உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, January 15, 2007

சிவப்பதிகாரம் பாடல் வரிகள் 5 Lyrics


திரைப்படம் : சிவப்பதிகாரம் (2006)
இசை : வித்யாசாகர்
இயக்கம் : கரு பழனியப்பன்
நடிப்பு : விஷால்,மம்தா மோகன்தாஸ்


வரிகள்:
பாடல் - 1
கல்லூரி சாலைக்குள் வந்தோமே


பாடியவர்கள் : கார்த்திக்,ஜாக் ஸ்மெல்லி, சுனிதா சாரதி
இயற்றியவர் : பா.விஜய்

ஆண்
கல்லூரி சாலைக்குள் வந்தோமே
பூமிக்குள் புத பூமி கண்டோமே......
யாரோ போலே நாமும் சேர்ந்தோம் ஒன்றானோம்......
கல்லூரி சாலைக்குள் வந்தோமே....
இன்றோ படிக்கிறோம் ஆனால் நாளை நாமே புத்தகம்
நாளை உலகமே நம்பேர் சொல்லும் இதுவே சத்தியம்
எல்லைகள் இல்லாத மைதானம்
அதில் நாளும் கண்டோமே மெய்ஞானம்
பாதை காட்டும் பாசமும் காட்டும் தந்தை ஒரு கோயில்
ஆயுள் மொத்தம் அவளிடம் உண்டு தாயின் முகச்சாயல்
அன்பை அள்ளி உணவுடன் சேர்த்து அன்னை தருவாளே.

ஆண்
உணவை அள்ளி உறவுடன் சேர்த்து நட்பில் பகிர்வோமே
தோழனாக தோள் தந்த பாதை மரங்களே
தோழியாக வாய் பேசும் கிளிகளே
அசையும் பூக்களும் அசையா தூண்களும்
சுற்றுச்சுவர்களும் நட்பின் சின்னமே (கல்)

ஆண்
கல்வி என்னும் கண்களை திறவும் எங்கள் ஆசான்கள்
கொஞ்சம் திட்டி கொஞ்சலாய் மிரட்டும் தந்தை ஆவார்கள்
நூறு நூறு குறும்புகள் செய்ய பொறுத்துக் கொள்வார்கள்
கல்லைப்போன்ற எங்களைக் கண்டு சிற்பம் செய்வார்கள்
உப்புகாரம் இல்லாத உணவுக்கூடமே
நட்பு அன்பு பூப்பூக்கும் தோட்டமே......
வகுப்பின் ஜன்னலில் வானம் இறங்குமே....
வருகைப் பதிவிலே நட்பும் இருக்குமே (கல்)


Kalluri Saalaikkul Vanthome Kalloori Salaikul Kaarthik, Sunitha Sarathy, Jack Smelly Jack Smelly, Karthik, Sunitha Sarathy


பாடல் - 2
வலியோர் சிலர் எளியோர்தமை

பாடியவர்கள் : ராகுல், கதிர்
இயற்றியவர் : பாரதிதாசன்

ஆண்
வலியோர் சிலர் எளியோர்தமை வதையே புகுவதா?
மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா
கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா
தலையாகிய அறமே புரி சாநீதி யுதவுவாய்
சமமே பொருள் சனநாயகம் எனவே முரசறைவாய்
முரசறைவாய்.............. குழு் முரசறைவாய்......


பாடல் - 3
பொறந்திருச்சு காலம் பொறந்திருச்சு

பாடியவர்கள் : டி.கே. கலா, சைந்தவி, ஜெயமூர்த்தி
இயற்றியவர் : யுகபாரதி

பெண்
பொறந்திருச்சு காலம் பொறந்திருச்சு - நாம
தொட்டுவச்ச அத்தனையும் தொலங்கிருச்சு - ஆச
நட்டுவச்ச நெல்லுப்பயிறு வெளஞ்சிருச்சு - (பாற)

குழு்
நெறஞ்சிருச்சு மனசு நெறஞ்சிருச்சு - நாம
நெத்திப்பட்ட வேர்வையெல்லாம் மொளச்சிருச்சு நித்தம்
நேந்துக்கிட்ட சாமி கண்ணத் தொறந்திருச்சு
பகலிரவா பாடுபட்டு பக்குவமா நீரவிட்டு
கதிரறுக்க கொண்டு வந்தோம் அருவாள - ரேழீ
குதிருக்குள்ள கொட்டிவப்போம் மகசுல.......

