடாவுக்கு இலவச குறுஞ்செய்தி அனுப்ப http://www.zemble.com
பிறபல ஐரோப்பிய நாடுகளுக்கு இலவச குறுஞ்செய்தி அனுப்ப http://mrtextmessage.com
இந்தியாவில் இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப நண்பர்கள் V.Subramanian மற்றும் Bala chandran எனக்கு கீழ்கண்ட தளத்தை பரிந்துரைக்கின்றார்கள்.
http://indyarocks.com/sms/index.php
நன்றி.
படபடவென இருகர விரல்களாலும் கைப்பேசிவிசைகளை தட்டிக்கொண்டே சாலையில் நடக்கின்றீர்களா? அவ்வப்போது எதிரேயும் பார்த்தல் அது நம்மெல்லாருக்கும் நல்லது. :)
நண்பர்கள் பலர் அநேக கேள்விகளை எனக்கு சுட்டுத்தள்ளியிருக்கின்றார்கள். அதற்கான பதில்கள் நாளை.
ஸர்வதாரி (2008-2009) வருஷ பரந்தாமன் பஞ்சாஞ்கம் தமிழ் வருட நாட்காட்டி. Tamil Year Calender in Tamil pdf format Download. Right click and Save.Download
Download this post as PDF


இப்படி ஒரு அடல்ட்ஸ் ஒன்லி பதிவை நான் வெளியிடுவேனென்று என்றுமே நான் நினைத்ததில்லை. சொல்லவேண்டிய சில காரியங்களை சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தால் இங்கு சொல்கின்றேன். அப்படி நான் ஒன்றும் புண்ணியவான் இல்லை. நமீதா 200ரூவா ஆபாசம் விசிடி பற்றி பதிவுகளில் கேள்விபட்ட உடனே அதிஷ்டமோ என்னமோ அதற்கான சுட்டியும் நம்மிடம் மாட்டிவிடுகின்றது.எல்லாம் 8 நிமிட கப்சா வீடியோக்கள்.
மேலும் பக்கங்கள் புரட்டியதில் சில தகவல்கள் கிடைத்தன.
டிஜிட்டல் கேமரா மூலம் சுடப்பட்ட ஒளிப்படங்களை ஒரே சொடுக்கில் உங்கள் கணிணியின் வால்பேப்பராக்க இன்றைய கணிணிகள் வசதிகொண்டுள்ளன.எந்த படத்தையும் வலது சொடுக்கினால் "Set as Desktop Background" வசதி அப்படத்தை உங்கள் கணிணியின் பிண்ணணி (Wallpaper) படமாக்கும்.
கடந்த இருபது ஆண்டுகளில் விஞ்ஞானம் கண்ட வளர்ச்சி எத்தனை பிரமாண்டம் எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. மேலே படத்தை பார்த்தாலே நன்கு புரியும். 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த 1GB ஹார்டுடிஸ்க்கை தூக்க குறைந்தது இருவர் வேண்டும். இன்றைய 1GB SD டிரைவ் விரல் நுனியில் நின்றுவிடுகின்றது. இது இப்படியேப் போனால் பத்துவருடம் கழித்து விரல் நுனியில் என்ன இருக்கும் என யோசித்துகூட பார்க்க இயலவில்லை. எங்கு போகின்றோம்னும் தெரியலை. எனக்கு அவ்வப்போது மின்னஞ்சல் செய்யும் வலையுலக நண்பர் MSK இப்படியாக எழுதுகின்றார்.
முன்பு போல் அலைப்பேசிகள் இனிமேலும் பேசமட்டுமல்லாது இன்ன பிற காரியங்களையும் கையடக்கமாய் செய்ய உதவும் அளவிற்குவந்துவிட்டன. இணையத்தை மேயமுடிகின்றது, மின்னஞ்சல் பொட்டியை பார்க்கமுடிகின்றது, மென்புத்தகங்களை படிக்கமுடிகின்றது அப்படியே இஷ்ட விளையாட்டுகளை இறக்கம் செய்து பல ஆட்டங்களும் ஆடமுடிகின்றது. முன்பெல்லாம் கணிணிகளில் மட்டுமே முடிந்த பயன்பாடுகளையெல்லாம் இப்போது உள்ளங்கையிலேயே செய்ய முடிகின்றன.
சமீபத்தில் கடலூர் நண்பர் சிவாவிடமிருந்து ஒரு பின்குறிப்பு.
பதிவுகள் போட்டு ரொம்ப நாளாயிற்று. இல்ல இணைய இணைப்பு மக்கர் பண்ணியதால் அதை சரிசெய்யும் வரை அமைதி காக்கவேண்டியிருந்தது. அலுவல் இடத்திலிருந்து பிலாகு பதிக்கும் பாவங்களை செய்யக்கூடாதுவென தனி பாலிசியே வைத்திருக்கின்றேன். மேய்வதோடு சரி. மின்னஞ்சல் வழி தொடர்புகொண்டோரிடம் மட்டும் பேச்சை நிறுத்தவில்லை. 

பலரும் பலவிதமான வழிகளில் சமுதாயத்திற்கு பல சேவைகளையும், தேவையுள்ளவர்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றார்கள். சேவைகளிலே சிறந்த சேவை எது என மகாகவி பாரதியாரை கேட்டால் அவர் சொல்லுவார் "அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்று.
தற்செயலாக இணையத்தில் நீங்கள் பக்கத்தில் காணும் வரைபடத்தை காண நேரிட்டது. இன்று மார்க்கெட்டில் சூடான கணிணி பாஷை எது? எந்த கணிணி புரோகிராமிங் மொழி முந்தி செல்கின்றது? எது பிந்துகின்றது என்பவற்றை இது அழகாய் காட்டுகின்றது. ஜாவா கொஞ்ச நாட்களாகவே சூப்பர்ஸ்டார் தான்.2005-ல் அதற்கு "பாபா" நேரம் போலும். அவ்வருடம் சி அதை முந்தி டாப்பிலிருந்தது. எனினும் பீனிக்சாய் எழும்பி அசைக்கமுடியா கணிணி மொழியாய் ஜாவா இன்று நிற்கின்றதாம். கடந்த வருடம் மூன்றாவது
மனிதனை ஒன்றாயிருக்க விட்டால் அவன் நம்மளையே கவுத்துடுவான்னு நினைச்சதாலோ என்னவோ கடவுள் ஊருக்கு ஊரு அவனிடையே பிரிவினைகளை விட்டு வைத்தான்.



