உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, January 24, 2007

பாஸூக்கு டிமிக்கி கொடுக்க Boss Key
















காகம் உட்கார பனைமரம் விழுந்த கதையாய் அப்போது தான் சிறிது ரிலாக்ஸாக வேறு வெப்சைட் பக்கம் சென்றிருப்பீர்கள் அல்லது ஒரு கம்யூட்டர் கேம் like சாலிடர், மைன்ஸ்வீப்பர்,பின்பால் ஆட அது பக்கம் போய் இருப்பீர்கள்.வசமாய் சொல்லி வைத்தது போல் அப்போது தான் உங்கள் பாஸ் உங்கள் பக்கம் வருவார்.அது நேரம் வரை நீங்கள் பட்ட பாடு அவருக்கு தெரியாது.இந்த நொடிதான் அவருக்கு புரியும். கம்மென்றிருப்பாரா கன்னா பின்னாவென நிற்பாரா அதெல்லாம் உங்கள் அதிஷ்டம்.

இது போன்ற நேரங்களில் எஸ்கேப் ஆவதெற்கெனவே ஒரு சில மென் பொருள்கள் உள்ளன. அவை பாஸ் கீ (Boss Key) மென்பொருள்கள் எனப்படுகின்றன. ஒரு முன் குறிப்பிட்டு வைத்துள்ள கீபோர்ட் கீயை பட்டென அழுத்தினால் போதும் உங்கள் லீலைகளை பட்டென மறைத்துவிடும் அந்த மென்பொருள்.ஆமாம் விவகாரமான விண்டோஸ் பக்கங்கள் எல்லாம் ஓடிஒளிந்து கொள்ளும்.:) அதற்கு பதிலாய் பாவமாய் சில எக்ஸெல் அல்லது வேர்ட் பக்கங்களை
காட்டும்.

கீழே சில இலவச Boss Key மென்பொருள்களை காணலாம்.சரியாய் இறக்கம் செய்து கணிணியில் நிறுவி நன்றாய் ஓரிரு முறை சோதனை செய்து பார்த்து விட்டு உங்கள் திருவிளையாடல்களை ஆரம்பியுங்கள்.(நினைவிருக்கட்டும் இம்மென்பொருள்களால் உங்கள் கணிணி மற்றும் புராக்ஸி செர்வர்களில் (Proxy Server) பதியும் வரலாற்று தடச் சுவடுகளை (History Traces and logs ) மறைக்க இயலாது.).

ஒரு BossKey-யும் இல்லாவிட்டாலும் Alt-ஐயும் Tab-ஐயும் சேர்த்து தட்டுதல் பட்டென ஒரு விண்டோவை மறைக்க அவசரத்துக்கு நல்லொரு தெரிவு.Alt+F4 விண்டோவை பட்டென மூடிவிடும்.

Boss Key freewares மென்பொருள்கள்

BossKey http://keir.net/bosskey.html
Hocus Pocus http://ferruh.mavituna.com/article/?590
Quick Hide http://www.cronosoft.com/download/qhw/
Window Hide Tool http://www.window-hide.com/
EfreeSoft Boss Key http://www.efreesoft.com/modules/news/article_20688.htm


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



1 comment:

Anonymous said...

This tool worked the best for me! Works perfectly on VISTA too and hides also tray icons
Anti-Boss Key - All in one bosskey application. Hide windows quickly.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்