ஆண்
நாத்து நடும் வேளையிலே பாத்திருந்த பூமயிலே
காத்திருக்கேன் அறுவடைக்கு நானும் - நீயும்
கண்டுக்காம போறதென்ன ஞாயம்

பெண்
நாக்கொழுகும் நாயகரே நங்கு பலிக்கும் பாதகரே
சோக்கா நீ சாய்க்கிறீயே ஆள - ஊசி
கேக்காம கோக்குறீயே நூல.....

ஆண்
கட்டெடுத்து அடிக்கையிலே

குழு்
ஏலேலங்கடி ஏலேலோ - அப்டி ஏலேலம்படி ஏலேலோ

ஆண்
கஷ்டங்களும் உதிருதுங்க
பொட்டு பொட்டு தங்கமென கொட்டுதுங்க நெல்லுமணி

பெண்
கருக்கருவா குனியிறப்போ களஞ்சியமும் நிமிருதுங்க
பதருயெல்லாம் வெலகுறப்போ பசிவயறு நெறயுதுங்க

குழு்
இது போல இதுபோல தொழிலேது புவிமேல

ஆண்
அழகழகா அறுத்துக்கட்ட அடிச்சநெல்ல அளந்து கொட்ட
மரக்காவ கொண்டு வந்து
இவ நீட்ட - மாமன் சிரிப்பால நொம்புதுங்க கொறமூட்ட

பெண்
உருப்படியா ஒழச்சதில்ல உலகத்தையும் புரிஞ்சிக்கல்ல
துருப்பிடிச்ச ஒன்ன நம்பி வர மாட்டேன் - எந்த
துருப்புச்சீட்டு போட்டாலும் விழமாட்டேன்.....

ஆண்
ஏ மானூத்து மயிலக்காள மாயவரம் செவலக்காள
போல நம்ம வாழ்க்கை ஓடுது
ஒறங்காம பசியோட ஒழச்சோமே வயலோட
வருங்காலம் நலமாகுமே ஏ தங்கமே தங்கம்
ஒறங்காம பசியோட ஒழச்சோமே வயலோட
ஏரோட்டும் பூமி நம்ம அம்மா......

குழு்
வளமிருக்கு நல்ல வளமிருக்கு - இந்த
மண்ணுதானே நம்மளோட குலவிளக்கு - நம்ம
ஒத்துமைய சேத்துவையி விடுதலைக்கு....

Pooranthirichu Kaalam TK.Kala, Saindhavi, Jayamoorthy Poranthirichu Kaalam Ganga, Jayamoorthi, Kala T K, Mahalingam, Saindhavi

