பந்தய கார்களுக்கெனவே (Race cars) தோற்றுவிக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஃபெராரி. இத்தாலியை சேர்ந்த இந்நிறுவனத்தை நிறுவியவர் என்சோ அன்செல்மோ ஃபெராரி என்பவர் (Enzo Anselmo Ferrari-1898).பத்து வயதில் தான் பார்த்த கார் பந்தயம் ஒன்று அவர் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது.விளைவு 21 ஆம் வயதில் தானும் கார் பந்தயத்தில் குதித்து 23 ஆம் வயதிலேயே சாம்பியனும் ஆனார்.தனது 47ம் வயதில் முதல் ஃபெராரி காரை உருவாக்க ஆரம்பித்த அவர் 1947-ல் தனது முதல் 125S (12 cylinder) காரோடு தொழிற்சாலையை விட்டு வெளியேறினார்.அது முதல் பந்தய கார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அநேக வகை கார்களை ஃபெராரி வெளியிட்டது.1969 முதல் ஃபெராரி இத்தாலியை சேர்ந்த FIAT நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது.மிகக் குறைந்த அளவே தயாரிக்கப்படும் விலைமிக்க இக்கார்களை இன்றைக்கும் மேற்க்கத்தியவர்கள் ஒரு status symbol-ஆக கருதுகின்றனர்.அந்த Pracing Horse Symbol-ஐ அவருக்கு அறிமுகப்படுத்தியது Countess Baracca என்பவர்.அது Good luck charm-ஐ குறிக்கிறதாம்.மேலே பச்சை-வெள்ளை-சிகப்பு இத்தாலிய தேசிய கொடியையும்,பின்ணணி மஞ்சள் அவர் பிறந்த ஊர் Modena-வின் வண்ணத்தையும் கொண்டுள்ளது.
கீழே ஃபெராரி தொழிலகத்திலிருந்து சில படங்கள்.
Click on the picture to enlarge.
Download this post as PDF
No comments:
Post a Comment