பாடல் - 4
அடி சந்திர சூரிய


பாடியவர்கள் : கே.ஏ. குணசேகரன் குழு
இயற்றியவர் : யுகபாதி

ஆண்
அடி சந்திர சூரிய ஜோதி கிளம்பிடும்
சந்தன மலையிலே.....
நட்ட நடு சாமத்து வேளையிலே .....
உன்ன சொத்தங் கொண்டாடிட துடிக்குதடி சித்திர பூமயிலே ......
எந்தன் சித்திரைப் பூங்குயிலே .....
ஒடக்கரை ஓரத்திலே ஒனக்காக காத்திருப்பேன்
ஒன்னோடு நான் ஒன்னா சேரணும்
அதனால நீ என் கண்ணுக்கு முன்னே வந்து நிக்க வேணும்
கண்ணுறங்கும் நேரத்திலே கண்மணியே ஒன் கனவா
கட்டி அணைக்கையிலே தலையணையே ஒன் நெனவா
நீ இருந்தா போதுமடி நித்தம் ஒரு பாட்டெழுத
கண்ணால் கண்டால் முன்னால்
நீ வர பக்கம் வந்தாக்க அனல் பார்வ ஏனோ பாக்குற
செகப்பு கலரு சீமாட்டிப் பொண்ணு
சுண்டி இழுக்குதடி ஒன்னோட கண்ணு
சேந்திடலாம் ஒன்னோட கண்ணு
நீ சேரக்காட்டி நான் மண்ணோட மண்ணு
அடி அத்த மகளே அல்லிக்கொடியே ஆச ரோசாவே
ஒன்ன சுத்தி வரனும் தொட்டுப் பேசனும் தொங்கும்தோட்டமே
மல்லிகப்பூவே மரிக்கொழுந்தே மணக்கும் மல்லிகையே
ஒன்னை அள்ளியெடுத்து அணைக்கச்சொல்லி ஆச துடிக்குது
ஊரு தொண்டுருச்சி ஒத்துமையா நின்னுருச்சி
புள்ள ஒத்துமையா நின்னுருச்சி
நாடு தொண்டுருச்சி என் கட்டான கட்டழகி
இந்த நாட்டுப்புற பாட்டக் கேட்டு குங்கும பொட்டழகி ......

பெண்
மஞ்ச வெயிலடிச்சு மழவாய கட்டுதுல்ல .....
கொஞ்ச வெயில நம்பி தஞ்சமென்னு நானும் வந்தேன்....
மாரந்தையா ஊரு எனக்கு குணவதின்னு பேரு....

Adi Chandira Sooriya Singer : Gunasekaran, Gunavathy, Mahalingam, Muthusamy, Palanisamy Adi Chandira Sooriya K.A.GUnasekaran, Mahalingam

பாடல் - 5
மாரி மகமாயி யம்மா


பாடியவர்கள் : சின்னப்பொண்ணு
இயற்றியவர் : பா. விஜய்

பெண்
மாரி மகமாயி யம்மா மனக்குறைய தீர்க்குமம்மா
இருவெள்ளி வெரதம் சொல்லி எடுத்து வர்றோம் மொளப்பாரி
காத்து மட்டும் வந்து போகும் கட்டப்பொம்மன் கோட்ட போல
வெய்யில் படா ஓலைபின்னி வெதச்சு வச்சோம் மொளப்பாரி
நடுவினிலே பொத்தி வச்ச நல்ல நல்ல ஓட்டில் எல்லாம்
வெதவெதமா பயிர் வெதச்சு வெக்காளிக்கு போடுங்கம்மா....
பாசிப்பயறு போட்ட கையில் பவுன்பவுனா நெலைக்குமம்மா
தட்டாம்பயறு போட்ட கையில்
தரணியெல்லாம் கெடைக்குமம்மா ......
மொச்சப்பயறு போட்ட கையில் ஒச்சுப்பிணி ஒழியுமம்மா
மொளப்பாரி சொமந்த கையில் மும்மாரி பொழியுமம்மா
கோணாம கொணங்காம குடவனாத்து தண்ணிவழி
மொளப்பாரி போகையில் மாரியம்மா நலந்தருவா.....

Watch Sivapathigaaram Video Songs Here

Download Sivapadhikaaram Mp3 Here

Sivapathikaaram Movie

Maari Maga Maayi Amma Mari Magamayi Amma Chinnaponnu Chinna Ponnu Sivapathikaaram Sivapadikaaram Tamil Cinema Movie Songs Lyrics Sivapathikaram Sivappathikaram Vidyasagar Vishal Mamta Mohandas Raguvaran Manivannan Kanja Karupan Mathu Balakirushnan Sujatha P.vijay Yuga Bharathi Bharathidhaasan


Email PostDownload this post as PDF

Related Posts by CategoriesNo comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்